மண்டூர் அசோகாவின் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு:  ஒரு பார்வை

இந்தத் தொகுப்பில் கோர்த்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து சிறுகதைகளில் ஐந்து சிறுவர்களின் கல்வி, அவர்களின் பாசத்துக்கான ஏக்கம், தவிப்பு, ஆசா பாசங்கள், சிறுவர் கல்வி, உரிமை மீறல்கள் ஆகியன உணர்வு பூர்வமாகப் பேசப்படுகின்றன. மூன்று சிறுகதைகளில் பெண்களின் திருமணத்துக்குப் பின்னரான பிறழ்வான பாலியல் நடத்தை, மனவெழுச்சிகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புகள், உறவுச் சிக்கல்கள் என்பவை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுகதை போர்க்கால இழப்புக்களையும் அவல வாழ்வினையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமாக விபரிக்கின்றது. ‘வேட்டை’ சிறுகதை இரு நண்பர்களின் இணைபிரியாத நட்புறவினையும் ஒருவரின் இழப்பு, மற்றவர் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வதும் வாசகரின் உணர்வுகளை உறைய வைப்பனவாக அமைகின்றது.  
இத்தொகுதியிலுள்ள கதைகளின் தெரிவு என்பது கதை ஆசிரியர் வாழ்ந்த பிரதேசத்தில் ஊடாடிய மாந்தர்களுக்கு நேர்ந்த அவலங்கள், துன்ப, துயரங்கள், வாழ்க்கைப் போராட்டங்களில் அவர் உள்ளத்தை நெகிழ வைத்த உண்மைச் சம்பவங்கள் கதைத் தெரிவுகளாகவும் பொருளாகவும் கருவாகவும் அமைந்திருக்க வேண்டும்.”

மேலும்

டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!(வெளிச்சம்:099)

“கடந்த 35 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் அரசியலில் அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. இந்த எதிர்வு கூறலில் உள்ள  உண்மை ஈழத்தமிழர்கள் இலகுவாக கடந்து செல்லமுடியாத அரசியல் தீர்க்கதரிசனம்.

மற்றைய அமைப்புக்கள், கட்சிகள் போன்று புலிக்கு பசுத்தோலை அவர் போர்க்கவில்லை. டக்ளஸின் கருத்தையே சர்வதேசமும், இந்தியாவும் கொண்டிருந்தன. தமிழ்க் கட்சிகள் தூதரகங்களின் பூட்டிய கதவுக்குள்ளும், வெளிநாட்டு சந்திப்புக்களிலும் ஒன்றையும், மக்கள் மத்தியில்  வேறொன்றையும் சொல்லி செய்யும் ‘தெப்பிராட்டிய அரசியலை’ டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை.

பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் தப்பிய ஒருவர் இன்னும் உயிருடன்
இருக்கிறார் . 

அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை கர்மா  கொலை செய்தது என்று சொல்லலாமா?”

மேலும்

‘ஈழத்துச்சிறை’ கவிதை நூல் (பகிர்வுகள்- பகிர்வு – 04)

‘இருந்தும் நான் எனது எல்லையை
கடந்தாக வேண்டும்.
நான் விரைகின்றேன்.
எல்லைக் காப்பரண் நெருங்குகிறது.
துப்பாக்கி முனை மிரட்டுகிறது
எனது கைகளை, இடுப்பைத் தட்டுகிறது.
நான் தடுக்கப்படுகிறேன்
‘நீ யார்?’
‘நான் மனிதன்’
‘எங்கே போகிறாய்?’
‘எனது தாய் நிலத்திற்கு’
‘உன் தொழில்?’
‘அடிமை தனத்திற்கு எதிராய் கவிதை எழுதுவது’
‘உன் பெயர்?’
‘தமிழன்’
பின்பு அவன் கேள்வி கேட்கவில்லை
காலையில் பத்திரிகையில் செய்தி வந்தது
ஒரு புரட்சிக் கவிஞன்
பாரிய அடிகாயங்களுடன்
பற்றைக்குள் இருந்து மீட்பு!!’

மேலும்

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும்

“சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப் பகுதியில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழர் தரப்பு  இழைத்த மாபெரும் தவறையும் அதற்கு காரணமான முக்கிய சக்திகளையும்  பற்றிய தெளிவான விளக்கப்பாட்டை தமிழ்க் கட்சிகள் கொண்டிருப்பது அவசியம். மாகாணசபை முறைமையின் இன்றைய சீரழிவுக்கு தமிழர் தரப்பும் கணிசமானளவுக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.”

