பெருந்தலைவர் இராஜதுரையை கொண்டாடுவோம்..!(வெளிச்சம்: 095)

“பேராசிரியர் மௌனகுரு கூறியதுபோன்று, சொல்லின் செல்வர், செ. இராசதுரையின்
இறப்பு இரங்குதற்குரியதன்று. அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. இரங்கல் வேண்டாம், கொண்டாடுவோம்.”

மேலும்

தமிழ்த்தேசிய அரசியலில்  ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு

“இப்பொழுதும் தமிழ்த்தேசியச் சக்திகளிடம் தடுமாற்றங்களே அதிகமாக உண்டு. இதற்குக் காரணம், மறுபரிசீலனைக்கான சிந்தனையும் உளநிலையும் இவற்றிடம் இன்னும் ஏற்படாதிருப்தேயாகும். ஏராளமாக விளைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளில் ஒன்றிற் கூட இன்னும் புதிய அடையாளத்தை நோக்கிய பயணச் சுவட்டைக் காண முடியவில்லை. இதனால்தான் பட்டும் படாமலும் முட்டியும் முட்டாமலும் ஒரு மாதிரியாக இவை சந்திப்புகளைச் செய்கின்றன; பேசுகின்றன.”

மேலும்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேசவாதம் அல்ல – பகுதி 11.(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-47)

“சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னரே தமிழரசுக்கட்சி தனது கட்சி சார்பான அமைச்சர் அமரர் மு.திருச்செல்வம் மூலம் இதனைச் செய்து கொடுத்திருந்திருந்தால் இன்று கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது மட்டுமல்ல அது எப்போதோ தானாகவே கிடைத்திருக்கும். கல்முனை நகரமும் தமிழர்களிடருந்து கைநழுவிப்போய் இருக்கவும் மாட்டாது. கல்முனைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் முழுக்க முழுக்கத் தமிழரசுக் கட்சியேதான்.”

மேலும்

சொல்லின்செல்வர் இராஜதுரை நினைவுகள்: ஆரம்ப கால அவரது வாழ்வு அனுபவங்களும் அவரது உருவாக்கமும்  

மட்டுநகர் தந்த மூத்த அரசியற்தலைவர், முன்னாள் அமைச்சர், சொல்லின் செல்வர், காலஞ்சென்ற செ. இராஜதுரை அவர்களின் வாழ்வு குறித்து பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் ஒரு பார்வை.

மேலும்

38வது பெண்கள் சந்திப்பு (பேர்லின்) பற்றிய ஒரு குறிப்பு

38வது பெண்கள் சந்திப்பு
ஜேர்மனி பேர்லின் நகரில் ஒக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் (24-26) தொடர்ச்சியாக நடைபெற்றது. இம்முறை பெண்கள் சந்திப்பு முழுவதும் “பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள்“ (Intersectionality) என்கின்ற கருப்பொருளின் கீழ் விடயங்கள் பேசப்பட்டன.

மேலும்

அனர்த்த முகாமைத்துவம்: எதிர்கட்சிகளின் பங்கு என்ன..?(வெளிச்சம்:094)

“இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளில் பல அனர்த்தத்திற்கு முன்னர் எழுப்பப்பட்டிருக்க வேண்டியவை. எனவே இது விடயமாக அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள பொறுப்பு கூறல் வகிபாகம் 50:50. தவறுகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி விட்டு பின்னர் பிழைபிடிப்பது அப்பட்டமான கட்சி அரசியல் நகர்வு.”

மேலும்

அரசாங்கத்தை தூக்கி வெள்ளத்தில் எறிவதற்கு இது நேரமல்ல

“அண்மைய தசாப்தங்களில் கிரமமான முறையில் மாறிமாறி  எம்மைத் தாக்கிய வரட்சியும் வெள்ளப்பெருக்கும் காலநிலை மாற்றத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட்டுவரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற அச்சந்தரும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன. அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் ஆலோசனைகள் கூறுவதில் அர்த்தமில்லை. அழிவுகள் தான் மிஞ்சும். சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக எவரும் தங்களைக் காட்டிக் கொள்வது சுலபம். முன்மதியுடனான நடவடிக்கைகளையே இன்றைய நிலைவரம் வேண்டிநிற்கிறது.”

மேலும்

என்று இனி கேட்போம் நின் தீந்தமிழ் பேச்சை!

கிழக்கின் பெருந்தலைவர் செ.இராஜதுரை அவர்களின் மறைவை முன்னிட்டு அவரது பெருவாழ்வு பற்றிய பல்வேறு  தகவல்களடங்கிய இக்கட்டுரை இன்றைய இளைஞர்களின் அறிதலுக்காக பிரசுரமாகின்றது.

மேலும்

2004 க்கு பிந்தைய மோசமான பேரழிவு: ஆட்சி சீர்திருத்த தேவை, தீராத தேசியப் பிரச்சினையால் தேசம் தொடர்ந்தும் பலவீனம்

“வலுவான நிறுவனங்கள், சமமான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய ஆட்சிமுறை இல்லாமல் நாடு மேலும் பலவீனப்படும்.
இயற்கை தெளிவான செய்தி அனுப்புகிறது.

மிக அதிக மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை ஒரு காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும்;
இன்றைய காலநிலை மாற்ற சூழலில் அது போதுமானதல்ல.
நாடு பாதுகாப்பாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்க வேண்டுமெனில்
அதிகாரம் பகிரப்படவேண்டும், பிராந்திய அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும், சமூகத்தையே மையப்படுத்த வேண்டும்.”

மேலும்

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் 

“இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை.  அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள்.”

மேலும்

1 4 5 6 7 8 175