தமிழ் முற்போக்குக் கூட்டணி: ஒரு முன்மாதிரி
தமிழ் முற்போக்குக் கூட்டணி தம்மை தேர்தல் ஆணைக்குழுவில் பதிந்துள்ளதை சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன், மக்களுக்கு தேவையானதை அந்தக் கட்சியினர் செய்துள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அப்படிச் செயற்படுவதற்கான ஜனநாயகம் இல்லை என்பது அவர் விமர்சனம்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (31)
தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்கள், தான் கொழும்பில் பணியாற்றிய போது இடம்பெற்ற இனக்கலவர நினைவுகளை பகிர்கிறார்.
உலக இயக்கம் (சிறுகதை)
உலக அழிவுகள், ஊரில் நடந்தவை அனைத்தையும் கடந்து உலகில் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இது வேறு மாதிரியான மனிதம். மனித மனம். அகரன் எழுதிய தஞ்சம் மறுக்கப்பட்ட ஒரு அகதியின் கதை இது..
சொல்லத் துணிந்தேன்-99 (மாற்று அரசியல் என்பது யாது?)
தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் தோல்விப்பாதையிலேயே சென்ற தமிழர் அரசியலுக்கு மாற்றாக ஒரு அரசியல் முயற்சியை முன்வைக்கிறார் கோபாலகிருஷ்ணன். அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்கு அல்லாமல் மக்களின் சமூக, பொருளாதார நலனை முன்னிறுத்தியதாக அது அமைய வேண்டும் என்கிறார் அவர்.
உணவுப் பிரச்சினையை தீர்க்க நிதானம் தேவை
இலங்கை மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகள் இன்று மிக முக்கிய பிரச்சினையாக உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அவற்றை எதிர்கொள்ள அரசாங்கங்கள் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது அவரது கருத்து.
இறுதி நொடி! இறுதி வெடி!
இப்படி ஒரு முடிவு எதிரிக்கும் வரக்கூடாது. ஆனால், பலருக்கு நமது மண்ணில் அது முடிந்தது. பூமியில் அமைதி மலர வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக இருக்கட்டும். புத்தம் புதிய பூமி எமக்கு வேண்டும். அகரனின் மனதில் நின்றுபோன சில எஞ்சிய உணர்வுகள், ஒரு புனைவாக…
புலிக்குணம்..! ஆப்பிழுத்த குரங்கும்..! வளர்த்தகடாவும்..!! (காலக்கண்ணாடி- 64)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கனடாவில் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட அமைதியீனம் குறித்த தனது விமர்சனங்களை முன்வைக்கிறார் அழகு குணசீலன். ஆப்பிழுத்த குரங்கின் நிலையாகவும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகவும் அவர் அதனைப் பார்க்கிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 20)
வீழ்ச்சி நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த தனது தொடரில் கடந்த இரு வாரங்களாக அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள், இந்த வாரம் அதைப்பற்றி மேலும் ஆழமாக அலசுகிறார், பொறியில் அகப்பட்ட நிலையில் இலங்கை பொருளாதாரம் இருப்பதை அது காண்பிப்பதாக அவர் கூறுகிறார்.
புளொட் கட்டுப்பாட்டுக்குழுவினுள் முளைவிட்ட குழுவாதமும் அதிகாரத்தின் மீதான மோகமும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்! – பாகம் 17)
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட்டின் கட்டுப்பாட்டுக்குழுவுக்குள் குழுவாதம் முளைவிடத்தொடங்கியது பற்றி பேசுகின்றார்.
தமிழ் சமூகத்தின் சுயமோக – சுய இன்ப அரசியலும் ஆய்வுகளும்
அரைத்த மாவையே தொடர்ந்து அரைக்கும் பாங்கில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ்ச் சமூகம் இருப்பது குறித்த தனது விமர்சனத்தை முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன். தமிழர் தமது சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலமிது என்கிறார் அவர்.