“பிள்ளையானின் கைது, முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அதற்கான விசாரணைகள் எல்லாம் ஏனைய தமிழ் அரசியற் சக்திகளுக்கு உள்ளுர விடுக்கப்பட்டதொரு எச்சரிக்கையாகும். குறிப்பாக வடக்கிலுள்ள முன்னாள் ஆயுதம் தாங்கிய தரப்புகளுக்கு.
பேராசிரியர் ரவீந்திரநாத்தின் விடயத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றால், அதையும் விடப் பாரதூரமான கொலைகள், கடத்தல்கள், குற்றச்சாட்டுகளோடு சம்மந்தப்பட்ட ஏனைய அரசியற் தரப்பினர்களும் (முன்னாள் இயக்கத்தினரும்) தப்ப முடியாது என்றுதானே அர்த்தமாகும்.”