நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும்

அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என்று ஒரு தரப்புச் சொல்கிறது. அது இப்போதில்லை என்று இன்னொரு தரப்புக்கூறுகிறது.
இதையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த மாதிரிச் செயற்பாடுகளுக்கு என்ன பெயர்?
ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியவில்லை. கல்விக் கொள்கையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதையும் விட அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணியை எதிர்த்து முடக்குவதற்கே NPP க்குள்ளும் வெளியிலும் மும்முரமான முயற்சிகள் நடக்கின்றன. ஊழல்வாதிகளைக் கைது செய்வதிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. அதாவது வெளியே சொல்லப்பட்ட – மக்களுக்கு உறுதி அளித்த அளவுக்கு முந்திய ஆட்சியாளர்களில் (ஊழல்வாதிகளில்) NPP கைவைக்கவில்லை. இதுவரையில் பிடித்து உள்ளே போடப்பட்டிருப்பவர்கள் ஓரத்தில் இருந்த சிறிய எறும்புகளே.
என்பதால்தான் NPP யின்மீது கேள்விகளும் சந்தேகமும் வலுக்கிறது.

மேலும்

திம்புக்கோட்பாடு:  “தான் போக வழியில்லையாம் தவில் போலவாம்   மாராராப்பு….!”  (மூன்றாவது கண்:VIII)

“எம்.ஏ.சுமந்திரன் இரா.சம்பந்தர் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியபோது தமிழ்த்தேசிய புத்திசாலிகள் / பக்தர்கள் சுமந்திரனை எதிர்ப்பதற்காக அதை எதிர்த்து முதுமை அரசியலை அங்கீகரித்தனர். ஜே.வி.பி.என்.பி.பி.யாக ஒரு முறை தன்னை உருமாற்றம் செய்துள்ளது.‌ தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ‌அது போன்று தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய பேரவை….. இந்த உருமாறங்கள் ஏற்படுத்திய ஆக்கபூர்வமான கொள்கை மாற்றங்கள் எதுவும் உண்டா? அனைத்தும் கதிரைகளுக்கானதே அன்றி மக்களின் விடிவுக்கானதல்ல”

மேலும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? 

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது.
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை.’

மேலும்

சமஸ்டி அரசியல்: அடுப்புக்குள் சட்டி..!(மூன்றாவது கண்:VIII)

“சுவிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் தனது முயற்சியை கைவிடாது கொழும்பில் தொடர விரும்பியுள்ளது. கொழும்பு, மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணம் சென்று பேசி கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்கு தமிழ்த்தேசிய தரப்புக்கு  அழைப்பு விடுத்து, சந்திப்புக்கான திகதி பெப்ரவரி 19, 2026 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  யார், யார் பங்குவற்றுவது என்ற பட்டியலை  ஒரு தமிழ்த் தேசிய கட்சி முக்கியஸ்தர் தயாரித்து  சுவிஸ் தூதரகத்திற்கு அனுப்பியதாக தெரியவருகிறது. இதன்மூலம் அந்த சந்திப்பை  தமிழ்த்தேசிய “வைக்கோல் பட்டறை நாய் அரசியல்” மீண்டும்  சமஷ்டி சட்டியை அடுப்புக்குள் வீழ்த்திய நிலைக்கு தள்ளியுள்ளது.”

மேலும்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி VI. (சொல்லித்தான் ஆகவேண்டும்(சொல்-51 ))

‘அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது வடமாகாணம் குறிப்பாக யாழ்குடா நாட்டு மேல்தட்டுவர்க்கத்தின் நலன்களே முதன்மைப்படுத்தப்படுகிறதே அன்றி யாழ் குடாநாட்டுக்கு வெளியே வன்னிப்பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற விவசாய மனோபாவம் கொண்ட விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார அரசியல் எதிர்கால நலன்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையென்பதைத்தான். யாழ் மேலாதிக்க அரசியல் தரப்பு எப்போதுமே கிழக்கு மாகாண தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக-எடுப்பார் கைப்பிள்ளையாகவே கருதி வந்துள்ளது/வருகிறது.’

