ஏ.பீர் முகம்மது எழுதிய ‘தைலாப்பொட்டி’ 

“புதியகோலத்துடன் வித்தியாசமான உருவம் – உள்ளடக்கங்களுடனும் உத்தியுடனும் நண்பர் பீர்முகம்மதுவின் ‘தைலாப்பொட்டி’ வெளிவந்துள்ளது. ‘மண்ணின் மொழியில் மக்களின் கதைகள்’ என மகுடமிட்டு வந்துள்ள ‘தைலாப்பொட்டி’க் கதைகள்யாவும் பருவமழை வயற்காட்டு மண்ணில் முதன்முதலாக விழும்போது எழும் புழுதிவாசம்போல மண்வாசனை கமழுமாறு பின்னப்பட்டுள்ளன.”

மேலும்

வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா?

வடக்கின் சுற்றுலாவை பல வகையில் விருத்தி செய்யலாம் –  செய்ய வேண்டும். இலங்கையின் பிரதான வருவாயில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். அதற்கு வடக்கு மாகாணமும் தாராளமாகப் பங்களிக்க முடியும். சம நேரத்தில் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும்.
 
ஆனால், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கின் சுற்றுலாத்துறைக்கென சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது குறித்த சிரத்தையைக் காணவும் முடியவில்லை. இது புதிய அரசாங்கத்தின் முதலாவது பாதீடு என்பதால், அடுத்த ஆண்டுகளில் இதைக் குறித்த அக்கறைகள் மேலெழக் கூடும். அதைக்குறித்த சிந்தனை இருக்குமானால், எதிர்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்.

மேலும்

அழகு குணசீலனின் “கறுப்பு நட்சத்திரங்கள்”

அழகு குணசீலன் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட கதைகளின் மாந்தர்கள், சூழல், கதைக்களம் என்பவை வேறுபட்டவைகளாக இருந்த போதிலும் குணசீலனுக்குள்; இருந்த மானுட நேசிப்பின் காரணமாக ஒவ்வொரு கதையின் பாத்திரத்தினுள்ளும், கதைக்களத்தினுள்ளும் தன்னை அடையாளம் கண்டிருக்கின்றார். இந்த அடையாளம் காணல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக யதார்த்தத்தின் மீதும் அந்த யதார்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அனுபவத்தின் மீதும் அவருக்கிருந்த உறவாடுகையின் விளைவாகும்.

மேலும்

யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்

“அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள்   நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள். 

அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ச தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”

மேலும்

மாவையும் அம்பாறை மாவட்டமும்

‘சரி பிழைகளுக்கப்பால் தமிழரசுக்கட்சிமீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சி மீது இனிமேலும் வைக்கப்படக்கூடிய நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சியின் சகாப்தம் மாவைசேனாதிராஜாவின் மரணத்துடன் முற்றுப்பெற்றுவிட்டது. இனித்தமிழ் மக்களின் தேவை தமிழர் அரசியலிலும் ஒரு முறைமை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு (புதிய) மாற்று அரசியல் அணியேயாகும். அதற்கான இடைவெளியை மாவையின் மரணம் ஏற்படுத்தியுள்ளது.’

மேலும்

வாழும் இலக்கியங்கள்!

ஒரு சினிமாவில் நாம் காட்சியை பார்த்து, ரசித்து விட்டுவந்தால் அது சினிமாவுக்கு வெற்றியல்ல.  அது வெறும்பொழுது போக்கு விடயமாகிறது . நாம் சினிமாவையோ, நாடகத்தையோ பார்த்துவிட்டோ அல்லது புத்தகத்தை படித்துவிட்டோ அதையிட்டு நமது மனம் சிந்தித்து கிளரும்போது அதுவே அந்தச் சினிமாவை, நாடகத்தை, புத்தகத்தை படைத்தவனது வெற்றிக்கு அடையாளமாகிறது.

மேலும்

பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுக்கு மத்தியில்,  தமிழ்ப் பத்திரிகை உலகிலும் தனக்கென்று தனித்துவத்தைக் கொண்ட எஸ்.பி.சாமி ஐயா 

மரணமடைவதை பெரும்பான்மையானவர்களுடன் இணைவதாக (Joining the majority) கூறும் முதுமொழி ஒன்று இருக்கிறது. உலகில் வாழ்பவர்கள் அல்ல, காலமானவர்களே பெரும்பான்மையினர். சாமி ஐயா பெரும்பான்மையுடன் இணைந்துவிட்டார். நாங்கள் தான்  சிறுபான்மையினர். 

 சமூகத்தில் எமக்கு ஏதாவது அடையாளம் இருக்குமானால் அதற்கு காரணமானவர்களில் சாமி அவர்களும் ஒருவர். சென்றுவாருங்கள் சாமி ஐயா! உங்களை நினைத்துக் கொண்டிருப்பதை தவிர எங்களால் என்ன செய்யமுடியும்!

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல் (அங்கம் – 62)

உண்மை நிலவரங்களை உள்ளடக்கிய, ஆனால் நாவலாகத் தொடர்ந்த “கனகர் கிராமம்” அம்பாறை தமிழ் மக்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் மீள்குடியேற்றக் கனவுடன் இன்று நிறைவுபெறுகின்றது. ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் துயர் இன்னமும் தொடர்கிறது.

மேலும்

‘ராணி’திரைப்படம்: நமது நாட்டின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!

செய்தியாளர் ரிச்சர்ட் டி சொய்ஸா படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி அவரது தாயார் டாக்டர் மனோராணி சரவணமுத்து நடத்திய போராட்டத்தை பேசும் படம் ஒன்று “ராணி” என்ற பெயரில் கொழும்பில் திரைக்கு வந்திருக்கிறது. அது பற்றிய ஒரு விமர்சனம்.

மேலும்

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

பல விதமான அரசியற் தவறுகளின் கூட்டு விளைவாகவே தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளது. தையிட்டிப் பிரச்சினை மட்டுமல்ல, அதைப்போலுள்ள ஏனைய பல பிரச்சினைகளும் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறையே சரியானது. அரசியல் உபாயங்கள் பெருமளவுக்குக் கை கொடுக்காது. ஏன் அரசியல் உபாயங்கள் கைகொடுக்காது என்றால், எதன்பொருட்டும் அரசாங்கம் மக்களுடன் சூதாட முடியாது. சூதாடக் கூடாது.

மேலும்