உணர்ச்சி — அறிவு ஓர்து துறவி (சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ளல்) – பகுதி – 02
சுவாமி விபுலாநந்தரின் தமிழ் மொழி மீதான பார்வை எத்தகையது, அது அவரது வாழ்வுக்காலங்களில் மாற்றம் கண்டதா என்பதை ஆராய்கிறார் பேராசிரியர் மௌனகுரு. ஆரம்பத்தில் அவரது எழுத்துக்கள் தமிழுணர்ச்சி மேலிட்டமையாக இருந்த போதிலும் காலக்கிரமத்தில் அவை அறிவுசார் ஆய்வுகளாக மாறின என்பது அவரது கருத்து. தமிழர் வரலாறு, தமிழ் உணர்வின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான வரலாற்றுக் காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்து தனது கருத்தை பேராசிரியர் வலியுறுத்துகிறார்.
இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 27))
தனது சொந்த ஊரின் நினைவுகளை எழுதிவரும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசியலில் இன்றுவரை பேசப்பட்டுவரும் இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் குறித்த தனது நினைவுகளை இங்கே பதிகிறார்.
உணர்ச்சி– அறிவு– ஓர் துறவி (சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ளல்) – 01
சுவாமி விபுலாநந்தரின் தமிழ் மொழி மீதான பார்வை எத்தகையது, அது அவரது வாழ்வுக்காலங்களில் மாற்றம் கண்டதா என்பதை ஆராய்கிறார் பேராசிரியர் மௌனகுரு. ஆரம்பத்தில் அவரது எழுத்துக்கள் தமிழுணர்ச்சி மேலிட்டமையாக இருந்த போதிலும் காலக்கிரமத்தில் அவை அறிவுசார் ஆய்வுகளாக மாறின என்பது அவரது கருத்து. தமிழர் வரலாறு, தமிழ் உணர்வின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான வரலாற்றுக் காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்து தனது கருத்தை பேராசிரியர் வலியுறுத்துகிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 03
வன்னியில் குடியேறியவர்களைப் பொறுத்தவரை மலையக மக்களும் மறுபுறம் வடக்கே யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களும் அடக்கம். அதில் யாழ் மக்களுக்கு நிலம், நீருடன் கூடவே அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட, மலையக மக்களுக்கு இவை எதுவும் கிடையாது. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது. அரசியல் பிரதிநிதித்துவமும் கிடையாது. தொடர்ந்து நிலைமையை வர்ணிக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘எல்லோருக்கும் பிடித்தவன்’ (சிறுகதை)
கீழைத்தேய ஆன்மீகம் சில வேளைகளில் மேற்கத்தைய உறவுகளின் கெட்ட பழங்கங்களை அகற்ற உதவுகின்றது. சிலவேளை அவை உணர்விழந்த உறவுகளை மீட்கவும் வேண்டும். இவனுக்கும் இப்போது அது தேவைப்படுகின்றது. காதலால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துபோட. அகரனின் சிறுகதை.
THE PEN & THE GUN! : தமிழர் அரசியலில் ஊடக சுதந்திரம்(?) (காலக்கண்ணாடி 48)
என்ன இருந்தாலும் யார் எதனைப் பற்றி பேசலாம் என்ற ஒரு விடயம் முக்கியமானதுதான். ஊடகவியலை, ஊடகவியலாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சிந்தனையின் வழி வந்தவர்கள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது தற்காலக் கொடுமையாகிவிட்டது. சில காரணங்களுக்காக புனைபெயரில் எழுதுவது ஊடகவியலின் ஒரு தேவைதான். ஆனால், மொட்டைக்காகித பாணியில் அடுத்தவர் மீது சேறு பூசவும், தனிநபர் தாக்குதல் நடத்தவும் முகமூடி அணிந்து “ஊடுருவி” வருவது கேவலம். ஆயுதத்தால் அமைதியாக்கப்பட்ட ஊடகப்போராளிகளுக்கு அழகு குணசீலனின் சமர்ப்பணம் இது.
நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 02
இலங்கை முயற்சிக்கவுள்ள நவீன நாணயக் கோட்பாடு குறித்த அடிப்படைத்தகவல்களை முதலாவது பகுதியில் விளக்கிய ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்கள், இந்த முறைமை இலங்கையின் சூழ்நிலைக்கு பொருந்துமா என்பதை இங்கு மதிப்பிடுகிறார்.
நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அங்கு வித்தியாசமான பொருளாதார திட்டங்களை முயற்சித்துப்பார்க்கும் நிலைக்கு அரசாங்கத்தை தள்ளியுள்ளது. அதிகளவு நாணயத்தை அச்சிட்டு அதனை உள்ளூரில் முதலீடு செய்யும் வகையிலான நவீன நாணயக்கோட்பாடு என்னும் முறையை நோக்கி இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதாக கூறப்படுகின்றது. சில நாடுகளில் பலன் தந்த இந்த முறை இலங்கைக்கு பயந்தருமா? ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
எறும்பு அணிவகுப்பு! (கவிதை)
எறும்புக்கும் ஒரு போக்கு இருக்கிறது. மனிதனைப்போல அது ஓடுவதில்லை. ஒழுங்கு தவறுவதில்லை. ஆனால், மனிதன் தடுமாறுகிறான். தான் சிரமத்தில் இருக்கும் போது மாத்திரமல்ல, அதிகாரம் கிடைக்கும் போதும் அவன் தடுமாறுகிறான். ஏற்றம் இறக்கம் பார்க்கிறான். அடுத்தவன் தலையாட்ட எதிர்பார்க்கிறான். அவன் ஓட்டம் மாறவேண்டும் என்கிறார் சிவரெத்தினம். தடுமாற்றம் தவிர்க்க வேண்டும் என்கிறார். அவரது சிறு கவிதை.
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01
இலங்கையில் இடதுசாரிகளின் கடந்த காலம், அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். ‘இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர்’ என்கிறார் அவர்.
