மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

“முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சிகளினால் நேபாள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனமையையும்  இறுதியில் அவர்களுக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து அவர்களை விரட்டியிருப்பதையும்  ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிக்குவந்த இடதுசாரி இயக்கமான  ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் எடுப்பது அவசியம்.”

மேலும்

பூகோள அரசியல் வலையில் இலங்கை அரசாங்கம்..? (வெளிச்சம்: 079)

“ஜே.வி.யை.விடவும் ஹருணியிடம் மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. அவர் விவகாரங்களை ஒரு கட்சி அரசியல் வாதிக்கு அப்பால் நேர்மையாக கையாள்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதை செய்தால் அவரின்  பதவி நாட்கள் விரைவாக எண்ணப்படும். அதற்காக ஜே.வி.பி. அரசியலை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர் கடந்து சென்று ரில்வின் சில்வா அதிகார மையத்தை திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய உளவாளியாகவும், அரசியல் நிர்வாக இயலாமையாகவும் அவரை காட்டும் முயற்சி என்.பி.பி.அரசாங்கத்திற்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.  இது ஜே.வி.பி. பலப்படுத்தாது.  இந்த  இருதரப்பு இடைவெளி வெளிச்சக்திகள் இலகுவாக உள்நுழையவே வழிவகுக்கும். அது இப்போதே ஆரம்பித்து விட்டது.”

மேலும்

ஜீவனின் கமரா பாலுமகேந்திராவை நினைவூட்டும்…..!

‘நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை.’

மேலும்

சிறிதரன்: தவறுகளும் மீளலும்

“மக்களுடைய அரசியல் பிரதிநிதியாக இருப்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தனி நலன்களையும் ஓரங்கட்ட வேண்டும். முடிந்தளவுக்கு இறங்கியும் இணைந்தும் செயற்பட வேண்டும். இந்தப் பண்பு இல்லாதிருப்பதே சிறிதரனின் தோல்வியாகும். இந்தக் குறைபாட்டை விலக்கவில்லை என்றால், தேர்தல்களில் அவர் தொடர்ந்து வெற்றியீட்டலாம். வரலாற்றில் தோல்வி கண்ட அரசியல்வாதியாகவே அவர் மதிப்பிடப்படுவார். வரலாற்றின் நாயகர்கள் யாரென்றால் சமூக வளர்ச்சியை, சமூக மாற்றத்தை உருவாக்கியவர்களே. அவர்களுக்கே வரலாறுண்டு. “

மேலும்

“அப்பா…..! நுஃமான் மாமா முஸ்லிமா..?” (வெளிச்சம்: 077)

“கடும்போக்கை” அங்கீகரிக்கவும் அல்லது அதில் நெகிழ்ச்சிப்போக்கை கடைப்பிடிக்கவும்  சமூகங்கள் தயார்படுத்தப்படவேண்டும். இது பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் நுஃமான் போன்ற இருதரப்பு மூத்த கல்வியாளர்களின் பணியாகும்.  இவர்கள் இருவரும் வாய்திறக்க வேண்டிய ஒரு காலத்தில் மௌனம் சாதித்தவர்கள். சகல தரப்பு ஆயுத வன்முறைகளையும் கண்களை மூடிக்கொண்டு கடந்து சென்றவர்கள். இவர்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இருதரப்பு உறவை பலப்படுத்த  தேவையான போது, போதுமான பங்களிப்பை வழங்கி சமூகங்களுக்கு முன்னோடிகளாக வழிகாட்டத்தவறியவர்கள். இப்போது வெள்ளம் தலைக்குமேல் வந்த நிலையில்  இன்னும் கடந்த காலம்பற்றியே பேசுகிறோமேயன்றி நிகழ், எதிர்காலங்கள் பற்றி பேசவில்லை.  “இப்படியும் ஒரு காலம் இருந்தது” தான். ஆக ,  அது இப்போது இல்லையே. அதற்கு, இனி செய்யவேண்டியது என்ன? 

மேலும்

ஜனாதிபதி அநுரவின்  கச்சதீவு விஜயம்

“ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின்  விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக  மீன்பிடிக்கும்  இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது.

திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான  ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு  மீனவர்கள் சங்கத்தின் தலைவர்  என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.”

மேலும்

துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில்  ‘துரோகி’ மொழியாடலும்

“துரையப்பா கொலைக்கு பின்பு பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் எனது பாட்டி வீட்டில் நான் அடைக்கலம் கொடுத்தேன்.  பிரபாகரன் எனது பாட்டி வீட்டில் குறைந்தது ஒருவருடம் தங்கி இருந்தார். பற்குணம் பின்னர்  இயக்கத்தை கைவிட்டுச் செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபாகரனால் கொல்லப்பட்டதும்  நிகழ்ந்தது.  ஆரம்பத்தில் புதிய தமிழ் புலிகள் அமைப்பிலும், பின்னர் 1976 -இல் தமிழீழவிடுதலைப்புலிகளுடனும் இணைந்து செயல்பட்டேன்.
ஏப்ரல் 1984 -இல் புலிகளிலிருந்து நான் விலகிய பின்னர் இனத்துவ தேசியவாதச் சிந்தனை மரபின் அழிவுக் கருத்தியலை நான் படிப்படியாகத் தரிசிக்க தொடங்கினேன்.  தமிழ்த்தேசியவாதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு பயணித்து, பின்னர் அந்தக்  கருத்தியலை விமர்சனத்திற்குள்ளாக்கிய எனது நீண்ட பயணத்தின் சுய பிரதிபலிப்பு இது.  இறுக்கமான கருத்தியல் கட்டுமானத்திலும்  மாற்றங்கள் ஏற்படும் எனும் தாற்பரியத்தைப்புரிந்து,  எமது கடந்தகால வரலாறு சங்கடத்துக்கு உரியதெனினும் அதனை துணிச்சலுடன் வெளிப்படுத்துவது அவசியம்.” – ராகவன்.

மேலும்

அறகலய: அமெரிக்காவே சாதன லத …..! (வெளிச்சம்: 076)

“யு.என்பி – ஜே.வி.பி.  நினைத்துப்பார்க்க முடியாத பின்கதவு உறவு அறகலய காலத்தில் ஏற்பட்டதல்ல. 2009 யுத்த முடிவுக்கு பின்னர் 2010 பொதுத்தேர்தலில் ஏற்பட்டது.  ராஜபக்சாக்களுக்கு எதிரான இந்தக் கூட்டில் களங்கப்படுத்தப்பட்ட அரசியல் ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து கொண்டது. இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை  தமிழ்பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தது என்பதும், புலிகளையும், மக்களையும் அழித்த  படைத்தளபதியை வெட்கமின்றி ஆதரித்தது என்பதும் வரலாறு.”

மேலும்

கைதானதை அடுத்து ரணில்  எதிர்க்கட்சிளை ஐக்கியப்படுத்தும் பலமான தலைவராக மாறிவிட்டாரா?

“விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்க உட்பட தேசிய  மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பி.யின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.”

மேலும்

கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!

“கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்!
குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம்.
அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம் என்று கேள்வியெழுப்புகிறார் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் கருணாகரன்.”

மேலும்

1 9 10 11 12 13 175