சோதி என்னும் பன்முக ஆளுமை
கலை இலக்கியம், ஊடகத்துறை, இளைஞர் பயிற்சி என பலதுறைகளிலும் செயற்பட்ட வைத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் மறைவை அடுத்து செய்தியாளர் சிவராசா கருணாகரன் அவர்கள் எழுதிய குறிப்பு.
நம்மட இனங்களை அழிக்காதீங்கோ! (படுவான் திசையில்…)
மட்டக்களப்பு பகுதி விவசாயிகளிடம் புதிய விடயம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அதாவது அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட விதைகள் பாதகமான விளைவுகளைத் தருகின்றன என்பதுதான் அந்த விடயம். இது குறித்து அங்கலாய்க்கிறார் படுவான் பாலகன் இந்த வாரம்.
காசி ஆனந்தன்: மோடிக்கு பூவும் தண்ணியும்: (காலக்கண்ணாடி – 16)
அண்மையில் இந்திய அதிகாரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு ஒன்றை அடுத்து கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறித்து தனது கருத்தை எழுதுகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன். இலங்கை குறித்த கடந்த கால இந்திய அணுகுமுறையையும் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்குகிறார்.
நொச்சிமுனை வெள்ளம் சொல்லும் கதை
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் நொச்சிமுனை பகுதியில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு குறித்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகள் தவறியமை குறித்து கலாநிதி. சு. சிவரெத்தினம் அவர்கள் ஒரு முறையீட்டை அரங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். உரிய முறைப்பாட்டை முன்னதாகவே தாம் செய்தும் அதிகாரிகள் அதற்கு தாம் பொறுப்பல்ல என்று தட்டிக்கழித்ததாக அவர் கூறுகிறார்.
இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — இறுதிப்பகுதி
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான பரிந்துரைகள் கோரப்பட்ட நிலையில் மல்லியப்புசந்தி திலகரால் எழுதப்பட்ட தொடர் இது. இந்த இறுதிப்பகுதியில் புதிய அரசியலமைப்புக்கான சாத்தியம் குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கருக்கலைப்பிற்கான உரிமை – இன்று ஆர்ஜன்டீனா- நாளை இலங்கை?
ஆர்ஜன்டீனாவில் கடந்த டிசம்பர் 30 திகதியன்று “கருக்கலைப்புக்கான உரிமை” அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘பெண்களது உடல் பெண்களுக்கே உரிமை’ என்று வலியுறுத்தும் பெண்ணியச் செயற்பாட்டாளரான விஜி, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்.
முஸ்லிம்களின் மற்றும் தேசத்தின் நலன்களை ஒன்றாக நோக்கிய ஒரு முஸ்லிம் தலைவர்
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த தலைவரான ரி.பி. ஜாயா அவர்கள் அதேவேளை ஒட்டுமொத்த இலங்கை என்ற நாட்டின் நலனுக்காகவும் உழைத்தவர் என்பது பலரது கருத்து. இது அவரைப் பற்றிய ஒரு குறிப்பு.
புதிய அரசியலமைப்பு புதியனவற்றைத் தருமா?
இலங்கையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களின் தொடரில் இந்த வாரம் செய்தியாளர் கருணாகரன் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.
களுவன்கேணி வேடுவர்களின் வழிபாட்டு முறைகளில் குணமாக்கல்
கிழக்கின் பழம்பெரும் கிராமங்களில் ஒன்று களுவன்கேணி. கடற்கரைக்கிராமமான அது வேடுவ இன மக்களின் முக்கிய கிராமமாகவும் திகழ்கிறது. அங்கு வாழும் வேடுவர் மத்தியில் காணப்படும் வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் இன்றும் பலருக்கு உள மற்றும் உடற்சிகிச்சைகளை வழங்குவதாக நம்பப்படுகின்றது. அவை குறித்து ஆராய்கிறார் கமல் பத்திநாதன்.
யாழ். வைரமாளிகை: ஒரு அடையாளத்தின் சோகக் கதை
யாழ்ப்பாணத்தின் ஒரு உயிருள்ள அடையாளமாகத் திகழ்ந்த “வைரமாளிகை” என்ற ஒரு பல்சுவைக் கலைஞனின், ஊடகனின், பல பரிமாணம் கொண்டவரின் உண்மைக் கதை இது. ஆனால், முடிவு சோகமானது.