மேலும்

‘யேசுவின் பிறப்பை கொண்டாடுவது வியாபாரமாகிவிட்டது…!’ (வெளிச்சம்: 098)

“பேராயர் மல்கம் ரஞ்சித் இந்த உரையை இவ்வாண்டு நத்தார் ஆராதனையில் கத்தோலிக்க மதம் சார்ந்து ஆற்றியிருந்தாலும்.  உலகின் சகல மத கொண்ணாட்டங்களினதும்  பொதுப்பயணம் இந்த வழியே பயணிக்கிறது. எனவே பேராயர்  மல்கம் ரஞ்சித்  வழங்கியுள்ள  நத்தார் பரிசு ஒரு ‘ஒன் சைஸ்’ (ONE SIZE) தொப்பி எல்லோருக்கும் அளவானது.
போட்டுக்கொண்டு புத்தாண்டில் கண்ணாடிக்கு முன் நிற்க எத்தனை பேர் தயார்..,..?”

மேலும்

கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனத்தில் அரசியல் …! (வெளிச்சம்: 09)

“அரசியல் சூழ்ச்சிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிடமாகவுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் பதவியை நிரந்தரமாக நிரப்ப பொதுநிதி நிர்வாகத்தில் நிருபிக்கப்பட்ட நிபுணத்துவம், பொருத்தமான தகுதி, சேவை மூப்பு போன்றவற்றைக்கொண்ட சுயாதீன நிபுணர் ஒருவரை நியமிக்குமாறு PNF ஜனாதிபதியை கோருகிறது.”

மேலும்

வடக்கு, கிழக்கில் குடியேறுமாறு மலையக தமிழர்களுக்கு  விடுக்கப்பட்ட  அழைப்பு மூளவைத்திருக்கும் விவாதம் 

மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக  மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக  வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன்  சமத்துவமானவர்களாக  வாழ்வாதாரங்களையும் ஏனையவசதிகளையும்  பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். 

மேலும்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – (பகுதி 111) (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-48)

“யாழ் மாவட்டத் தமிழ் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் எனும் ஒரே காரணத்திற்காகத் தமிழரசுக் கட்சியும் அதனைச் சார்ந்த தமிழ் மாணவ இளைஞர் அமைப்புகளும் தரப்படுத்தல் முறைமைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போதைய அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலஞ்சென்ற பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்குக் கொடும்பாவி கட்டி எரிக்கும் அளவுக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்களும் தமிழ்த் தேசியம் எனும் போர்வையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டக்களப்பிலும் விஸ்த்தரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தமது கண்ணைத் தாமே தமது கைகளினால் குத்த வைக்கப்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்த நிலைமை கிழக்கிலே தமிழ் முஸ்லிம் நல்லுறவு கெடுவதற்கு ஊக்கியாகவும் அமைந்தது.”

மேலும்

தவித்தமுயல் அடித்தல் : மலையில் பிடுங்கி தரையில் நாட்டுதல் (வெளிச்சம்:096)

“தமிழர்களின் நலனுக்காக சர்வதேச அளவில், குறிப்பாக இந்தியர்களின் ஆதரவைத்திரட்டுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), மற்றும் பல்வேறு போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இலங்கையின் தமிழ் மக்களை அடுத்தடுத்து சிங்கள ஆதிக்க அரசாங்கங்களால் கடுமையான பாகுபாட்டிற்கு ஆளான ஒருமைப்பாட்டு குழுவாக சித்தரித்தனர்…

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒருமைப்பாட்டு குழுவாக இல்லை என்பதை அவர்கள் வேண்டுமென்றே மறைத்தனர். உண்மையில் அவர்கள் இலங்கைத்தமிழர்கள், இந்தியத்தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் எனப்பிரிக்கப்பட்டுள்ளனர்… 

அவர்களின் குறைகள், அபிலாஷைகள், அவர்கள் தேடும் தீர்வுகள் மற்றும் அவர்களின் போராட்ட முறைகள் அனைத்தும் வேறுபட்டவை. மேலும் இலங்கைத் தமிழர்களிடையே கூட யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் இடையே வேறுபாடுகள் உள்ளன…. “

மேலும்

மட்டக்களப்பில்  அண்மைக்காலமாக குறும்பட – திரைப்படத் தயாரிப்புகளின் முனைப்பு (பகிர்வுகள்)

ஈழத்தின் திரைப்பட முயற்சியில் கிழக்கிலிருந்து உருவான முக்கிய ஒரு திரைப்படமாகவும் ‘சாவடி’யைப் பார்க்கலாம்.

‘சாவடி’ 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியைக் கதைக்களமாகக் கொண்டது.

மேலும்

1 10 11 12 13 14 183