ஜெனீவா விவாதங்கள் : இலங்கை அரசு பெரும் ராஜதந்திர நெருக்கடிக்குள்?

ஜெனிவாவில் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையின் வாதங்கள் பலவீனமாக இருப்பதாக சில கருத்துக்கள் உள்ளூர் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அதற்கு அவை தற்போதைய ஆட்சியாளர்களை குறைகூறுகின்றன. அவற்றின் சாரத்தை சுருக்கமாகத் தருகிறார் சிவலிங்கம்.

மேலும்

மூன்று முடிச்சு : இது ஒரு அரசியல் வடமோடி நாட்டுக் கூத்து!!. (காலக்கண்ணாடி : 26)

தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்றில் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகசிறிதரன் கருத்து முன்வைத்தமை பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

“தில்லை” யின் “விடாய்”

படுவான்கரை மட்டக்களப்பு தமிழகத்தின் ஒரு பாரம்பரிய பிரதேசம். அங்கிருந்து பல அற்புதங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. அதில் ஒரு அதிசயம் “தில்லை” என்ற இந்தக் கவிதாயினி. அவரது “விடாய்” என்ற கவிதைத்தொகுதி அண்மையில் வெளியாகியுள்ளது. அது குறித்த பிரான்ஸ் விஜியின் அறிமுகம்.

மேலும்

‘உலக மக்களின் வரலாறு’ (நூல் அறிமுகம்)

உலக வரலாற்றை, உலக மக்களின் வரலாற்றை ஆண்டவர்களின் நோக்கில் அல்லாமல் பொதுமக்களின் பார்வையில் கூறமுயலும் ஒரு நூல் “உலக மக்களின் வரலாறு”. கிறிஸ் கார்மனின் நூலை தமிழில் தந்தவர் ச. சுப்பாராவ். அது குறித்த அகரனின் பார்வை இது.

மேலும்

13வது திருத்த அமலாக்கலை கோரவேண்டிய பேரணிகள் (சொல்லத் துணிந்தேன் – 61)

இலங்கை அரசியலில் தமிழர் போராட்டங்களை 4 காலங்களாக பிரித்து விளக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறார். அத்துடன் எமது அடுத்த கட்டப் போராட்டங்கள் 13வது அரசியலமைப்பு மாற்றத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றாவது கோரவேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

மேலும்

காதல் நிலவு ஊர் திரும்ப 45000 ஆண்டுகள் (சிறுகதை)

ஒரு விஞ்ஞான அகதியும், நம் ஊர் அரசியல்(?) அகதியும் சந்தித்த கதை இது. இதுவும் ஒரு காதல் கதைதான். ஆனால், எழுத்தாளர் அதனை சத்தியம் செய்து மறுக்கிறார். படித்து பாருங்கள் நிலவின் கதை புரியும். காதல் ரசமும் இனிக்கும்.

மேலும்

தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை

தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் நீண்ட பட்டியலை முன்வைக்கும் கட்டுரையாளர் அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதேவேளை, அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும் அவர் எதிர்வுகூறுகிறார்.

மேலும்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத்திட்டம்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. அவை பற்றிய விபரங்கள்.

மேலும்

த்ருஷ்யம் – 02 : முன்னதிலும் சிறப்பு

முன்பு மலையாளத்தில் த்ருஷ்யம் என்ற பெயரிலும் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் வந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்த ஆரதியின் விமர்சனம்.

மேலும்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்

ஜேவிபியின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் அதன் தொடர்ச்சியாக, ஜேவிபியின் சில குழப்பமான கொள்கைகள் எவ்வாறான சிக்கலுக்குள் அந்தக் கட்சியை வைத்திருக்கிறது என்பது குறித்து விபரிக்கிறார்.

மேலும்