‘கங்கா மாதா பொய் சொல்வதில்லை’ – (மறைக்கப்பட்ட இந்திய கொவிட் மரணங்கள்)
கொவிட் தாக்கம் பற்றிய செய்திகளை இந்திய மத்திய அரசாங்கம் மறைப்பதாக பல தரப்பாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதனை அந்த நாட்டின் மோடி அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. ஆனால், இந்தியாவின் புனித நதிகளில் முக்கியமான கங்கா நதி இந்தத்தடவை மோடியை காட்டிக்கொடுத்துவிட்டதாக கூறுகிறார் இந்தக் கட்டுரையாசிரியர்.
Lockdown காலக் காட்சிகள்
இலங்கையில் Lockdown கால நிலவரங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. குறிப்பாக சாமான்ய மக்கள் பெரும் அழுத்தங்களுக்குள் வாழும் நிலை. அதேவேளை, அரச நிர்வாக மட்டங்களில் விடப்படுகின்ற நடைமுறைத்தவறுகள் சாமான்ய மக்களை மேலும் சிக்கல்களுக்குள் தள்ளுகின்றன. இவை குறித்த தனது கவனத்தை பிரதிபலிக்கிறார் பத்தியின் எழுத்தாளர்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 02
“பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?” என்ற தலைப்பில் சிவலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கான தனது பதில் கருத்தை தொடர்ச்சியாக பதிந்துவரும் எழுவான் வேலன், தனது இரண்டாவது பகுதியாக இதனை பதிகிறார். இரு பிரதேசங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் அவர், காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் யாழ். மேலாதிக்கவாதிகளால் கிழக்கு பாதிக்கப்பட்டதாக வாதாடுகிறார்.
களவெட்டி (கவிதை)
இது வெறுமனே ஒரு விவசாயியின் கவலை மாத்திரமல்ல. ‘எதை நோவேன்? விவசாயியையா? வெட்டு மெசினையா? விளைவித்த வயலையா? அல்லது என் வக்கையா?’ சு.சிவரெத்தினத்தின் கவிதை பேசட்டும்.
தோழர் நாபா நினைவுகள்: நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள் (சொல்லத் துணிந்தேன்-77)
தோழர் பத்மநாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது ஆளுமையை நினைவுகூருகிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.
வீரமும்- விவேகமும்- தன்னல மறுப்பும்- தத்துவார்த்தத் தெளிவும்- தியாகமும்- மானுட நேயமும் நிறைந்த உண்மையான மக்கள் தலைவனாகவே தோழர் பத்மநாபாவை வரலாறு அடையாளப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஜோர்ஜ் கபிரியேல்! (காலக்கண்ணாடி – 42)
அமெரிக்காவின் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு மட்டக்களப்பு வாகரையை பிறப்பிடமாகக் கொண்ட ஜோர்ஜ் கபிரியல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
50 ஆண்டுகளாக மாறாத ஆட்டம்: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை…
தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை இன்றுவரை பெற்றுவரும் தமிழ் தேசியவாதிகளின் போக்கு இன்னமும் மாறவில்லை என்பது தேசம்நெட் ஆசிரியர் ஜெயபாலனின் கருத்து. அவர்கள் அன்று ஆடிய “தோற்றுப்போன ஆட்டமுறையையே” இன்றும் தொடர்வதாக தனது காட்டமான பாணியில் அவர் விமர்சிக்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (25)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்தப் பகுதியில் 70களின் இறுதி வருடங்களில் அரசியல் ரீதியாக நடந்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய விளைவுகளை நினைவு கூர்கிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 01
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ என்ற தலைப்பில் வி.சிவலிங்கம் அவர்கள் அரங்கம் பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகள் குறித்த கருத்தாடல் இது. எழுவான்வேலனின் கருத்துகளின் முதல் பகுதி.
பேரிடர் கால நெருக்கடியை எப்படிக் கையாள்வது?
கொவிட் பேரிடர் காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களான உயிர்கள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை காப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என்று கோரும் கருணாகரன், இந்த பேரிடரில் ஒத்துழையாமை பயன் தராது என்கிறார். பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளதை அவர் வலியுறுத்துகிறார்.
