உச்சி முகர்ந்து

மன்னாரைச் சேர்ந்த ஜெ. மதிவளனின் “உள்ளச்சிதறல்கள்” என்ற கவிதை நூலுக்கு கருணாகரன் எழுதிய முன்னுரை இது. நமது சூழலில் ஒரு கவிஞரின் வளர்ச்சிப்போக்கு எப்படி அமையும் அதில் தூண்டலை ஏற்படுத்துபவை எவை என்று விபரிக்கிறார்.

மேலும்

பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் 

பாரிஸ் நகரில் கடந்தமாத இறுதி நாட்களில் நடந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வின் ஒரு அமர்வின் போது இடம்பெற்ற சில விமர்சனங்கள் பற்றிய ராகவனின் பார்வை இது. அந்த நிகழ்வில் விமர்சனங்களை முன்வைத்த சிலரது நடவடிக்கைகளுடனும் அவர் முரண்படுகிறார்.

மேலும்

மட்டுநகரின் ஜெயாலயா இசைக்குழுவும் கவிஞர் எருவில் மூர்த்தியும்

ஐம்பதுகளின் இறுதியில் வன்செயலில் கண்பார்வையை இழந்தவர் கவிஞர் எருவில் மூர்த்தி. ஆனால், மட்டக்களப்பு ஜெயா இசைக்குழுவுக்காக கேட்கப்பட்ட போது, 70 களில் இலங்கையில் அறிமுகமான மேலைத்தேய உடைக்கலாச்சாரத்தை காதுகளால் கேட்டு, அகக்கண்ணால் புரிந்து அவர் பாடல் எழுதியுள்ளார். அவருடனான அந்த உன்னத அனுபவத்தை இங்கு பகிர்கிறார் கோவிலூர் செல்வராஜன்.

மேலும்

கனகர் கிராமம் (அங்கம்-18)  ‘அரங்கம் ‘ தொடர் நாவல்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 18.

மேலும்

முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள்

புலம்பெயர் தமிழர் இலக்கியங்கள் பல தமக்கு புதிதான ஒரு திணையில் தாம் அனுபவித்தவற்றை பேசுகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியான மந்தாகினியின் “இரை தேடும் பறவைகள்” என்ற கவிதை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.

மேலும்

செ. யோ : எல்லாக் கரைகளையும் தழுவியோடும் நதி

அண்மையில் காலமான பேராசிரியர் செ. யோகராசா பன்முகத்திறன் கொண்ட ஒரு ஆளுமை. பழக்கத்தில் மென்மையானவர் கொள்கையில் ஆழமானவர். சில திட்டங்களில் அரங்கத்தோடு இணைந்து பணியாற்றியவர். அன்பு நெஞ்சினர். வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் அனைத்து தமிழ் பேசும் உறவுகளால் இன, மத பேதம் கடந்து விரும்பப்பட்டவர். அவர் பற்றி அரங்கத்துக்காக செய்தியாளர் கருணாகரன் எழுதிய அஞ்சலிக்குறிப்பு இது.

மேலும்

கறுப்பு நிறத்தவள்தான் நான்

“குறையில்லா மெய்ப்பொருளை
சிறு பிழையாகக் காண்போரே
நிறமெனக்குச் சுமையில்லை
மனித உளம்சாரா அழகில்லை” என்ற ஆதங்கத்தை வெளிப்படையாய் பேசநினைக்கும் இவள் தான் கறுப்பாய் இருத்தல் ஒரு பாவமில்லை என்கிறாள்.

மேலும்

தீட்டு (கவிதை)

தீட்டு என்ற பெயரில் பெரும்பாலும் பெண்தான் அடிமை கொள்ளப்படுகிறார்கள். அதனால், தீட்டைத்தீட்டாக்கி விடு என்கிறது துசாந்தினியின் இந்தக்கவிதை.

மேலும்