சொல்லத் துணிந்தேன்—55

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இதுவரை காலமும் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமனதுடன் செயற்படவில்லை என்று விமர்சிக்கும் இந்தப் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன், இந்த இழுபறியில் இருந்து விடுபடுவதற்கான இரு வழிகளையும் பரிந்துரைக்கிறார்.

மேலும்

பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று)

இந்தியாவின் மூத்த சமூக விடுதலைப்போராளியான “பெரியார்” ஈ.வே.இராமசாமி அவர்கள் பற்றிய புரிதல் இலங்கை தமிழர் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்பது பலரது அவதானம். இலங்கைத் தமிழருக்கு புரியாத பெரியாரை இங்கு தொடராக பேச முயல்கின்றனர் விஜி/ஸ்டாலின்.

மேலும்

நில்! கவனி!!

கொவிட் 19 பலருக்கும் பலவிதமான அனுபவங்களை தந்திருக்கிறது. நகரத்துவாசிகள் சிலரை கிராமத்தை, அதன் வளத்தை நோக்கி அது ஈர்க்க வைத்திருக்கிறது. அப்படியாக தமது விவசாய நிலங்களை திரும்பிப்பார்க்க வைத்த சிலரது அனுபவங்கள் இவை.

மேலும்

காலம் சென்ற கமலா அக்கா. உள் நின்றியக்கிய சக்தி

கமலா ரீச்சர் அதிபராகப் பணியேற்ற காலம் மிக மிக நெருக்கடியான காலமும் கூட. தமிழ் இளைஞர்களைத் தேடி இராணுவமும் பொலீஸும் திரிந்த காலம், புலனாய்வாளர் தமிழ் இளைஞரை மோப்பம் பிடித்து திரிந்த காலம். துடிப்பும் வேகமும் மிகு உணர்ச்சியும் கொண்ட சென்ட் மைக்கெல் மாணவர்களைத் தாய்க்கோழி தன் சிறகுக்குள் வைத்து பருந்துகளிடம் இருந்து பாதுகாப்பது போல அவர் பாதுகாத்தார். எத்தனையோ சவால்களை அவர் சந்தித்தார். தந்திரோபாயங்களைக் கையாண்டார் துணிவோடு பல படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்.

மேலும்

மட்டக்களப்பு: செயற்கைப் பாதமும் செயலிழந்த சிகிச்சை நிலையமும்

போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அவயவங்களை இழந்தவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, பின்னர் வைத்தியசாலையால் உள்வாங்கப்பட்ட செயற்கை கால் பொருத்தும் நிறுவனம், கிட்டத்தட்ட செயற்படாத நிலையை எட்டியுள்ளது. அதனால், முன்னாள் போராளிகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (16)

அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், தனது முதல் நியமனம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். தன்னை வழி நடத்த தனது ஆசான்கள் எடுத்த ஒன்றுக்கொன்று எதிரான முடிவுகளையும் அவர் விபரிக்கிறார்.

மேலும்

அநகாரிக தர்மபாலவின் கோட்பாட்டை மார்க்ஸிசத்துக்கு நெருக்கமானதாக காண்பித்தவர்கள்

தனது புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் என்னும் இந்தத் தொடரின் 9வது பகுதியில் சிவலிங்கம் அவர்கள் அநகாரிக தர்மபாலவின் கோட்பாடு எவ்வாறு இன்றைய அரசின் கொள்கையாக மாறிவருகின்றது என்பதை விளக்குகிறார்.

மேலும்

ஆயிரம்: கணக்குக் காட்டும் கபடத்தனங்களும் கண்டடையும் வழிமுறைகளும்

தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. அதன் பின்னணி குறித்து விளக்குகிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

கிளிநொச்சி அபிவிருத்திக் குறைகள்

இலங்கையின் இறுதிக்கட்டப் போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கிளிநொச்சி. அங்கு துரித அபிவிருத்தி தேவை என்று அரசாங்கம் உட்பட பல தரப்பினராலும் கடந்த கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசப்பட்டே வருகின்றது. ஆனால், அது பேச்சில் மாத்திரமே இருக்கிறதோ என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்