மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 2

மட்டக்களப்பில் வளர்ந்துவரும் புதிய நூலகக் கட்டிடம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற வகையில் தனது கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் மூத்த நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், இந்தப் பகுதியில் நூலீட்டல் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் – 6

இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்கள் மத்தியில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசும் தேவதாசன், இந்த பகுதியில் இங்கு கலாச்சாரம் என்ற போர்வையில் சாதியமும் பெண்ணொடுக்கு முறையும் பேணப்படுவதாக விமர்சிக்கிறார். அவரது அனுபவம் தொடர்கிறது.

மேலும்

பிராங்கோய் க்ரோஸ்! தமிழ்த்தாய் தத்தெடுத்த தற்கால வீரமாமுனிவர்! (காலக்கண்ணாடி 37)

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த வெளிநாட்டு அறிஞர்களில் இருவரது பெயர் என்றும் மறக்க முடியாதவை. அவர்களில் பிராங்கோய் க்ரோஸ் அவர்களின் பணிகள் பற்றி நினைவுகூருகிறார் அழகு குணசீலன்.

மேலும்

மாகாணசபை குறித்த பொறுப்புணர்வின்றி தேர்தலுக்கு தயாராகும் தரப்புகள்

பலநூறு போராளிகளின் தியாகத்தில் உருவான மாகாண சபையை மக்களுக்கு பயன் உள்ளதாக்குவதற்கான எந்தவிதமான பொறுப்பும் அற்றவையாக வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டும் செய்தியாளர் கருணாகரன், ஆனால், தமது சொந்த நன்மைக்காக மாத்திரம் அவை இப்போது தேர்தலுக்கு தயாராவதாகவும் கூறுகிறார்.

மேலும்

‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’

காடழிப்பு, மண் அகழ்வு, நீர்த் திட்டமின்மை போன்ற பல காரணங்களால் யாழ்ப்பாணம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனமாக மாறிவருவதாக சூழலியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இவற்றுக்கு நாமே காரணமாக இருக்கிறோம். பாலையில் சோலை காண அவசர நடவடிக்கை அவசியம் என்கிறார் இந்த பத்தி எழுத்தாளர்.

மேலும்

பெருநாள் உடுப்பு (சிறுகதை)

நோன்பும், அதனைத்தொடர்ந்த பெருநாளும் புனிதமானவை. சிலவேளைகளில் எதிர்பாராதவர்களிடம் இருந்து கிடைக்கும் பெருநாள் பரிசும் புனிதமாகிவிடுவதுண்டு. நிம்மதியையும், சுகந்தத்தையும் அவை தந்துவிடும்.

மேலும்

ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும்

புதிதாகப் பதிப்பிக்கப்படும் நூல்களைக் கூட பிடிஎஃவ் வடிவில் பலர் இலவசமாக பகிருவதால் தமிழ் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் துயரம், அதன் பின்னணியில் உள்ள சட்டச் சிக்கல்கள் ஆகியவற்றை ஆராய்கிறார் மூத்த நூலகவியலாளர் என். செல்வராஜா.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (23)

அரசாங்க அதிகாரிகள் பொது அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பல விடயங்கள் சில நேரங்களில் சிக்கலுக்குள்ளாகி விடுவதுண்டு. ஆனால், அவற்றை தார்மீக அடிப்படையில் நியாயமாக செய்து முடிக்க தாம் மேற்கொண்ட சில முயற்சிகள் பற்றி இங்கு விபரிக்கிறார் ஶ்ரீகந்தராசா.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – 70

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்தே கோபாலகிருஸ்ணன் அவர்கள் இந்த சொல்லத்துணிந்தேன் 70 இலும் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். கல்முனை விவகாரத்தை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த எவரும் முயலக்கூடாது என்பது அவரது வாதம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 69

மீண்டும் சூடுபிடித்திருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்த கடந்தகால நிகழ்வுகள் சிலவற்றை விளக்கியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன்வைக்கிறார்.

மேலும்