எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! கூட்டுக்கு அங்கலாய்க்கும் கூடிழந்த போலித் தமிழ்த் தேசியக் கட்சிகள். (சொல்லித்தான் ஆகவேண்டும்- சொல்-36)
இனிமேல் தமிழ் மக்களுக்குத் தேவை என்னவெனில், ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ‘போலி’ ஒற்றுமையோ அல்லது இப் ‘போலி’ த் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் திருத்தும் முயற்சிகளோ அல்ல.
இதற்கு மாற்றீடாக, காலம் எடுக்கும் என்றாலும் கூட – கடினமான பணிதான் என்றாலும் கூடப் ‘போலி’த் தமிழ்த் தேசிய உளவியலிலிருந்து விடுபட்டதும் – ‘வாக்குப்பெட்டி’ அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்காததுமான முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கே முன்னுரிமை கொடுத்து அர்ப்பணிப்புடனும் – ஆளுமைத் திறனுடனும் – வெற்றிக் கனிகளை வீழ்த்தும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியதுமான ஒரு புதிய மாற்று அரசியல் அணியின் உருவாக்கமே உடனடித் தேவையாகும்.
‘மூன்றாவது கண் மற்றும் கரை தொடும் அலைகள்’
மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர். இரா. மேரியனின் ‘மூன்றாவது கண்’, ‘கரை தொடும் அலைகள்’ எனுமிரு கவிதை நூல்களின் வெளியீடு 16.02.2025 அன்று மட்டக்களப்புத்தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘மூன்றாவது கண்’ நூல்பற்றி செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.
புதிய தமிழரசு: அப்புக்காத்து அரசியலுக்கு முடிவு கட்டுமா….?(வெளிச்சம்: 046)
“தமிழரசுக்கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கில் நால்வரும், வடக்கில் இருவரும் ‘புதிய தமிழரசு’ அமைவதில் உடன்பாடுடையவர்களாக இருக்கின்றனர் என தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த்தேசியவாதியின் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது. சுமந்திரன் அணியைச் சேர்ந்த சாணக்கியன், சத்தியலிங்கத்தை தள்ளி வைத்து இந்த திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன. கிழக்கின் தெற்கு எல்லையைச்சேர்ந்த P2P செயற்பாட்டாளரும், தமிழரசுக்கட்சி தந்தையின் பேரனும் இந்த திரைமறைவு முயற்சிகளில் முக்கியமானவர். இவ்வாறு புதிய தமிழரசுக்கு பின்னால் மூத்த புலிகளும், தாயக, தமிழக, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்த தமிழ்த்தேசியவாதிகளும், பக்தர்களும் இருக்கிறார்கள். தமிழரசு தந்தையின் பெயரை கட்சிப்பெயரில் சேர்த்துக்கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்.”
‘நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு’- சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா ?
“தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக நீண்டகால அரசியல் அபிலாசைகளை பற்றி ஓயாது பேசுவதில் நாட்டம் காட்டி வந்திருக்கிறார்கள். மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. நீண்டகால அபிலாசையைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கலாம்.ஆனால், உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் விரைவாகவே பயனுறுதியுடைய விளைவுகளை காண்பிக்க வேண்டியிருக்கும். இது தமிழ் அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் காணப்படும் பெரியதொரு குறைபாடு. அர்ச்சுனாவின் குறும்புகளுக்கு ஒரு கூட்டம் ஆரவாரம் செய்யும் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கும் இந்த குறைபாடும் ஒரு முக்கிய காரணம்.”
மகளிர் தினம்…. (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து ஒரு நட்சத்திரம்..!)
அரபு மொழியில் ‘மகளிர் தினம் ‘ எனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட இக்கதை பிரபல அரபுலகப் படைப்பாளி சல்பா பக்கிரால் எழுதப்பட்டது. ‘மௌனத்தின் உண்மையான முக்ககாடு’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ள இச் சிறு கதையை ஜேர்மன் மொழிக்கு மாற்றம் செய்தவர் சுலேமான் தௌபிக். அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட அழகு.குணசீலனின் ” கறுப்பு நட்சத்திரங்கள்” மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளில் இதுவும் ஒன்று.
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம்
“தேசிய மக்கள் சக்தியிடம் தோல்வியைச் சந்தித்து, தமிழ் அரசியல் பின்னடைவுக்குள்ளாகிய பின்னும் தம்மை நிதானப்படுத்திக் கொள்வதில் தமிழ் அரசியற் தரப்புகள் தவறுகின்றன. இந்த நெருக்கடியை, தளர்வை, சீர்செய்வதற்கு இவை முயற்சிக்கவில்லை. பதிலாக ஒன்றையொன்று கண்டித்துக் கொண்டும், ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொண்டும் உள்ளன. இதில் இன்னும் உச்சமாகவும் சிரிப்பாகவும் இருப்பது இந்த நிலையிலும் இவை துரோகி – தியாகி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான்.”
எங்களுக்கும் காலம் வரும்!
விட்டில்களும் ஒருநாள் உயரப்பறக்கும். அப்படி பெண்களும் வீறுகொண்டு உயர்வர். உயர்ந்ததால் வீழ்ந்தாலும் அடக்குமுறை தீயை அணைப்போம் என்று அவர்கள் உறுதி கொள்கின்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்ட செங்கதிரோனின் கவிதை.
“பேய்க்கு கால் இல்லை”
பேய்க்கும் சாமிக்கும் என்ன வித்தியாசம்? சாமி நல்லதா அல்லது பேய் நல்லதா? அல்லது இரண்டும் ஒன்றா? இரண்டும் நல்லவையா?, இல்லை இரண்டும் கெட்டவையா? குழம்புபவர்களுக்கு ஒரு கதை.
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும்
“இனநெருக்கடியின் விளைவாக மூண்ட மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரும் தென்னிலங்கையில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளும் சமூகத்தில் ஆயுதங்கள் பரவலாக புழக்கத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களாகும். வன்முறைகளை தூண்டிய அரசியல் கலாசாரத்தின் விளைவுகளையே இலங்கை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்கப் போவதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி தற்போதைய நிலைவரத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை அறிவதற்கு நாமெல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்ரீலங்காவை ‘கீளீன்’ பண்ணுவது சுலபமான வேலை அல்ல.”
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா?
“வரவு செலவுதிட்டத்தில் வடக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அரசாங்கம், கிழக்கிற்கு வழங்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்.
“வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் செலவழிக்கப்படாமல், வன்னிக்கும் பகிரப்பட வேண்டும். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கின்றனர் வன்னித் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் அமைப்பினரும்.