கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

“சர்வதேச சட்டம் தனக்கு  தேவையில்லை என்றும் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு இன்று அநாவசியமான ஒரு சுமையாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறிய  வார்த்தைகள் உலகம்  வரும் நாட்களில்  எதிர் நோக்கப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறது.”

மேலும்

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை)

“1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர்  நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு  சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை  யாருக்குமே தெரியாது. 

இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும்  தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும்  அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது.”

மேலும்

வெனிசுவேலா: 21ம் நூற்றாண்டின் சோஷலிச விளைநிலம்.! (மூன்றாவது கண்: l.)

“”அமெரிக்க ஏகாதிபத்தியமும், பல்தேசிய கம்பனிகளும் மனித குலத்திற்கு பெரும் சவால் விடுகின்ற இக்காலத்தில் சோஷலிசத்தின் கடமையும், பொறுப்பும், செயற்றிறனும் புதிய வடிவில் பங்காற்ற வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது” என்ற 21ம் நூற்றாண்டின் சோஷலிசத்தின் தேவை குறித்த அறிஞர்களின் கருத்துக்கு வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோவின் கடத்தல் வலுச்சேர்திருக்கிறது.”

மேலும்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி 111 (சொல்-49    சொல்லித்தான் ஆகவேண்டும்)                            

‘திருகோணமலை மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு தமிழ்ப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியான திருகோணமலைத் தொகுதிக்கான தமிழா் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் நியமனம் முறைப்படி ஏற்கெனவே மூதூர்த்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தங்கத்துரை அவர்களுக்கு வழங்கப்படாமல் யாழ் மேலாதிக்க அரசியல் தலைமைக்கு வால் பிடிக்கும் தமிழரசுக் கட்சிக்குப் புதியவரான இரா சம்பந்தன் அவர்களுக்குத் தமிழா் விடுதலைக் கூட்டணியின் யாழ் மேலாதிக்க தோதல் நடவடிக்கைக் குழுவால் வழங்கப்பட்டது.
 உண்மையும் நேர்மையும் வெளிப்படை தன்மையும் செயற்பாட்டுத் திறனுமிக்க கிழக்கின் அரசியல் ஆளுமையான தங்கத்துரையைத் தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) ஓரங்கட்டியதுகூட யாழ் மேலாதிக்க அரசியலின் வெளிப்பாடுதான்.’

மேலும்

‘பூப்பூக்கும் ஓசை’ (சிறுவர் பாடல்கள்)-(பகிர்வுகள்-(பகிர்வு – 05))

“மகுடம் பதிப்பகத்தின் 101 ஆவது வெளியீடான சோ. அருளானந்தம் (மன்னனூர் மதுரா) யாத்த சிறுவர்பாடல்களின் தொகுப்பு நூலான ‘பூப்பூக்கும் ஒசை’யின் வெளியீடு 19.10.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

‘பூப்பூக்கும் ஒசை’ பற்றிய செங்கதிரோனின் ஒரு பார்வை”

மேலும்

அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும்

“பரந்தளவிலான கலந்தாலோசனையின்   அடிப்படையிலான தீர்வுகளை வேண்டி நிற்கும் அரசியல்,  பொருளாதார நெருக்கடிகளாக  இருந்தாலென்ன, இயற்கையின் சீற்றம்  ஏற்படுத்தும் பேரழிவாக  இருந்தாலென்ன தேசிய அனர்த்தங்களின்போது சகல தரப்புகளையும் அரவணைக்கும் அணுகுமுறை மூலமாக  நாட்டையும் மக்களையும்  மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன்  அரசியல் சக்திகள் செயற்பட முன்வராத சாபக்கேடான கலாசாரம் ஒன்று  இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்டது.”

மேலும்

அரசியல் கிரகநிலை: ஹருணி+சிறி (தரன்+நேசன்)  (வெளிச்சம்:100)

“தமிழரசுக்கட்சி இவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில். பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் இவர்களுக்கான மக்கள் ஆதரவு அல்ல, அரசாங்கம் இவர்களை பயன்படுத்தும் என்பதாகும். தமிழரசுக்கட்சி ரி.என்.ஏ. ஆக மறு பிறப்பு எடுத்தாலும் இந்த சவாலை எதிர்கொள்வது கஷ்டம்.”

