தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும்
“இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது போன்றே தோன்றுகிறது.”
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
“சம்பந்தனின் மறைவு தமிழர் அரசியலில் ஏற்படுத்திய வெற்றிடம் அண்மைய எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய வாய்ப்பு தொடர்பில் நம்பிக்கை வைப்பதற்குரிய அரசியல் சூழ்நிலை தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை. தமிழ் மக்களின் நலன்களில் அன்றி தங்களது கட்சி அரசியல் நலன்களிலும் ஆளுமைப் போட்டியிலும் அக்கறை காட்டுவதற்கே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கிறது.
சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.”
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல்
“செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது.
என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.”
கிழக்கு அரசியல்: கட்சி அரசியலில் தூய்மை என்பது பொய்மை….! (வெளிச்சம்: 066)
“கொழும்பு அரசாங்கங்களோடு கைகுலுக்காத எதாவது ஒரு தமிழ்க்கட்சி, தமிழ் இயக்கங்கள், அவர்களின் தலைமைகள் இருக்கிறீர்களா? இருந்தால் வெளிச்சத்திற்கு வாருங்கள். கருணாவும், பிள்ளையானும், டக்ளஸ் தேவானந்தாவும் தானா கொழும்பு அரசாங்கத்தின் ஆதரவை பெற்றிருந்தனர். விடுதலைப்புலிகள், புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எப். ஈரோஸ் உள்ளிட்ட அனைத்து ஆயுத அமைப்புக்களும் கொழும்பு ஆட்சியாளர்களிடம் இருந்து ஆயுதங்கள், நிதி, மற்றும் வசதிகளை காலத்திற்கு காலம் பெற்றிருந்தனர். அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் பெற்றன. ஆக, அனைவருமே ஒட்டுக்குழுவும், ஒட்டுக்கட்சியும்தான். இந்த தூய்மை அற்ற அரசியலால் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் கொழும்பால் வளர்க்கப்பட்டன. இதுவே கள ஜதார்த்தமாக இருந்தது.”
புண்ணியபுரம்-வரலாற்று நாவல்
‘ஈழத்தைப் பொறுத்தவரை 1895 இலிருந்து ஆரம்பித்து இன்று 2025 வரையிலான 130 வருடகாலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்று நாவல்களே படைக்கப்பட்டுள்ளன எனும் பகைப்புலத்தில் இப் ‘புண்ணியபுரம்’ நாவலின் வரவு முக்கியத்துவம் மட்டுமல்ல இதன் உருவம் உள்ளடக்கம் மற்றும் உத்தி காரணமாக முன் வரிசையில் வைக்கப்பட வேண்டியதொன்றுமாகும். ‘
சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை இல்லாத ஒரு உலகம்
“பிரகடனப்படுத்தப்படாத ஒரு அணுவாயுத நாடும் இதுகாலவரையில் அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தி பேரழிவை ஏற்படுத்திய ஒரேயொரு வல்லரசும் சேர்ந்து அணுவாயுதத்தை தயாரிப்பதாக தாங்கள் சந்தேகித்த ஒரு நாட்டின் மீது படுமோசமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி நாசம் விழைவித்திருக்கின்றன. சர்வதேச சட்டங்களை கிஞ்சித்தேனும் பொருட்படுத்தாமல் போரைத் தொடங்குவதை மாத்திரமல்ல, போர்நிறுத்தத்தை எப்போது செய்வது என்பதையும் மத்திய கிழக்கில் இன்று அமெரிக்காவும் இஸ்ரேலுமே தீர்மானிக்கின்றன.”
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே!
“இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வீ.கே. சிவஞானமும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் சென்றபோது அதே கட்சியைச் சேர்ந்தவர்களிற் சிலர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இந்த எதிர்ப்பை அவர்கள் கட்சிமட்டத்தில் காட்டியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொது வெளியில் காட்டியிருக்கக் கூடாது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தைப் பலவந்தமாகப் பறித்துத் தங்களுடைய கையில் எடுத்துத் தங்களுடைய அரசியல் லாபநட்டக் கணக்கைப் பார்த்திருக்கக் கூடாது என்ற பொது அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சி, குறித்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேவேளை இவர்களைப் பொதுச் சமூகம் கண்டிக்க வேண்டும்.“
வோல்கர் டேர்க்: அநுரவின் காட்டில் மாயமான் வேட்டை…! (வெளிச்சம்: 065)
“மொத்தத்தில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இனியும் சர்வதேசத்தின் பெயரை உச்சரிக்கும் தகுதியை இழந்து விட்டது மட்டும் அன்றி சர்வதேசத்தினால் ஏமாற்றப்பட்டும் உள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறித்து திருப்தியை வெளியிட்ட வோல்கர் , தமிழ்த்தேசிய தரப்பில் எத்தனை பெண்கள் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக உள்ளனர் என்பது குறித்து பேசாதது கவலைக்குரியது.”
மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச சபையின் அரசியல் பழிவாங்கல்
“மொத்தத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழரசுக் கட்சியினர் தங்களுடைய முதல் நடவடிக்கையாக எடுத்திருக்கும் இந்த அரசியல் பழிவாங்கலால் சாதாரண ஏழைத் தமிழ் மக்களும், தமிழ் மக்களுக்காக சேவையாற்றி வந்த களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமுமே பாதிக்கப்படுகின்றன என்பதே தெட்டத் தெளிவான உண்மையாகும்.”
தூய்மையான அரசியலே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செல்நெறி (சொல்லித்தான் ஆகவேண்டும் – சொல் 41)
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. கட்சி மற்றும் தனிநபர் நலன் சார்ந்த மனோநிலையில் மாற்றமேற்பட்டு அவற்றைக் கடந்து மக்கள் நலன் சார்ந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் இம் மூவரிடமும் ஏற்படுமாயின்-உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த எண்ணங்களின் அடிப்படையில் மாற்றங்கள் மூவரிடமும் உள்வாங்கப்படுமாகவிருந்தால் மட்டுமே அழகு குணசீலனின் ஆதங்கம் நிறைவேற வாய்ப்புண்டு. கபட அரசியலுக்கு ஒரு போதும் (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு துணை போகாது. மக்கள் நலன் சார்ந்த தூய்மையான அரசியலே (மூத்த) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செல்நெறி.
