புலிகளின் போராட்டம் பெற்றுத் தந்தது என்ன???(சொல்லித்தான் ஆக வேண்டும்-சொல் – 58)

“பிரபாகரன்+பிரேமதாசா+அமெரிக்கா மூன்றினதும் நலன்கள் ஒரு புள்ளியில் இணைந்ததால் பிரபாகரன் அமெரிக்காவின் ‘கைப்பொம்மை’யாகவும் பிரேமதாசவின் ‘கைத்தடி’யாகவும் மாறினார். அதன் மூலம் அமெரிக்காவிடமிருந்தும் பிரேமதாசாவிடமிருந்தும் ஏராளமான பணமும் ஆயுதங்களும் இந்திய அமைதிகாக்கும் படையினருடன் போர் தொடுப்பதற்காகப் பிரபாகரனுக்குக் கிடைத்தன. சுருங்கச் சொன்னால் பிரபாகரன் தன்னுடைய சுய தேவைக்காகத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒரு ‘கூலிப்படை’யாக (Mercenary ) மாற்றினார்.
 இந்தியாவை இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாகக் கருதி இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை உறுதியுடன் ஆதரித்தமைக்காகவே அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டார். அமிர்தலிங்கத்தின் கொலை மரணம் பிரேமதாசா+பிரபாகரனின் ஒரு கூட்டுச்சதியாகும்.”

மேலும்

நாமல்: மொட்டு கட்சியின் எதிர்காலம் (?)-(மூன்றாவது கண்:XXXI)

“நாமல் ராஜபக்ச தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 75 ஆண்டுகள் அரசியல் ஆணிவேரைக்கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். இலங்கை படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலி களுக்கும் இடையிலான உள்நாட்டு போரில் ராஜபக்சாக்களின் அரசியல் தலைமைத்துவம்  போர்வெற்றி வரை நீண்டகாலம் களத்தில் நின்று போராடிய ஒன்று. “பயங்கரவாதத்தில்” இருந்து சிங்கள தேசத்தை மீட்டவர்களாக தென்னிலங்கை சிங்கள மக்களும், பௌத்த பீடங்களும் கருதுகின்றனர். இந்த மனநிலையின் வெளிப்பாடே  என்.பி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் நுகேகொட கூட்டத்தில் கூடிய மக்கள் கூட்டமும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அநுராதபுரத்தில் கூடிய மக்கள் கூட்டமும் எமக்கு சொல்கிறது.”

மேலும்

வைகறை: கனவாகிப்போன ஈழப்போராட்டத்தின் மெய்ப்போராளி 

“நான் உணர்ந்த மாதிரியே வைகறை தன்னை எளிமையானவராகவே வைத்திருந்தார். வாழ்க்கையின் லௌகீகத் தேவைகளில் தன் வாழ்க்கையின் அடிப்படைகளை அடகு வைக்காமல், தனக்குப் பிடித்த இலட்சிய வழிகளில் பயணித்தார். இளமைக்காலத்திலேயே லட்சிய வழியில் பயணிக்கும் ஒருவருடைய சமூக அடையாளம் துலக்கமாக இருக்கும். பதிலாக அவருடைய வாழ்க்கையோ நெருக்கடிகளால் சூழப்பட்டு விடும். இலட்சிய வாழ்க்கைக்கு எப்போதும் எதிரானது, லௌகீக வாழ்க்கை. என்பதால்தான் இலட்சிய வாழ்க்கையைத் தேர்வு செய்கின்றவர்களிற் பலருடைய வாழ்க்கையும் நெருக்கடிகள் நிறைந்ததாக இருப்பதுண்டு. நான் அறிந்த வரையில் தோழர் வைகறையுடைய வாழ்க்கையும் அப்படித்தான். அவருடைய பணிகளால் பொதுப்பரப்பில் அவர் அறியப்பட்ட அளவுக்கு அவருடைய வாழ்க்கை ஒன்றும் மேம்பட்டதாக, வசதி, வாய்ப்புகளோடு இருந்ததாக இல்லை.”

மேலும்

ஜனநாயகம் கோட்பாடல்ல நடைமுறை…! (மூன்றாவது கண்: XXX)

“சிறுபான்மை கட்சிகள் பாராளுமன்றத்திலும், ஊடகச்சந்திப்புக்களிலும் ஆங்காங்கே பட்டும் படாமலும் சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தாலும் தெளிவான, கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கைகள்  வெளி வந்ததாக  இல்லை. இது சிறு பான்மை கட்சிகளின் ஒரு நழுவல்போக்கையும், மறைமுகமாக இந்த அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளை பெரிது படுத்தாது “சுய அரசியல் பயன்பாடு”  இலக்கை அடையும் வகையில் மறைத்து வைத்து செயற்படுகின்றனவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.”

