எல்லாளனாக உருவெடுத்து, அரங்கை அதிரவைத்த பேராசிரியர் மௌனகுரு!
“அபிநய சேத்திர ஆடலகம்” என்னும் ஆற்றுகைக்குழுவின் ஒரு நீண்ட ஆடல் நிகழ்வில் எல்லாள மன்னனாக தன்னை உருவாக்கி 83வது வயதிலும் ரசிகர்களை அதிசயிக்க வைத்தார் பெருங்கூத்தனாக பலராலும் வர்ணிக்கப்படும் பேராசிரியர் மௌனகுரு.
அந்த ஆற்றுகைக்கான முன்னேற்பாடு, பயிற்சி, தனது பாத்திரம் உருவானவிதம், ஒப்பனை, ஒத்திகை போன்றவை குறித்த தனது அனுபவத்தை அவர் இங்கு சுவாரசியமாக விபரிக்கிறார்.
கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!
“கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு! “
கனடா கலாட்டா: ஹரியின் கடிதம் அதிகார அத்துமீறலா…? (வெளிச்சம்: 068)
உண்மையில் செந்தூரன் குடும்ப இணைவு விவகாரம் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையிலான போராட்டமாக உள்ளது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பன சுயமாக இயங்கும் மேற்குலகில் இவை இரண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை. இரு சமாந்தரக்கோடுகளாக நகர்கின்றன. ஹரி ஆனந்தசங்கரியின் மனிதாபிமான அடிப்படையிலான கடிதங்களும், செந்தூரனின் மனிதாபிமான மேன்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டிருப்பதும், சட்டத்துறை நிர்வாகம் கனேடிய சட்டங்களைப் பற்றியே பேசுவதும் இந்த சமாந்தரமான இரு நேர்கோட்டு அணுகுமுறைகளாகும்.
‘BOTTLE NECK’ எங்கே உள்ளது?(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-42)
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு விவகாரம் தொடர்பில் அழகு குணசீலனால் அரங்கத்தில் எழுதப்பட்ட இரண்டாவது கட்டுரைக்கான பதில்கருத்தாக, தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் இங்கு மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கடந்த காலத்தில் கோட்பாட்டு அரசியலில் எவ்வாறு நெகிழ்ந்து கொடுத்துச் செயற்பாட்டு அரசியலை முன்னெடுத்தது என்பது பற்றிச் சற்று விளக்கமாகவும் விவரமாகவும் எழுதுகிறார்.
வரதரின்(2025) புதிய முயற்சிகள்
தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது.
மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது.
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!(வெளிச்சம்: 068)
“உண்மையில் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாகாணசபைக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இல்லை. அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் படிப்படியாக கொழும்பால் மீளப்பெறப்பட்டு விட்டன. இன்னும் காலம் கடத்தினால் “கோவணத்தையும்” இழந்த கதைதான் என்பதை வரதர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.”
“மாகாணசபை சபை மூலமாக அதிகாரப்பகிர்வு அடிப்படை கட்டமைப்பை தக்க வைக்க அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். புலிகளுக்கு பின்னால் போன அனைவரும் செய்ய வேண்டிய பிராயச்சித்தம்.”
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை
“அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியிருக்கிறார். குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு தனது அரசாங்கத்துக்கும் ஓரளவு பொறுப்பு இருக்கிறது என்பதா அவரது அந்தக் கூற்றின் அர்த்தம்? சூத்திரதாரிகள் என்றைக்காவது சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று நம்பவது (இதுகாலவரையான நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ) கஷ்டமாக இருக்கிறது.”
சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல்
“அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால், தனிநாடோ(தமிழீழமோ) பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஸ்டியோ இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியமுமில்லை என்பதைப் பற்றி பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அதைத் துணிந்து சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை. அப்படிச்சொன்னால் தாம் வரலாற்றுத் துரோகியாகி விடுவோம் என்று அச்சமடைகிறார்கள். இதனால் பொய்யாகப் போலியாக நடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். இதை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம். அப்படியாராவது மறுத்தால், தாம்வலியுறுத்துகின்ற – நம்புகின்ற அந்தத் தீர்வு வடிவத்தை எட்டுவதற்கான வழிமுறை – பொறிமுறை – கால நிர்ணயம் அல்லது கால எல்லை என்னவென்று அவர்கள் விளக்கவேண்டும்.”
ஒரு பேப்பர் பையன்- சிறுவர் போராளி- பேராசிரியரான கதை…..!(வெளிச்சம்: 067)
“ஐந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்தில் பயணித்து 1987 இல் ஊர் திரும்பி, கடந்த 38 ஆண்டுகளாக சிவரெத்தினம் மேற்கொண்ட கல்வி யாத்திரை அவரை பேராசிரியராக தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் சிலர் நினைப்பது போன்று இது சுகப்பிரசவம் அல்ல…”
தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும்
“இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது போன்றே தோன்றுகிறது.”
