வங்குறோத்து நிலையை நோக்கி இலங்கை அரசு?
நாட்டில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை அரசாங்கம் வங்குறோத்து நிலையை அறிவிக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இப்படியான சூழ்நிலையில் மக்களுடன் ஒரு வெளிப்படைத்தன்மையுடனான உரையாடலை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஒரு மக்கள் ஒப்பந்தத்தை அரசாங்கம் கோர வேண்டும் என்றும் அவர் வயியுறுத்துகிறார்.
ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்
தமிழ் இனத்தைப் போல பல ஆதி இனங்கள் இன்று ஆபத்தில் இருக்கின்றன. அங்கு துயரமான கதைகள் பல இருக்கின்றன உலகுக்குச் சொல்ல. அழிவில் தப்பிய சில எச்ச சொச்சங்கள் உலகுக்கு கதையாகலாம். ஆனால், அவை சிக்கலான கதைகள். எமக்கும் சில இடங்களில் பொருந்திப்போகும் கதை. இதுவும் சிக்கலானது. ஆனால், இது ஒரு கதை, ஆனால், இது மெய். மெய்யான கதை. அகரன் கேட்டுப் பகிர முயலுகிறார்.
சொல்லத் துணிந்தேன்-90
சொல்லத்துணிந்தேன் பத்தியில் வெளியான சில கருத்துக்கள் குறித்து வாசகர் ஒருவர் இது பகிரப்பட்ட வட்ஸ்ஸப் குழு ஒன்றில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன்.
களம் (குறும்படம்)
“களம்” மட்டக்களப்பு மண்வாசம் மாறாமல் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுக் குறும்படம். படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், என்ன படிப்பது என்று தெரியாமல் தடுமாறும் இளைஞர்கள் மற்றும் எந்தப் பயிற்சி தமது தொழில் வாய்ப்புக்கு உதவும் என்று அறியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டி போல இது உருவாக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்க்கால விலை உயர்வும் மக்கள் துயரும்
ஒரு போர்க்காலம் போல தொற்றுநோய்க்காலத்தைப் பயன்படுத்தியும் பொருட்களை பதுக்கலும் விலையேற்றமும் இலங்கையில் மலிந்து காணப்படுகின்றன என்று கவலையுறும் கட்டுரையாளர், அவற்றை கவனிக்க வேண்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 8
மோசமடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்தப்பகுதியில் பேசுகின்றார். இலங்கை அரசாங்க வரிக்கொள்கையில் உள்ள பாதகங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 8
மட்டக்களப்பில் அமைந்துவரும் நூலகத்துக்கான சில பரிந்துரைகளை செய்யும் வகையில் இந்தத்தொடரை எழுதி வருகின்ற நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், நூலகத்தின் ஒரு ஆவணக்காப்பகம் செயற்பட வேண்டிய வழிவகை குறித்து இந்தப் பகுதியிலும் பேசுகின்றார்.
தமிழகம் துரோகம் இழைத்ததா….? தலைவர்கள் துரோகிகளா….? (காலக்கண்ணாடி – 55)
இலங்கைப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு தமிழக தலைவர்கள் மீது, குறிப்பாக கலைஞர் கருணாநிதி மீது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஆனால், அப்படியான குற்றச்சாட்டை முன்வைக்க ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தகுதி இருக்கின்றதா என்று இங்கு கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன். தமிழக அரசியல் அமைப்புக்களின் இலங்கைத்தமிழருக்கான உதவிகளை அவர் மட்டிடுகிறார்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்
ஒரு போராளியாக தான் கடந்துவந்த பாதை குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து(அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் தனது ஆரம்பகால அனுபவம், தனது காதல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.
பயனற்றுப்போகும் பொது முடக்கம்
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை மக்களும் பொருட்படுத்தவில்லை, அரசும் அதனை அமுல் படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. அதனால், அது பலனற்றுப் போவதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், இது பேரழிவுநிலைக்குள் தள்ளிவிடும் என்று அஞ்சுகிறார்.