சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (10)
“கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.” – என்ற வள்ளுவரின் வாக்குக்கமைய உழைத்த தனது ஊர் இளைஞர்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார் புலம்பெயர்ந்து, தனது ஊரைத் திரும்பிப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.
ஊடகவியலாளர் பிரியத் லியனகே காலம் ஆகினார்
மூத்த செய்தியாளரும் கலைஞருமான பிபிசி சந்தேசியவின் முன்னாள் ஆசிரியர்
பிரியத் லியனகே காலமானது குறித்த ஒரு அஞ்சலிக் குறிப்பு.
சொல்லத் துணிந்தேன் – 40
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்கள் என வாதிடுகிறார் அரசியல் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் …. பகுதி 7
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாறென்பது யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு மாத்திரமல்ல. அதில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களதும் இஸ்லாமிய மக்களதும் வரலாறும் இருக்க வேண்டும் என்பதனையே மட்டக்களப்பில் வெளியான முக்கியமான சில, ‘சாதி – இன வரலாற்று நூல்கள்’ மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் பேசுவதாக கூறுகிறார் பேராசிரியர் சி. மௌனகுரு.
ஊர் திரும்புதல் – கருகிய கனவு
புலம்பெயர் மக்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் ஒரு கனவு “ஊர்திரும்புதல்”. அது அவர்கள் மனதில் ஒரு அவதியும்கூட. தற்போது அதற்கு வாய்ப்பாக பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. ஆனால், யதார்த்தம் என்ன? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)
“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு: ‘அ’ முதல் ‘ஒள’ வரை – (பாகம் 1)
இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அவை குறித்து மக்கள் மத்தியில் வி. சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலந்துரையாடலில் இணைகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார ஆர்வலருமான மல்லியப்புசந்தி திலகர்.
எங்கள் ஊரை இசையால் மகிழ்வித்த காந்தி குடும்பம்
ஒவ்வொரு ஊரிலும் வெளியில் தெரியா சுவைதரு கனிகளாக பலர் இருந்துவிட்டுப் போவதுண்டு. வேறு இடங்களில் இருந்து வந்து எங்கள் ஊருக்கு அழகு சேர்த்தவர்களும் பலர். அப்படியான ஒரு இசைக்குடும்பத்தின் கதை இது. வழங்குபவர் கலாபூசணம் “அரங்கம்” இரா. தவராஜா.
நேர்முகத் தேர்வு- (சிறுகதை)
சபீனா சோமசுந்தரம் தரும் மற்றுமொரு நம்பிக்கைக் கதை. போதைப்பொருள் தடுப்பு குறித்த அவசியத்தை பேசுகிறது.
திசைதெரியாத பயணம் –(சிறுகதை)
புலம்பெயர்ந்த எல்லோருக்கும் வாழ்க்கை சுகமாக இருப்பதில்லை. குறிப்பாக தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சென்ற பலரது நிலைமை இன்றும் திரிசங்கு சொர்க்கம்தான். முடிவு தெரியா, திசை தெரியா வாழ்க்கை அங்கு. அதில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை பேசுகிறது இந்தப் புனை கதை.