மேலும்

மண்டூர் அசோகாவின் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு:  ஒரு பார்வை

இந்தத் தொகுப்பில் கோர்த்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து சிறுகதைகளில் ஐந்து சிறுவர்களின் கல்வி, அவர்களின் பாசத்துக்கான ஏக்கம், தவிப்பு, ஆசா பாசங்கள், சிறுவர் கல்வி, உரிமை மீறல்கள் ஆகியன உணர்வு பூர்வமாகப் பேசப்படுகின்றன. மூன்று சிறுகதைகளில் பெண்களின் திருமணத்துக்குப் பின்னரான பிறழ்வான பாலியல் நடத்தை, மனவெழுச்சிகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புகள், உறவுச் சிக்கல்கள் என்பவை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுகதை போர்க்கால இழப்புக்களையும் அவல வாழ்வினையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமாக விபரிக்கின்றது. ‘வேட்டை’ சிறுகதை இரு நண்பர்களின் இணைபிரியாத நட்புறவினையும் ஒருவரின் இழப்பு, மற்றவர் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வதும் வாசகரின் உணர்வுகளை உறைய வைப்பனவாக அமைகின்றது.  
இத்தொகுதியிலுள்ள கதைகளின் தெரிவு என்பது கதை ஆசிரியர் வாழ்ந்த பிரதேசத்தில் ஊடாடிய மாந்தர்களுக்கு நேர்ந்த அவலங்கள், துன்ப, துயரங்கள், வாழ்க்கைப் போராட்டங்களில் அவர் உள்ளத்தை நெகிழ வைத்த உண்மைச் சம்பவங்கள் கதைத் தெரிவுகளாகவும் பொருளாகவும் கருவாகவும் அமைந்திருக்க வேண்டும்.”

மேலும்

டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!(வெளிச்சம்:099)

“கடந்த 35 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் அரசியலில் அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. இந்த எதிர்வு கூறலில் உள்ள  உண்மை ஈழத்தமிழர்கள் இலகுவாக கடந்து செல்லமுடியாத அரசியல் தீர்க்கதரிசனம்.

மற்றைய அமைப்புக்கள், கட்சிகள் போன்று புலிக்கு பசுத்தோலை அவர் போர்க்கவில்லை. டக்ளஸின் கருத்தையே சர்வதேசமும், இந்தியாவும் கொண்டிருந்தன. தமிழ்க் கட்சிகள் தூதரகங்களின் பூட்டிய கதவுக்குள்ளும், வெளிநாட்டு சந்திப்புக்களிலும் ஒன்றையும், மக்கள் மத்தியில்  வேறொன்றையும் சொல்லி செய்யும் ‘தெப்பிராட்டிய அரசியலை’ டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை.

பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் தப்பிய ஒருவர் இன்னும் உயிருடன்
இருக்கிறார் . 

அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை கர்மா  கொலை செய்தது என்று சொல்லலாமா?”

மேலும்

‘ஈழத்துச்சிறை’ கவிதை நூல் (பகிர்வுகள்- பகிர்வு – 04)

‘இருந்தும் நான் எனது எல்லையை
கடந்தாக வேண்டும்.
நான் விரைகின்றேன்.
எல்லைக் காப்பரண் நெருங்குகிறது.
துப்பாக்கி முனை மிரட்டுகிறது
எனது கைகளை, இடுப்பைத் தட்டுகிறது.
நான் தடுக்கப்படுகிறேன்
‘நீ யார்?’
‘நான் மனிதன்’
‘எங்கே போகிறாய்?’
‘எனது தாய் நிலத்திற்கு’
‘உன் தொழில்?’
‘அடிமை தனத்திற்கு எதிராய் கவிதை எழுதுவது’
‘உன் பெயர்?’
‘தமிழன்’
பின்பு அவன் கேள்வி கேட்கவில்லை
காலையில் பத்திரிகையில் செய்தி வந்தது
ஒரு புரட்சிக் கவிஞன்
பாரிய அடிகாயங்களுடன்
பற்றைக்குள் இருந்து மீட்பு!!’

மேலும்