கழுதைகள் (கவிதை)

மனிதனான தன்னை “கழுதை” என்ற வாத்தியாரும் கழுதைகளுக்கு பணிந்ததைப் பார்த்து குழம்பிப்போன மாணவன் (மனிதன்) கதை இது. பம்மாத்தாய் பரமசிவனின் கழுத்தேறத்துடிக்கும் கழுதைகளின் கதை இது. கவிதை வடித்தவர் சு. சிவரெத்தினம்.

மேலும்

இந்திய – அமெரிக்க படைகளும் // புலிகளும் – தலிபான்களும்..! (காலக்கண்ணாடி- 52)

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் குறித்த பலவிதமான ஒப்பீடுகள், ஆய்வுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியமை குறித்தும் ஒப்பீடு நடக்கின்றது. இவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்

மோசமான நிலையில் இருக்கும் இலங்கையின் பொருளாதார நிலமை குறித்து ஆராயும் அ. வரதராஜா பெருமாள் அவர்கள், சர்வதேச மட்டத்தில் ஒப்பிடுகையில் இலங்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலவரம் குறித்து இங்கு பகுத்தாய்கிறார்.

மேலும்

ருவாண்டா (இது கதையல்ல மெய்)

சிலவேளைகளில் உண்மைச் சம்பவங்கள் கதை போல அமைந்துவிடுவதும் உண்டு. இலங்கைக் கதையை முன்னால் போட்டு பின்னால் கொஞ்சம் கனவுக் காட்சிகளை சேர்த்துவிட்டால் ருவண்டாவின் கதை வந்துவிடும். அது படுமோசமான காட்சிகளில் ஆரம்பித்து அமைதிப் பூக்களில் முடியும். ஆனால், இது புனைகதையல்ல மெய்.

மேலும்

மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும்

உலக அரசியல் சூழல் அண்மைக்காலமாக பெரும்மாற்றத்தைக் கண்டு வருகின்றது. நவதாராளவாதத்தின் தோல்வி இதில் பெரும் பங்காற்றுகின்றது. இதே நிலைமை இலங்கையிலும் கணிசமாக காணப்படுகின்றது. இவற்றை ஒப்புநோக்க முயல்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை : ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – (பகுதி 02)

அரசியல் போராளியான யோகன் கண்ணமுத்து(அசோக்) அவர்கள் இந்தத் தொடரில் தனது அரசியல் பயண அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். தனது கிராமமான களுதாவளையில் தனது பதின்ம வயது அனுபவங்களை இன்று அவர் பேசுகிறார். செவ்வி கண்டு வழங்குபவர் தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-86

தம்மை தமிழ் தேசியக் கட்சிகளாக கூறிக்கொள்ளும் குறுந்தேசிய அமைப்புக்கள் தம்மை விடுதலைப்புலிகளின் பதிலிகளாக காட்டிக்கொள்ள முயலுவதால் அவர்களை எவரும் அங்கீகரிக்காத நிலை தொடர்வதாக வாதிடும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் மக்கள் ஆதரவு இந்த அமைப்புகளுக்கு கிடைத்த போதிலும் அவை பிரயோசனமற்று போவதாக கூறுகிறார். அதற்கு மாற்று என்ன என்பது குறித்து அவர் ஆராய முயல்கிறார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 06

வடக்கு நோக்கி வந்த மலையக தமிழர்கள் எதிகொள்ளும் பிரச்சினையைப் பேசும் தொடர் இது. வழமைபோல ‘இந்தப் பிரச்சினையை இப்போது பேசவேண்டுமா?’ என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கிவிட்டன. ஆனால், இதனை தொடர்ந்து உரத்துப் பேசவே “அரங்கம்” விரும்புகின்றது. அதற்கான அவசியத்தை நாம் உணருகின்றோம். வாய் மூடி இருப்பது ஒரு சமூகத்தையே மேலும் புறக்கணிப்புக்குள்ளாக்கிவிடும் என்பது எமது கருத்து. கருணாகரனும் அதனையே வலியுறுத்துகிறார்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! – 01

இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெயர் யோகன் கண்ணமுத்து (அசோக்). சிறுவயது முதலே பல்வேறுவகையான போராட்டங்களில் பங்கேற்ற இவர், ஆயுதப்போராட்டத்திலும் இருந்துள்ளார். ஆரம்பம் முதலே கண்ணியம் மிக்க போராளியாக அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் இவர், தனது சித்தாந்தங்கள் தொடர்பில் எந்தவிதமான சமரசமும் செய்ய மறுப்பவர். இவரது அரசியல் நேர்மையை அரங்கம் மதிக்கிறது. இவருடன் தேசம்நெற் ஆசிரியர் த. ஜெயபாலன் கண்ட செவ்வி இங்கு தொடராகப் பதியப்படுகின்றது.

மேலும்

இந்தியக் குடியுரிமை! இலங்கைத் தமிழ் அகதிகள் கள்ளத்தோணிகளா? (காலக்கண்ணாடி 51)

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரம் அவ்வப்போது சூடு பிடித்தாலும் பின்னர் அணைந்துபோகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற அகதிகள், அங்கு வதிவிட அந்தஸ்தை பெறுகின்ற போதிலும் பல தசாப்தகாலமாக இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் நிலை “திரிசங்கு சொர்க்கம்” தான். அவை குறித்த அழகு குணசீலனின் ஒரு பார்வை.

மேலும்

1 95 96 97 98 99 152