புது நெல்லு…. புது நாற்று…
சிறார் கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராயும் சிவா மு. ஈஸ்வரமூர்த்தி அவர்கள், சிறு நாற்றுக்களை நடல், அவற்றை பராமரித்து வளர்த்தல் என்பதன் அடிப்படையில் அவற்றை அலசுகிறார்.
‘குழப்பத்தால் இரு இடங்களில் முடிந்த பேரணி’ – (சொல்லத் துணிந்தேன் – 60)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ பேரணி குறித்த தனது விமர்சனங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை அது குழப்பங்களும், தடுமாற்றங்களும் நிறைந்ததாகவே இருந்தது என்று வாதிடுகிறார். சில கட்சிகளும் அதன் தலைவர்களும் மக்கள் போராட்டத்தை தமது சொந்த நலனுக்காக பயன்படுத்த முனைந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
ஜே வி பி : கோட்பாடுகளும், அரசியலும்
தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் ஆராய்ந்துவரும் சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் இலங்கையில் மூன்றாவது கட்சியாக இருக்கும் ஜே வி பி பற்றி ஆராய்கிறார். அதன் கட்டுமானம், செயற்பாடு ஆகியவற்றை தமிழர் விவகாரத்திலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் பொருத்தி அவர் ஆராய முயலுகிறார்.
இலங்கையில் பெரியார்
பெரியார் பற்றிய தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரது இலங்கைப் பயணம் பற்றியும், குறிப்பாக அவர் இலங்கையில் ஆற்றிய சிறப்பு மிகு உரை பற்றியும் விபரிக்கின்றனர்.
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கையின் பதில்
ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக குற்றச்சாட்டுக்களை மனித உரிமைகளுக்கு அப்பாலான இலங்கையை இலக்கு வைக்கும் நடவடிக்கை என்று இலங்கை அரசாங்கம் கூறுயுள்ளது. பெரிய வல்லரசுகளின் பலப்போட்டியில் அப்பாவி இலங்கை பலியாக்கப்படுவதாகவும் அது கோடிகாட்டியுள்ளது.
உள்வீட்டில் நடந்தாலும் குற்றம் குற்றமே…
சட்டவிரோதமாக மண் எடுப்பது என்பது இலங்கை எங்கிலும் பிரச்சினையாக உள்ள ஒரு விடயம். சட்டத்தில் இருந்து தப்புவதற்காக பலவிதமான புதிய யுக்திகளை கடத்தல்காரர்கள் கையாள்வதாக பத்தி எழுத்தாளர் குற்றஞ்சாட்டுகிறார். சில அபிவிருத்தி திட்டங்களின் பேரிலும் இவ்வாறு நடப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். உரியவர் கவனத்துக்கு…
இலங்கையை மிரட்டும் 5 நெருக்கடிகள்
இலங்கையில் அண்மைக்கால நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், அவற்றை 5 வகையாகப் பிரிக்கிறார். இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசியல் மாண்பும் தெளிவான தலைமைகளும் தேவை என்று அவர் வாதிடுகின்றார்.
விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து)
இலங்கையின் பல இடங்களிலும் உறவுகள் மற்றும் நண்பர்களைக் கொண்ட தபேந்திரன், தான் சென்ற இடமெல்லாம் விருந்துபசாரம் மாறுபடுவதையும், அதனை தான் எப்படி ரசித்தேன் என்றும் எம்மோடு பகிர்கிறார்.
“தூக்க விவாகரத்து” உங்கள் உறவைப் பாதுகாக்கட்டும்
தம்பதிகளில் ஒருவரின் நடத்தைக் குறைபாட்டால் அடுத்தவர் இரவுகள் அமைதியிழக்கும் பிரச்சினைகள் இன்று பெரிதும் பேசப்படுகின்றன. இவை தம்பதிகளின் உறவுக்கும் பாதகமாகிவிடுகின்றன. இதற்கான பரிகாரந்தான் இந்த “தூக்க விவாகரத்து”.
‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியல்’- (சொல்லத் துணிந்தேன்—59)
நடந்து முடிந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” ஊர்வலத்தின் பின்னணி குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் த. கோபாலகிருஸ்ணன். 1956 இல் தமிழரசுக் கட்சி நடத்திய “திருமலை யாத்திரை” என்ற ஊர்வலத்துடன் அதனை அவர் ஒப்பிடுகிறார்.