1977 தேர்தலில் கூட்டணி செய்த குழப்பங்கள்: (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (28))
தனது சொந்த மண்ணின் நினைவுகளை இங்கு பகிர்ந்துவருகின்ற பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், 1977 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் அரசுக்கட்சியின் (தமிழர் விடுதலைக்கூட்டணி) குழப்பகரமான நடவடிக்கைகள் குறித்து மேலும் பேசுகின்றார்.
சொல்லத் துணிந்தேன் – 89
விடுதலைப்புலிகளின் முகவரல்லாத அமைப்புகள் இணைந்து 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டாவது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் பரிந்துரைத்த கோபாலகிருஸ்ணன் அவர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அமைப்புக்கள் அதில் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளை பரிந்துரைக்கிறார்.
இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை அங்கு பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தும் வருகின்றது. இதற்கான காரணங்களை ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்த நிலை தொடர்ந்தால் அது பேராபத்தை மாத்திரமல்லாமல் போராபத்தையும் ஏற்படுத்திவிடும் என்பது அவரது கவலை.
மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 3)
மாறிச்செல்லும் உலக அரசியல் சூழலும் ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் என்னும் தலைப்பிலான தனது இந்தத் தொடரில் சிவலிங்கம் அவர்கள், 20 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக பேசப்பட்ட பாசிசம், கம்யூனிஸம் மற்றும் லிபரல் ஜனநாயகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆராய்கிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7)
தடுமாறும் இலங்கைப் பொருளாதாரம் குறித்து எழுதிவருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், தென்னாசியாவில் பலமான பொருளாதாரமாக வர்ணிக்கப்படும் இலங்கைப் பொருளாதாரத்தின் உண்மை நிலைமையை விளக்குகிறார். அதன் பின்னடைவு நிலைக்கான காரணங்களையும் அவர் ஆராய்கிறார்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 7
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய நூலகம் தொடர்பாக தனது பரிந்துரைகளை எழுதி வருகின்ற மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள், இந்தப் பகுதியில் நூலகத்தில் அமையவேண்டிய சுவடிகள் காப்பகம் குறித்த தனது பரிந்துரைகளை முன்வைக்கிறார்.
உலக “சிப்பு” தட்டுப்பாடு!
உலகில் கொவிட் 19 கொண்டுவந்த பிரச்சினைகள் பல. அதில் ஒன்று இந்த “சிப்பு” பிரச்சினை. கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பல பிரச்சினைகளை நாம் கைகழுவி விட்டுள்ளோம். ஆனால், ஒரு காலத்தில் கடவுளாக மாறவுள்ள இந்த சிப்பு பிரச்சினை எப்படி முடியுமோ. இது ஒரு அரசியல் கட்டுரை அல்ல ஆனால், இதுவும் ஒரு அரசியல்தான்…
ஹேமாவின் பையன்! நான் மங்கள பேசுகிறேன்……! (காலக்கண்ணாடி 54)
அண்மையில் காலமான இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மங்கள சமரவீர அவர்களுக்கான அஞ்சலிக் குறிப்புகள் பல வகைப்பட்டவையாக தமிழர் வட்டாரங்களில் திகழ்ந்தன. இது அழகு குணசீலனின் அஞ்சலிக் குறிப்பு. ஆனால், பிறர் வார்த்தைகளில்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பகுதி 4)
தனது போராட்ட கால அனுபவங்களைப் பகிரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், காந்தியத்துடனான தனது அனுபவம், மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றியமை மற்றும் புளொட் அமைப்புடன் தொடர்பு ஆரம்பித்தமை ஆகியவை குறித்து இங்கு பேசுகிறார்.
அம்பாறை தமிழர் புறக்கணிப்பு ( சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 09)
யாழ் மேலாதிக்கத்தின் காரணமாக கிழக்கு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமது வாதங்களை முன்வைத்துவரும் எழுவான் வேலன், இங்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழ் தேசியவாதிகளின் புறக்கணிப்புகளால் எதிர்கொண்ட பிரச்சினைகளை பேசுகின்றார்.