மேலும்

கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்ரனின் “பாரதியும் நானும்” கவிதைத் தொகுப்பு— ஒரு பார்வை

“ஆக்க இலக்கியத்தில் அதன் கனதி பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. கனதி என்பது ஒரு கவிதையின் சொல்லமைப்பிலும், அது வெளிப்படுத்தும் பொருளிலும் உணர்விலும் ஆழத்திலும் உள்ள அடர்த்தியைக் குறிக்கும். இது கவிதையின் எடையை (Weight)அல்ல, மாறாக அதன் உணர்வுடனான கருத்தாழத்தின் செறிவைக் குறிப்பதாகும். ஒரு சிறந்த கவிதை என்பது “சொற்பமான சொற்களில் சொர்க்கத்தைக் காட்டுவது” என்பார்கள். அந்தச் செறிவே கனதி எனப்படுகிறது. இதன் முக்கிய கூறகளாக சொற்செறிவு(Verbal Density), பொருளாழம்(Semantic Depth), படிமம், குறியீடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய பண்புகளைக் கவிஞர் ரூபாவின் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனையவற்றில் மிகத் தெளிவாக அவதானிக்கலாம். வீரம், நறுமுகை, புரட்சி விதை, விழித்தெழு, அந்தாதிக் கவிதைகளிலும், கடும் புனல், உச்சிமீது வானிறங்கினும், சுவாசக் காற்றே, அச்சமில்லை ஆகிய கவிதைகளில் அதன் கனதியை மிகத் தெளிவாகக் காணலாம்.”

மேலும்

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?(மூன்றாவது கண்: VII.)

 “”விலகினேனா விலக்கப்பட்டேனா….?”  என்று கேட்டார் செ.இராசதுரை. 

” விலகேன் முடிந்தால் விலக்குங்கள்… பார்க்கலாம்…” என்று சவால் விடுகிறார் சி.சிறிதரன்.

இந்த அரசியலுக்கு வயது எழுபத்தியேழு என்ற பெருமை வேறு.

 பிறப்பின் அடிப்படையிலான மூப்பு அல்ல அரசியல் சாணக்கியம். தமிழரசுக்கட்சி தன்னை புதுமைப்படுத்த வேண்டும்.

 தூய்மைப்படுத்தவேண்டும். ஜனநாயகம் படுத்தவேண்டும்.
 
 அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்யவேண்டும்.

இல்லையேல் வருகின்ற வெள்ளத்தில் அது அடித்துச்செல்லப்படும்…….! அவ்வளவுதான்….!!”

மேலும்

மீண்டும் தலைதூக்கும் சிங்கள – பௌத்த தீவிரவாதம்: இலங்கையின் இரண்டாவது அறகலையின் மூலம் வீழ்த்தப்படுவாரா அநுர குமார திசாநாயக்க?

“’மத வெறியைத் தூண்ட வேண்டுமானால் முதலில் ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டும்’ என்பது, சிறுபான்மை சமூகங்களே சிங்கள -பௌத்த தீவிரவாத தரப்புக்களால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் அந்த எதிரி. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக ஆவேசமாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களை உன்னிப்பாக நோக்கினால் அவர் சிங்கள பெரும்பான்மை மக்களின் நலன்களை உதாசீனம் செய்து, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரை அளவுக்கு அதிகமாக அரவணைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது வீசப்பட்டு வருவதை பார்க்க முடியும். ‘சிங்களவர்களின் வாக்குகளால் வென்று, தமிழர்களின் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு முயற்சிப்பவர்’, ‘ஜனாதிபதி தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாட முடியுமானால் சிங்கள புத்தாண்டை ஏன் கொண்டாட முடியாது?’ என்ற விதத்திலான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்படுகின்றன. “

மேலும்

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.! (மூன்றாவது கண்:VI)

“எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம்  சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான, ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும்.”

மேலும்

முன்னாள் பாராளுமன் உறுப்பினர்களின் ஓய்வூதிய ஒழிப்பு  சட்டமூலம் தொடர்பான  விவாதம் 

“முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.  தன்னை ஒரு  ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியானாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத்  தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’  நடத்துவதற்கு அவர்  திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்ததை தொடர்ந்து,  அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு  விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை.”

மேலும்

1 7 8 9 10 11 183