சொல்லத் துணிந்தேன் – 76
அதிகாரப்பகிர்வு குறித்த சீரிய சிந்தனை தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாதிருப்பதாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் நடவடிக்கைகள் குறித்தும் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.
மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்
ஆடைகளின் பாணியும் தோற்றமும் மாறுவது காலம் காலமாக நடந்து வருவதுதான். இந்த ஆடை ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா என்ற நியதியும் இருந்து பின்னர் அவை மாறிய வரலாறும் நாம் கண்டதுதான். அவற்றில் சில குறித்து தனது நினைவலைகளை மீட்டுகிறார் தபேந்திரன்.
போர்ட் சிட்டியும் பொருளாதார அறிவும்! ஏட்டுச்சுரக்காயும், நாட்டுச்சுரக்காயும்! — (காலக்கண்ணாடி 41)
கொழும்பில் அமையவுள்ள போர்ட்சிட்டியின் பொருளாதார அனுகூலங்கள் நேரடியாக மாத்திரமன்றி மறைமுகமாகவும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு உதவும் வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகிறார் அழகு குணசீலன். தனது வாத்துக்கான சில ஆதாரங்களையும் அவர் கடந்த கால நிலைமைகளில் இருந்து காண்பிக்க முனைகிறார்.
இலங்கை: மத நம்பிக்கையாளரும் விடுதலைச் சிந்தனையாளரும்
இலங்கையை பொறுத்தவரை மத நம்பிக்கை கொண்டவர்களும், மதத் தலைவர்களும், விடுதலை விரும்பியாக தம்மை காண்பித்துக்கொள்வோரும் ஜனநாயகத்தை நிராகரிப்பவர்களாகவே செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன். இதுவே பெரும்பாலும் ஏனைய தெற்காசிய சமூகங்களைப் போல் இலங்கையை படு பாதாளத்தில் தள்ளுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
புலம் பெயர்ந்த சாதியம்- 9
புலம்பெயர் தமிழர் மத்தியிலான சாதிய அடக்குமுறைகள் பற்றி இத்தொடரில் பேசிவரும் தேவதாசன் அவர்கள், வெள்ளாளியக் கருத்தியல் என்று கூறப்படும் விடயம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்கிறார். அது மனித நேயத்துக்கு புறம்பானது என்று அவர் வாதிடுகிறார்.
தமிழரின் இந்தியா குறித்த அணுகுமுறை – தொடரும் தவறுகள் (சொல்லத் துணிந்தேன்-75)
கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் தரப்பு இந்தியாவை அணுகிய முறைகளை கடுமையாக விமர்சிக்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர் கோபாலகிருஸ்ணன். இன்றும் கூட தமிழர் தரப்பு சில “மாயமான்களை” நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதே ஒழிய இந்த விடயத்தில் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பது அவரது கவலை.
இலங்கையின் தேவை போரைவிட இலகுவானது, பாதுகாப்பானது
பன்முகத்தன்மை நிராகரிக்கப்படுவதும் சமாதான முனைப்பு இல்லாமல் இருப்பதுமே இலங்கையின் முக்கிய பிரச்சினைகள் என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அவற்றின் மீது ஒட்டுமொத்த சமூகத்துக்கே அக்கறை இல்லை என்கிறார். ஆனால், அவற்றுக்கான பாதை போரைவிடப் பாதுகாப்பானது, இலகுவானது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
கூத்துக்கலையின் பிரமாண்டத்திற்கும் அப்பால் எஸ்.மௌனகுருவின் படைப்பு முகம்
கூத்துக்கலைக்கு அப்பாலான பேராசிரியர். சி. மௌனகுரு அவர்களின் இலக்கிய பங்களிப்புகள் சில குறித்து இங்கு ஆராய முனைகிறார் ஏ. பீர் முகம்மது.
வாழைச்சேனை ..! மற்றொரு கல்முனையா…..? (வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…) – காலக்கண்ணாடி -40
வாழைச்சேனை பிரதேச சபையில் அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் அங்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாதிடுகிறார் அழகு குணசீலன். மக்களுக்கான இரு வளர்ச்சித்திட்டங்கள் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் தடுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
நூலகப் பண்பாட்டை மறந்த தமிழர்
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 40 ஆண்டுகளின் பின்னரும், தொடர்ந்து புலம்புவதைத்தவிர, புதிய நூலகங்களை உருவாக்கும் நோக்கமும், நூலகப் பயன்பாட்டை அதிகரிக்கும் போக்கும் தமிழர் சமூகத்தில் மிகவும் மோசமாகக் குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். அதில் எவருக்கும் அக்கறை இல்லை என்பது அவரது கருத்து.
