ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)
அண்மைக்கால ஆசிரியர் போராட்டம் குறித்த ஒரு பார்வை இது. இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மை, அதற்கான காலம் உட்பட பல விடயங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.
மேன்முறையீடு (சிறுகதை)
வரைபடத்தில் இலகுவில் தெரியாத ஒரு நாட்டில் இருந்துவந்து தஞ்சம் கோருவது ஒரு கொடுமைதான். அதிலும், அடுத்தவர் பற்றிய அக்கறையே இல்லாமல் இயங்கும் அதிகாரிகள் முன்பாக படும் அவஸ்தை இருக்கிறதே, அது ஒரு அவமானம். ஒரு இலங்கை அகதியின் மேன்முறையீட்டு அனுபவம் இது. நடந்தது பிரான்ஸில். அகரனின் சிறுகதை.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17
இலங்கையின் உணவு உற்பத்தித்திறனின் போதாமை குறித்து கடந்த வாரங்களில் பேசிய பொருளாதார வல்லுனர் வரதராஜா பெருமாள் அவர்கள், முன்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் பாதிப்புகளை வர்ணிப்பதுடன், அதேவேளை, அண்மைக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதியால் அமுல்படுத்தப்படும் இயற்கை விவசாய முயற்சியின் குறைபாடுகளையும் மதிப்பிடுகிறார்.
இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 15))
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து விபரித்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த அமைப்பின் கட்டமைப்பு செயற்பட்ட விதம் அதன் குறைபாடுகள் குறித்து விபரிக்கிறார்.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி: என்ன பிரச்சினை?
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது குறித்த ஜனாதிபதி செயலணி நியமனம் குறித்து பல தரப்பினராலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தக் கண்டனங்களில் பெரும்பாலானவை, அந்தச் செயலணிக்கான தலைவர் நியமனம் குறித்ததே ஒழிய அந்த ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற சித்தாந்தத்துக்கு எதிரானவை அல்ல என்கிறார் ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர். அந்தச் செயலணி நியமனம் குறித்த விடயங்களை அவர் இங்கு ஆராய்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 97
தாம் இணக்க அரசியலில் ஈடுபட்டு, அரச பதவிகளை அனுபவித்த காலங்களில் கூட தமிழ் தேசியக்கட்சியான தமிழரசுக்கட்சி உள்ளிட்டவை தமிழ் மக்களுக்காக எதனையும் வினைத்திறனுடன் பெற்றுத்தரவில்லை என்கிறார் கோபாலகிருஸ்ணன். மறைந்த அமைச்சர் அஸ்ரப் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணக்க அரசியல் மூலம் சாதித்ததில் ஒரு சிறிய அளவைக்கூட தமிழ் தேசியக்கட்சிகளால் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.
கலாபூஷணம் மர்ஹும் பீ.எம்.புன்னியாமீனின் இறுதிப் பொது நிகழ்வு
இலங்கையின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவரான அமரர் பீ. எம். புன்னியாமீன் அவர்களின் நினைவுதினம் இன்று. ஆக்க இலக்கிய முயற்சிகளில் மாத்திரமல்லாமல், ஆவணப்படுத்தல் முயற்சிகளிலும் கனதியாக உழைத்த அவருடனான தனது நினைவுகளை இங்கு பதிகிறார் மூத்த நூலியலாளர் என்.செல்வராஜா.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 12
தென்பகுதி வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் அங்கும் புறக்கணிக்கப்பட்டமை குறித்த இந்த தொடரை எழுதி வருகின்ற கருணாகரன், இந்த மக்களுக்கு உதவியவர்கள் என்று பார்த்தால் அவர்கள் கிறிஸ்தவ குழுக்களும், தமிழ் இயக்கங்களுமே என்கிறார்.
எருமைகள் (கவிதை)
எருமைகள் பிழைப்பு சேற்றில் உழல்வது. இயமனுடன் உறைதல். ‘பாசக்கயிறு வாழ்வைத்தருவது’ என்பது அவற்றின் சித்தாந்தம், அழிப்பதல்ல. ஆனாலும், சிவ தஞ்சம் மேன்மை தரும். இது சிவரெத்தினத்தின் வித்தியாசமான எருமை பற்றிய கவிதை. மனிதருக்கும் பொருந்தும்.
வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள்
கிழக்கிலே, குறிப்பாக படுவான்கரையில் கண்டல் தாவரக் காடுகள் அழிக்கப்படுவது குறித்த படுவான் பாலகனின் ஒரு குறிப்பை அண்மையில் பார்த்தோம். இது அதேபோன்ற முல்லைத்தீவு மாவட்ட நிலைமை. ஒட்டுமொத்த சமூகப் பொறுப்பின்மையே இதற்கு காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். காணி அதிகாரம் பற்றிப் பேசும் நாம் அது கிடைக்க முன்னரேயே காணிகளை அழித்துவிடுவோம் என்பது அவரது கவலை.