வரி -வலி: பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்…..!(வெளிச்சம்: 049)

“கூட்டாளிகள் பொதுவாக ஒரே பண்பை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்போதுதான் ஒத்தோடமுடியும்.  அந்த கூட்டாளி அரசியலையே அநுரகுமார அரசாங்கமும் செய்கிறது. இது மாற்றத்திற்கான வழியல்ல. அமெரிக்க வரிவிதிப்பில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும் இது அவசியம். இல்லையேல் நாடு மற்றொரு பொருளாதார மந்தத்தை சந்திப்பதது தவிர்க்க முடியாதது மட்டும் அன்றி , 2028 இல் கடன்களை மீளச்செலுத்தல் என்பதும் வெறும் கனவாகவே இருக்கும்.”

மேலும்

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

NPP  அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக.
 
ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

மேலும்

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)

சர்வதேச  மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்..  இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை  சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.

மேலும்

‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன?

கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்காக இந்தத்தடவை பயன்படுத்தப்படும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஆரம்பம் என்ன? அது யாருக்குச் சொந்தம். கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்களின் ஆய்வு.

மேலும்

வரவுசெலவுத்திட்டம்: பொருளாதார அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…!(பகுதி 2) -வெளிச்சம்:047

“அமெரிக்க, சீன, இந்திய உறவில் அரசு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்ற நெருக்கடியில் தண்ணீருக்கால் நெருப்பை கொண்டுபோகவேண்டியதாக அநுர ஆட்சியின் நிலை உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 159 பேரைக்கொண்டிருந்தாலும் இந்த சவால்களை சமாளிக்க கூடிய பலமான ஒரு அரசாங்கமாக அது இல்லை.”

மேலும்

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?

‘ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘  ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’  ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில்  வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய  திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள். 

ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும்  மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. ‘

மேலும்

வரவு செலவுத் திட்டம்: பொருளாதார அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…!(வெளிச்சம்: 047)

“ஊழல்கள் நிறைந்த நிர்வாகம், தோல்வியுற்ற பொருளாதாரத் திட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் என்பனவற்றிற்கு இந்த நாட்டில் ஜே.வி.பி. 1970 களில் இருந்து ஏதோ ஒரு வகையில் பொறுப்பாக இருந்துள்ளது. இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளாதவரை தங்களை தவிர்த்து கடந்த கால ஆட்சியாளர்களை தனியாக குற்றம் சாட்டுவது  யுத்தத்திற்கு பின்னரான காலத்திற்கு பொருத்தமானதாக இருந்தாலும் அதற்கு முந்திய அரை நூற்றாண்டு காலத்திற்கு ஜே.வி.பி. க்கும் இந்த இனவாதத்திலும், போரிலும், பொருளாதாரதிட்டங்களின் தோல்வியிலும், பொறுப்பற்ற தலைமைத்துவத்திலும் பங்குண்டு.”

மேலும்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! கூட்டுக்கு அங்கலாய்க்கும் கூடிழந்த போலித் தமிழ்த் தேசியக் கட்சிகள். (சொல்லித்தான் ஆகவேண்டும்- சொல்-36)

இனிமேல் தமிழ் மக்களுக்குத் தேவை என்னவெனில், ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ‘போலி’ ஒற்றுமையோ அல்லது இப் ‘போலி’ த் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் திருத்தும் முயற்சிகளோ அல்ல.
 இதற்கு மாற்றீடாக, காலம் எடுக்கும் என்றாலும் கூட – கடினமான பணிதான் என்றாலும் கூடப் ‘போலி’த் தமிழ்த் தேசிய உளவியலிலிருந்து விடுபட்டதும் – ‘வாக்குப்பெட்டி’ அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்காததுமான முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கே முன்னுரிமை கொடுத்து அர்ப்பணிப்புடனும் – ஆளுமைத் திறனுடனும் – வெற்றிக் கனிகளை வீழ்த்தும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியதுமான ஒரு புதிய மாற்று அரசியல் அணியின் உருவாக்கமே உடனடித் தேவையாகும்.

மேலும்

‘மூன்றாவது கண் மற்றும் கரை தொடும் அலைகள்’

மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர். இரா. மேரியனின் ‘மூன்றாவது கண்’, ‘கரை தொடும் அலைகள்’ எனுமிரு கவிதை நூல்களின் வெளியீடு 16.02.2025 அன்று மட்டக்களப்புத்தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘மூன்றாவது கண்’ நூல்பற்றி செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.

மேலும்

புதிய தமிழரசு: அப்புக்காத்து அரசியலுக்கு முடிவு கட்டுமா….?(வெளிச்சம்: 046)

“தமிழரசுக்கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கில் நால்வரும், வடக்கில் இருவரும் ‘புதிய தமிழரசு’ அமைவதில் உடன்பாடுடையவர்களாக இருக்கின்றனர் என தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த்தேசியவாதியின்  வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது. சுமந்திரன் அணியைச் சேர்ந்த சாணக்கியன், சத்தியலிங்கத்தை தள்ளி வைத்து இந்த திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன. கிழக்கின் தெற்கு எல்லையைச்சேர்ந்த P2P செயற்பாட்டாளரும், தமிழரசுக்கட்சி தந்தையின் பேரனும் இந்த திரைமறைவு முயற்சிகளில் முக்கியமானவர். இவ்வாறு புதிய தமிழரசுக்கு பின்னால் மூத்த புலிகளும், தாயக, தமிழக, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்த தமிழ்த்தேசியவாதிகளும், பக்தர்களும் இருக்கிறார்கள். தமிழரசு தந்தையின் பெயரை கட்சிப்பெயரில் சேர்த்துக்கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்.”

மேலும்

1 2 3 34