ஜனநாயக ஆட்சி அதிகாரத்தில் சமநிலை…!(மூன்றாவது கண்: XXIII)
“இந்த நேரத்தில் இந்த நீதிமன்றங்களின் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாக பொதுமக்களால் பார்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வாதத்தை “லோஏசியா ” அங்கீகரிக்கிறது. நீதிபதிகளின் ஓய்வு வயது அரசியலமைப்பின் 107 (5) வது பிரிவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமற்ற மேலும் தற்காலிக அரசியல் அமைப்பு திருத்தம் குறித்ததாக துறைசார்ந்த நிபுணத்துவ அமைப்புக்களின் கேள்வி அமைகிறது. இதில் இன்னொரு விடயம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக கூறும் அரசாங்கம்,ஏன்? ஒரு தற்காலிக திருத்தத்திற்கு அவசரப்படுகிறது.
இலக்கிய சந்திப்பு -53 திருகோணமலை
“திருகோணமலையில் சனி ஞாயிறு இரு தினங்களிலும் முழு நாள் அமர்வாக இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் விசேட தொனிப்பொருளாக ‘பழங்குடி வேடர்களின்’ வாழ்வும் வளமும் பற்றிய பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நூல் அறிமுகங்கள், சூபிகள், LGBTQ , ஆபிரிக்க வம்சாவளியினர், அருந்ததியர் போன்ற இலங்கையில் வாழும் விளிம்புநிலை மக்கள் பற்றிய பல்வேறு உரைகளும் அவற்றைத்தொடர்ந்த விவாதங்களும் இடம்பெறவுள்ளன.”
பத்திநாதனின் ‘உத்தியாக்கள்’ மீது ஒரு உசாவல்
“இறந்துபோன முன்னோர்களையும் அவர்களது ஆவிகள் என்று நம்பப்படுகின்ற அமானுஷங்களையும் வழிபடுதலே மனித குல வரலாற்றின் முதல் வழிபாட்டு முறையாக இருத்தல்கூடும். தமிழர் மெய்யியலில் புறநானுற்றுக் காலத்து நடுகல் வழிபாட்டு முறைகளும் சூபி முஸ்லிம்களிடையே காணப்படும் கபுறு வணக்க முறைகளும் கூட அதன்பாற் பட்டனவேயாகும். அந்த வகையில் குறித்த கடலோர வேடர்களிடையே காணப்படும் ‘உத்தியாக்கள்’ வழிபாட்டின் புராதன தொடர்ச்சியை இந்நூலின் தலைப்பு பிரதிபலிக்கின்றது.”
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில் தமிழ் அணிகள்
“இரு தமிழ் அரசியல் அணிகளுக்கும் இடையே ஒரு குறைந்தபட்ச கூட்டு இணக்கப்பாடு இல்லாதபட்சத்தில் தனித்தனியான அரசியலமைப்பு யோசனை வரைவுகளை அரசாங்கம் தமிழர்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருங்கிணைப்பற்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான கோரிக்கையைாகக் காட்டுவதற்கும் வழிவகுத்துவிடும்.
இன்னமும் காலம். கடந்துவிடவில்லை. இரு அணிகளுமே ஒன்றிணைந்த வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்கு முயற்சிக்க முடியும். இல்லாவிட்டால், தங்களது திருப்திக்கு அவர்கள் தனித்தனியான வரைவுகளைத் தயாரித்து தங்களுடனேயே வைத்திருக்க வேண்டியிருக்கும்.”
போரில் தோல்வியை இராஜதந்திர வெற்றியாகக் காட்டும் டொனால்ட் ட்ரம்ப்
“ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலையும் ஈடுபடுத்தினால் தன்னால் இந்த போரில் இருந்து வெளியேற முடியாது என்பதை உணர்ந்த ட்றம்ப், ஈரானை நிபந்தனையற்ற முறையில் சரணடைய வைப்பதைத் தவிர வேறு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர வேண்டியேற்பட்டது. தனது நகர்வுகளுக்கு (எதிரியான ஈரானிடமிருந்து அல்ல) தனது நண்பனான இஸ்ரேலிய பிரதமரிடமிருந்து வரக்கூடிய இடையூறுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே ட்ரம்புக்கு இப்போது பிரச்சினையாக இருக்கிறது.”
வேலுப்பிள்ளை: உலக உதைபந்தாட்டத்தில் ஒரு தமிழ் வேர்…! (மூன்றாவது கண்: XXII)
“இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் தமிழீழ விளையாட்டு கழகம், தமிழீழ வெற்றி கிண்ணப் போட்டிகள், ஈழப்போராட்ட அரசியல் ஞாபகார்த்த போட்டிகளுக்குள்ளேயே சுழல்கின்றனர். இது வாழும் தேசங்களின் பன்மைத்துவ விளையாட்டு வாழ்வியலில் இருந்து விலகி – தாமாக ஒதுங்கியிருக்கின்ற தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மாதிரியாக அமைந்துள்ளது. இது ஈழ தேசியத்திற்கும் , வாழும் நாட்டு தேசியத்திற்கும் இடையே ஒரு குறுந்தேசியத்தை நிலைநிறுத்துகிறது. இந்த பாணியிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் சர்வதேச விடுதலைப்போராட்டங்களில் இருந்து விலகி தமிழ்த்தேசிய அரசியல் தனித்து ஓடி, ஓட்டம் முடிவடைந்து இருக்கிறது. ஆனால் அதுவல்ல முடிவடைய வேண்டிய இடம்.”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே தேசிய மக்கள் சக்தி அரசின் எதிர்காலம் தங்கியுள்ளது.
“சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளுக்கு ‘வயிற்றில் புளியைக் கரைப்பது போல்’ அவர்கள் விசாரணைகளில் விலத்திச் செல்லாதவாறு அவர்களுக்குப் பயத்தைக் காட்ட வேண்டும். ஏனெனில் நடந்திருக்கும் தாக்குதலானது மனித குலத்துக்கு எதிரான கர்ண கொடூரமானது. சட்டம் எவருக்கும் சமமானது, பொதுவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குற்றவாளிகள் எத்தரத்தில் இருந்தாலும் சட்டத்தின்முன நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இதில் அரசுக்கு எதிராக எத்தகைய சவால்கள், எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் நேர்ந்தாலும் அதற்கு இடம் கொடுக்காது, ‘பனங்காட்டு நரி சலசலப்பு அஞ்சாது’ என்ற உறுதியோடு, அஞ்சாமல் செயற்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கட்டி எழுப்புவதற்கான வழியாக அமையும்.”
தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 2
“பலமான தலைமைத்துவம் இல்லாதபோது, எதிர்த்தரப்புக்கு ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ (Divide and Rule) யைச் செய்வது மிகவும் எளிதாகிவிடுகிறது. ஈழத்தமிழர் அரசியற் சூழலில் அரசியல் கட்சிகள் உடைக்கப்படுவதும் உடைவதும் மிகச் சாதாரணமாகி விட்டது. இது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, நம்பிக்கையீனத்தையும் தருகிறது. தேர்தல் காலங்களில் சுயேச்சைக் குழுக்களும் குட்டிப் பிரிவுகளும் பெருகுவதும் தற்செயலானவை அல்ல. இதற்குப் பின்னணியாக தமிழ் அரசியல் தரப்பினரின் அறிவீனத்திற் தொடங்கி, ஒடுக்கும் அரசியற் தரப்புகளின் சூழ்ச்சி வரையில் உண்டு. இது தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் நிலைப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் சிதைக்கிறது. கூடவே தமிழ் மக்களுடைய ஜனநாயக அரசியற் பலத்துக்கான அடையாளமாக இருக்கும் வாக்கு வங்கியையும் சிதறடித்து விடுகிறது. அரசியல் ரீதியாக இதைச் சிதைப்பு உத்தி (Fragmentary Strategy) என்பர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) அரசாங்கம் குறைத்து விடுகிறது. இது ஒடுக்குமுறைக்கு வாய்ப்பான இன்னொரு வலுவான உத்தியாகும். இதற்குத் தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் மக்களும் பலியாகிக் கொண்டிருக்கும் துயர நிலை நீடிக்கிறது.”
ஈஸ்டர் தாக்குதல்: சட்டம் தன் கடமையைச் செய்கிறதா…? (மூன்றாவது கண்: XXI)
“சந்தேக நபர்கள், குற்றவாளிகள் அரசாங்கத்தின் அல்லது அதன் நீதி, நிர்வாக கட்டமைப்பின் அடிமைகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். மனித நேயத்துடன் நடாத்தப்பட வேண்டியவர்கள். சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத் தீர்ப்பினால் உறுதிசெய்யப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படமுடியாதவை. உலகில் சட்டத்தின் ஜனநாயக ஆட்சியை அளவிடும் குறிகாட்டிகளுள் இதுவும் ஒன்று. இலங்கையில் கைதிகள், குற்றவாளிகள் மீது அரச அதிகாரிகளின் அத்து மீறல்கள், கடமை துஷ்பிரயோகங்கள் குறித்து அண்மைக்காலங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை ஊடகங்கள் இவற்றை வழமையான சம்பவங்களாக மௌனித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றன. இதே மௌனத்தையே இந்த ஊடகங்கள் யுத்த காலத்திலும் செய்து சுரேஷ் சாலேக்கு வெடிக்கொளுத்தினர்.”
சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்
“முறையான ஆதாரங்களின் அடிப்படையில் செயற்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட அரசியல் தளங்களை அல்லது சர்வதேச நெருக்குதல்களை திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச புலனாய்வுப் பிரிவினரை இலக்கு வைப்பதாக எதிரணி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
எது எவ்வாறிருந்தாலும், அரசியல்வாதிகள் ஒரு சூத்திரதாரியைப் பாதுகாப்பதற்காகவே அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று மக்கள் பரவலாக நமபுகிறார்கள். இதுகாலவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளும் இதற்கு காரணம்.”
