டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்
வியட்நாம் போர்க்காலத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு அவர் உலகவங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்) ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் கூற்று ஒன்றை நினைவு கூர்ந்தார் ; “வரலாற்றில் இருந்து எவரும் படிப்பினைகளைப் பெறுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினையாகும்.”
மட்டுநகர் முதல்வர், இராசதுரை அவர்களின், மகத்தான பணி, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்!
“திரு. செ.இராசதுரை அவர்கள், பிரதேச அபிவிருத்தி அமைச்சராகியிருக்காவிட்டால் மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரி அமைக்கப்பட்டிருக்க மாட்டாது. அப்படியொரு அமைச்சு எப்போதாவது அமைக்கப்பட்டு அதற்கு வேறு யார் அமைச்சராகி இருந்தாலும் இசைநடனக் கல்லூரி வந்திருக்காது. அதேவேளை, அவருக்கு வேறு எந்த அமைச்சைக் கொடுத்திருந்தாலும் அந்த அமைச்சின் கீழ் இந்த இசை நடனக்கல்லூரியை அவர் அமைத்திருப்பார். அல்லதுகல்வி, கலாசார அமைச்சின் கீழ் இசைநடனக்கல்லூரியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பார். எனவே இசை நடனக் கல்லூரியை, அமைச்சின் செயலாகவல்ல, அரசின் செயலாகவும் அல்ல, அமைச்சராக இருந்த, செ. இராசதுரை அவர்களின்செயலாகவே கொள்ள வேண்டும்.”
சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அணையா தீபமாக ஒளியூட்டும் சொல்லின் செல்வர் இராசதுரை
“10ம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நூலகத்தோடு ஆரம்பித்தவர் அமைச்சரானபோது ஒரு கல்லூரியை ஆரம்பித்து இன்று பலஆயிரக்கணக்கானவர்களுடைய வாழ்க்கைக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றார். அவர் கூறியது போல் அவர் என்ன நோக்கத்துக்காக போராடினாரோ மக்களிடம் வாக்குக் கேட்டாரோ அந்த சொல்லில் இருந்து விலகாது மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஒளி தீபமாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.”
பெருந்தலைவர் இராஜதுரையை கொண்டாடுவோம்..!(வெளிச்சம்: 095)
“பேராசிரியர் மௌனகுரு கூறியதுபோன்று, சொல்லின் செல்வர், செ. இராசதுரையின்
இறப்பு இரங்குதற்குரியதன்று. அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. இரங்கல் வேண்டாம், கொண்டாடுவோம்.”
தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு
“இப்பொழுதும் தமிழ்த்தேசியச் சக்திகளிடம் தடுமாற்றங்களே அதிகமாக உண்டு. இதற்குக் காரணம், மறுபரிசீலனைக்கான சிந்தனையும் உளநிலையும் இவற்றிடம் இன்னும் ஏற்படாதிருப்தேயாகும். ஏராளமாக விளைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளில் ஒன்றிற் கூட இன்னும் புதிய அடையாளத்தை நோக்கிய பயணச் சுவட்டைக் காண முடியவில்லை. இதனால்தான் பட்டும் படாமலும் முட்டியும் முட்டாமலும் ஒரு மாதிரியாக இவை சந்திப்புகளைச் செய்கின்றன; பேசுகின்றன.”
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேசவாதம் அல்ல – பகுதி 11.(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-47)
“சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னரே தமிழரசுக்கட்சி தனது கட்சி சார்பான அமைச்சர் அமரர் மு.திருச்செல்வம் மூலம் இதனைச் செய்து கொடுத்திருந்திருந்தால் இன்று கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது மட்டுமல்ல அது எப்போதோ தானாகவே கிடைத்திருக்கும். கல்முனை நகரமும் தமிழர்களிடருந்து கைநழுவிப்போய் இருக்கவும் மாட்டாது. கல்முனைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் முழுக்க முழுக்கத் தமிழரசுக் கட்சியேதான்.”
சொல்லின்செல்வர் இராஜதுரை நினைவுகள்: ஆரம்ப கால அவரது வாழ்வு அனுபவங்களும் அவரது உருவாக்கமும்
மட்டுநகர் தந்த மூத்த அரசியற்தலைவர், முன்னாள் அமைச்சர், சொல்லின் செல்வர், காலஞ்சென்ற செ. இராஜதுரை அவர்களின் வாழ்வு குறித்து பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் ஒரு பார்வை.
38வது பெண்கள் சந்திப்பு (பேர்லின்) பற்றிய ஒரு குறிப்பு
38வது பெண்கள் சந்திப்பு
ஜேர்மனி பேர்லின் நகரில் ஒக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் (24-26) தொடர்ச்சியாக நடைபெற்றது. இம்முறை பெண்கள் சந்திப்பு முழுவதும் “பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள்“ (Intersectionality) என்கின்ற கருப்பொருளின் கீழ் விடயங்கள் பேசப்பட்டன.
அனர்த்த முகாமைத்துவம்: எதிர்கட்சிகளின் பங்கு என்ன..?(வெளிச்சம்:094)
“இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளில் பல அனர்த்தத்திற்கு முன்னர் எழுப்பப்பட்டிருக்க வேண்டியவை. எனவே இது விடயமாக அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள பொறுப்பு கூறல் வகிபாகம் 50:50. தவறுகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி விட்டு பின்னர் பிழைபிடிப்பது அப்பட்டமான கட்சி அரசியல் நகர்வு.”
அரசாங்கத்தை தூக்கி வெள்ளத்தில் எறிவதற்கு இது நேரமல்ல
“அண்மைய தசாப்தங்களில் கிரமமான முறையில் மாறிமாறி எம்மைத் தாக்கிய வரட்சியும் வெள்ளப்பெருக்கும் காலநிலை மாற்றத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட்டுவரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற அச்சந்தரும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன. அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் ஆலோசனைகள் கூறுவதில் அர்த்தமில்லை. அழிவுகள் தான் மிஞ்சும். சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக எவரும் தங்களைக் காட்டிக் கொள்வது சுலபம். முன்மதியுடனான நடவடிக்கைகளையே இன்றைய நிலைவரம் வேண்டிநிற்கிறது.”
