எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர்
எஸ்.பொ அவர்கள் மறைந்து 7 ஆண்டுகள் கடப்பதை நினைவுகூரும் வகையில், அவரது படைப்புகள் பற்றிய ஏ.பீர் முகம்மது அவர்களின் ஆக்கத்தை அரங்கம் மீள் பிரசுரம் செய்கிறது.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 19)
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்த தனது தொடரில் கடந்த வாரம் இலங்கையின் அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்துப் பேசிய ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் வரவுள்ள ஒரு கற்பனை அறிக்கையே ஒழிய அதில் யதார்த்தமாக சாதிக்க எதுவும் தென்படவில்லை என்கிறார்.
மாசிலாமணி: இவர் “மாமனிதர்” அல்ல. எம்மோடு வாழ்ந்து வழிகாட்டிய “மனிதர்.”
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்வி உதவிப்பணிப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தம்பிமுத்து அலோசியஸ் மாசிலாமணி அவர்கள் காலமானார். அவரது நினைவுகள் குறித்த ஒரு குறிப்பு இது.
பஜ்ஜட் மறுவாசிப்பு…! (காலக்கண்ணாடி 63)
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் புதிய வரவு செலவுத்திட்டம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. பல விடயங்கள் குறித்தும் அவர் தனது விமர்சனங்களை முன்வைக்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (30)
தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டி வருகின்ற ஶ்ரீகந்தராசா அவர்கள், தான் கொழும்பில் பணியாற்றத்தொடங்கிய காலம், சிங்கள மக்களின் உபசரிப்பு, ஒரு இன வன்முறைகளுக்கான முஸ்தீபு ஆகியவை குறித்து இங்கு பேசுகின்றார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரத்தின் வீழ்ச்சி நிலை குறித்து எழுதி வருகின்ற பொருளாதார நிபுணர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் அடுத்து வரவுள்ள வரவு- செலவுத்திட்டத்தின் குறைகள் குறித்து விமர்சிக்கிறார். ‘எல்லோரும் ஏறி சறுக்கி விழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார்?’ என்பது அவர் கேள்வி.
மாதன முத்தாக்களின் கும்மாளம்
பானைக்குள் தலையை விட்ட ஆட்டை மீட்ட அறிவிலிகளின் நிலையில் ராஜபக்ஸக்களும், அவர்களுக்கு வாக்களித்த சிங்கள பெரும்பான்மையின மக்களும் இருப்பதாக கூறுகிறார் பத்தியின் ஆசிரியர். அரசாங்கம் தனது நுட்பமற்ற நடவடிக்கைகளால் நாட்டை சீரழித்திருப்பதாகவும், அவர்களுக்கு சிங்கள பேரினவாத நோக்கில் வாக்களித்த மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழரசுக்கட்சியும் அகிம்சையும் (சொல்லத் துணிந்தேன்—98)
தமிழரசுக் கட்சியின் போலியான அகிம்சைப் போராட்டங்கள் இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பல பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்தது என்கிறார் த.கோபாலகிருஸ்ணன். சில சம்பவங்களை உதாரணம் காட்டி அவர் அதனை விபரிக்கிறார்.
தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு!
தமிழருக்கு என்று ஒரு தனியான குணமுண்டு என்று சொல்லப்படுவது ஒரு பெருமையான வாக்கியம். ஆனால், உண்மையில் தமிழரிடம், குறிப்பாக இலங்கைத் தமிழரின் சில குணாதிசயங்கள், அந்த இனத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்கின்றன. செய்தியாளர் கருணாகரனின் பார்வை.
சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் !
அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் சுமந்திரனின் அமெரிக்க விஜயம் குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். அரங்கம் பத்திரிகையில் இருந்து.