தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 3)
“இலங்கை அரசியலில் தோற்றம் பெறும் அடிப்படை மாற்றங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் புதிய அணுகுமுறைகளை வேண்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான வழிமுறைகளை புதிய வழிகளில் படிப்படியான மிகவும் விட்டுக் கொடுக்காத, சாத்தியமான கொள்கைகளை நோக்கிச் செயற்பட வேண்டும். அதேவேளை ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார வளர்ச்சிக் கட்டுமானத் திட்டமிடுதலில் தமக்கான பங்கைச் செலுத்தும் புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை யாவற்றிற்கும் சமாதான சகவாழ்வே அடிநாதமாக அமைதல் அவசியம். “
தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 2)
“பிரதான அரசியல் கட்சிகள் மிகவும் வெளிப்படையாகவே மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது தமிழ் அரசியல் ஒரு வகை இறுக்கமான போக்கை நோக்கி ஏன் செல்கிறது? தமிழ் அரசியலில் பிரிவினைவாத அரசியல் என்பது அதன் உட் பொறிமுறைகளில் ஆதிக்கம் செலுத்துவதால் இக் கட்சிகளால் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்த முடியாது. பதிலாக இப் பிரிவினரின் அரசியல் என்பது இவற்றிற்கு எதிராக செயற்படும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கே மறைமுகமாக உதவுவதை மிகவும் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது.”
தமிழ் அரசியலில்13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் …..?(பகுதி 1)
“கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த இனவாதம் எவ்வாறு சிங்கள மக்களின் வாக்குகளைக் கொள்ளை அடித்து அதிகாரத்தை ஜனநாயக விரோத நிலைக்குத் தள்ளி அதனால் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்தின் பின்னணிகளைப் புரிந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்களோ, அதே போலவே தமிழ்க் குறும் தேசியவாதத்தை முன்வைத்து தமிழ் மக்களில் பெரும்பகுதி மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்தது போலவே தமிழ் மக்களில் பெரும்பான்மை பிரிவினரும் சரியான தருணத்தில் விழித்துக் கொண்டார்கள்.”
ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
“கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அவர்களில் ஒருவர் போட்டியிட்டிருந்தால் அநுரா குமார திசாநாயக்க நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கமாட்டார். மக்கள் செல்வாக்கை இழப்பதற்கான சகல அம்சங்களும் தன்னகம்பாவத்தில் இருக்கிறது என்பதற்கு அரசியலில் விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பிரகாசமான உதாரணங்கள்.”
சிறிதரன் -சுமந்திரன்: கள்வன், பொலிஸ் விளையாட்டு…..!(வெளிச்சம்:038)
“இங்கு தமிழரசுக்கட்சியின் கொள்கை என்ன? பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏற்றுக்கொள்கிறதா ? இல்லையா ?அதனடிப்படையில் தமிழ் டயஸ்போரா அமைப்புக்களை தடை செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா? அச்சட்டத்தின் கீழ் சிறிதரன் விமானநிலையத்தில் அசௌகரியங்களை சந்தித்ததை ஏற்றுக்கொள்கிறதா? தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றை சிறிதரன் சந்திப்பது தவறு என்று கூறுகிறதா?”
‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’
“தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.
அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.”
எக்னாலிகொட- எருமைத்தீவு – காளியும் கண்ணகியும்….!(வெளிச்சம்:038)
பாண்டிய மன்னன் தவறான முடிவை எடுத்து கோவலனை கொன்றபோது கண்ணகி அதற்கு நீதிகேட்டு போராடினாள். மன்னனும், மனைவி கோப்பெருந்தேவியும் மாண்டு போனார்கள் என்கிறது சிலப்பதிகாரம்.
இலங்கையில் அரசியல் பிழைத்தமைக்காக ஆகக்குறைந்தது மக்களிடம் மன்னிப்பு கேட்ட “அரசர்கள் / அரசிகள்” உண்டா ? எத்தனை பேர்?
அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல்
பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் எழுத்தாளரான அகரன் எழுதிய “துரோகன்” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றிய ஒரு விமர்சனம் இது.
ஸ்ரீலங்காவை உண்மையாகவே ‘கிளீனாக’ வைத்திருக்க வேண்டுமானால்…?
“தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தென்னிலங்கையின் உணர்வுகளில் எந்த விதமான தளர்வும் இல்லாமல் பண்புநிலை மாற்றம் மற்றும் தார்மீக விழுமியங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல இனங்களையும் சமமாக மதிக்கிறது என்றும் இனவாத அரசியலை அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை.”
பட்டதாரிகளின் போராட்டமும் அரசின் பொறுப்பும்
“கவலைக்குரிய விடயமாக இருப்பது, படிக்காதவர்கள் சுயாதீனமாக இயங்குகின்ற அளவுக்குப் படித்தவர்களிற் பலரும் இயங்க முடியாமல் அரசாங்கத்தையும் சமூகத்தையும் குடும்பங்களையும் சார்ந்திருக்கவும் தங்கி வாழவும் முற்படுவதாகும். அந்தளவுக்கு இவர்களுடைய அறிவுத்திறனும் ஆளுமை விருத்தியும் குறைந்து நலிந்து போயுள்ளன.”