தமிழரை கடவுளாவது காப்பாற்ற… (வாக்குமூலம்-35)
கடந்த காலங்களில் தமிழர் தலைமைகள் விட்ட தவறுகளை மக்கள் பொருட்படுத்தாததன் விளைவை மக்கள் இன்று அனுபவிப்பதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பின்னடைவு நிலையில் இருந்து விடுபட சில பரிந்துரைகளைச் செய்கிறார்.
முத்தம் (கவிதை)
ஒரு பெண்ணின் உணர்வும் அவதியும் இங்கு கவிதையாய்… ஆக்கியவர் கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வி. துஷாந்தினி.யோ.
தமிழ்த்தேசிய வீட்டுக்கு வெள்ளை அடிப்பதல்ல மாற்றுவழி… புல்டோசர் கொண்டு தகர்ப்பதே மாற்றுவழி..! (மௌன உடைவுகள் 05)
அண்மையில் அரங்கம் வாசகர் வட்டத்தில் பதியப்பட்ட ஆய்வாளர் நிலாந்தன் அவர்களின் கட்டுரை ஒன்று குறித்த அழகு குணசீலனின் பதில் கருத்து இது. நிலாந்தனின் கருத்துகளை இலவு காத்த கிளியின் நிலைக்கு அவர் ஒப்பிடுகிறார்.
‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கை மக்கள் தம்மை சீர் செய்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் வண சிவஞானம் யோசுவா. இவரின் கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு செவ்வி. வழங்குபவர் செய்தியாளர் கருணாகரன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-34
13 திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தமிழ்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் போதாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
கே.எஸ்.சிவகுமாரன் நினைவு
அண்மையில் காலமான பன்முகத்தகமை கொண்ட ஆளுமை கே.எஸ்.சிவகுமரனுக்கு செங்கதிரோன் எழுதும் அஞ்சலிக் குறிப்பு இது.
யாப்புத் திருத்தம் 22(22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள் (பகுதி 2)
இலங்கையின் அரசியலமைப்பு திருத்த முயற்சிகள் சில குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன எழுதிய ஒரு ஆக்கம். தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம். பகுதி 2.
‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ –காலனித்துவக் கல்விக்கொள்கைக்கு முண்டு கொடுக்கும் அடிமைச் சிந்தனை!
இலங்கையின் கல்வி முறைமை குறித்து அழகு குணசீலன் ஆரம்பித்து வைத்த இந்த உரையாடலில் ஜஸ்ரின் அவர்களின் கருத்துகளுக்கு பதிலான தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலனின் கருத்து இது.
வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்: மணிக்கு 32 பேர் வெளியேற்றம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பலமாக அதிகரித்துள்ளது. அரசாங்கமும்கூட ஓரளவு ஆட்கள் வெளிநாடு செல்வதை ஊக்குகிக்கின்றது. ஆனால், இந்த நிலை தொடர்வது ஆபத்தானது என்கிறார் ஸ்பார்ட்டகஸ்.
மட்டக்களப்பு மாந்தீவுக்கோர் பாலம் அமைப்போம்..! (மௌன உடைவுகள் -04)
மட்டக்களப்பு வாவியின் அழகிய தீவுகளில் ஒன்று மாந்தீவு. தொழுநோயாளருக்கான அபயத்தீவாக இதுவரை பயன்பட்டுவந்த அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. காடடர்ந்து கிடக்கும் அந்தத்தீவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற உடன் நடவடிக்கை தேவை என்கிறது ஒரு அறிக்கை. அழகு குணசீலன் அதுபற்றிய மௌனத்தை உடைக்க முனைகிறார்.