மேலும்

காணாமல்போனவர்கள் காணாமல் போனவர்களே;  ஜனநாயகத்தில் நியாயத்தின் கதி 

“1990 செப்டம்பர் 8 ஆம் திகதி வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் உள்ள எனது அலுவலகத்தில் வைத்து, அன்றைய கிழக்கிலங்கை கட்டளைத் தளபதி ஜெனரல் கெரி டி சில்வா கூறிய ‘அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள், அவர்களைப் பற்றிக் கேட்காதீர்கள்’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 

துரதிர்ஷ்டவசமாக,  நீதியரசர் பாலக்கிட்ணர் தலைமையிலான கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இந்த நடவடிக்கை குறித்து வாக்குமூலமோ அல்லது சாட்சியமோ அளிப்பதற்கு இவர் ஒருபோதும் அழைக்கப்படவில்லை.”

மேலும்

வாழ்வோரும், இறந்தாரும், காணாமல் போனோரும் 

“நவீன சூழலில், ஒரு பௌத்த நாடு என்ற ரீதியில், இலங்கையின் அரசாங்கம் கொடைத்தன்மை (தான), ஒழுக்கம் (சீல), பிறர் நலன் பேணுதல் (பரிச்சாகா), நேர்மை (அஜ்ஜவ), மென்மை (மத்தவ), சுயக்கட்டுப்பாடு (தப), கோபமின்மை (அக்கோத), வன்முறையின்மை (அஹிம்சா), பொறுமை (காந்தி) மற்றும் எதிர்ப்பின்மை/ஒத்திசைவு (அவிரோதன) ஆகிய பண்புகளைப் பின்பற்றும் கடமையைக் கொண்டுள்ளது.”

மேலும்

வாருங்கள்! வாசிப்போம்! எழுதுவோம்!- (பகிர்வுகள்-பகிர்வு – 18)

“இன்று உலகம் முழுவதும் பழமையையும் பாரம்பரியங்களையும் நோக்கி நகர்கிறது. நவீனத்துவத்தில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. டென்மார்க் நாட்டில் வாசிப்பும் மாற்றத்தைக் காணத்தொடங்கிவிட்டது. அங்குள்ள நூல்நிலையங்கள் ‘முதுசொம்’ களின் கூடாரமாகின்றன. புத்தகங்களை வாசிக்க முன்னர் உன் முதுசொம்களிடமிருந்து அனுபவத்தைப்படி – அனுபவத்தைப்பெறு என்ற விடயம் மேலெழும்பிவிட்டது. இப்போது புத்தகங்களுக்குப் பதிலாக முதுசொம்களைப் படிக்கின்ற முறைமை வளரத்தொடங்கி விட்டது.”

மேலும்

அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான ஜனநாயகத் தெரிவுகளும் 

“ஜெகான் பெரேராவின் இந்த உரை கடந்தகாலக் கசப்புணர்வுகளில் இருந்து விடுபட்டு, நடைமுறைச் சாத்தியமான அரசியலமைப்புத் தீர்வுகளின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் அரவணைக்கும் ‘ பன்மைத்துவ ஜனநாயகத்தை’ இலங்கையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப் பகுதியில் உச்சபட்சக் கோரிக்கைகளுக்காக காத்திருந்து இருக்கின்ற வாய்ப்புகளையும் இழப்பதை விட 13 வது திருத்தம் போன்ற நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்புக்களை பயன்படுத்திப் படிப்படியாக அதிகாரங்களபை் பெற முயற்சிப்பதே சாணக்கியமான அணுகுமுறை என்பதையும் அதன் பிரதான செய்தியாகக் கொண்டிருக்கிறது.”

மேலும்

வேரும் முகமும் – மருதுவின் கலையுலகம்

ஓவியர் மருதுவுக்கு கனடா இலக்கியத்தோட்டத்தின் இந்த ஆண்டுக்கான (2026) இயல் விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் வேரையும் முகத்தையும் இணைத்து தன்னுடைய ஓவியங்களை உருவாக்கியவர் மருது. ஓவியத்தில் மட்டுமல்லாமல் சினிமா, இலக்கியம் போன்ற பிற துறைகளிலும் மருதுவின் பங்களிப்புகள் உண்டு. இந்தக் கட்டுரை மருதுவுடனான கருணாகரனின் அறிமுகத்தையும் அவதானத்தையும் வெளிப்படுத்துகிறது. இயல் விருது பெறும் மருதுவுக்கு வாழ்த்துகள்.

மேலும்

அ.அமிர்தலிங்கம்  99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

“அவரது நீண்ட அரசியல் பயணமானது பதவிகளால் மட்டும் அலங்கரிக்கப்பட்ட -தாயிருக்கவில்லை. சாத்வீக போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகங்கள், ஊர்வலங்கள்,
கறுப்பு கொடியேந்தல்கள், கைதுகள், சிறைவாழ்வுகள், அஞ்ஞாதவாசங்கள், துன்பங்கள், துயரங்கள் என்பவற்றால்  நிரம்பியது.”

மேலும்

1 2 3 189