13வது திருத்தத்தின் தேவையை வலியுறுத்தும் கடந்தகால நிகழ்வுகள்
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான கலுபகே ஒஸ்ரின் பெர்னாண்டோ அவர்கள், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்புச் செயலர், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பல நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியவர். இலங்கையின் அரச நிர்வாகம் குறித்த பரந்த அறிவும், அனுபவமும் உள்ள அவர் இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் குறித்த வரலாற்றை நன்கு அறிந்தவர். இங்கு 13வது திருத்தம் இலங்கையில் சந்தித்த சவால்களை அவர் ஆராய்கிறார். தமிழில் வி. சிவலிங்கம்.
இணக்க அரசியலில் இருக்கின்ற இடக்கும் முடக்கும்! (காலக்கண்ணாடி 34)
தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் உறுப்பினர்களில் சிலர் இணக்க அரசியல் குறித்துப் பேசுவதை எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றுள்ள அழகு குணசீலன், இணக்க அரசியலை முன்னெடுக்க ஏதுவான ஒரு சக்தியாக புதிதாகத் தோன்றியுள்ள “அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை” சமாந்தரமாக வரவேற்கிறார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் தூரம் அதிகம்தான் என்றாலும் அது அடையப்பட இணக்க அரசியல் உதவலாம் என்கிறார் அவர்.
கிழக்கில் உதித்து மலையகத்தில் மறைந்த ஒரு கவிஞன்
‘கண்டவை என்னுள்ளே கருத்தரித்தால் அதைக் கவிதையாய்த் தொகுத்தளிப்பேன்’ என்று பாடிய நீலாபாலன் கிழக்கு மாகாணத்தில் பிறந்து மலையகத்தில் மறைந்த ஒரு கவிஞர். ‘பாவையர் சதையினிற் காவியம் தேடிடும் பாவலர் வைரியும் நான்’ என்று பாடிய அவர், ‘அப்பன் உரம் போட ஆயி கொழுந்தெடுப்பாள் அதுதானே இதுவரை எம் சரித்திரம்’ என்று தொடங்கி மலையக தொழிலாளர் துயரையும் பாடியவர். அவர் பற்றிய செங்கதிரோனின் குறிப்பு.
தமிழர் போராட்டத்தை ஏன் சீனா, ரஷ்யா, கியூபா ஆதரிப்பதில்லை? (சொல்லத் துணிந்தேன்—68)
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ் இனத்தின் போராட்டத்துக்கு அமெரிக்க போன்ற முதலாளித்துவ நாடுகள் ஆதரவு தந்தாலும் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற கருத்தை ஆராய்கிறார் கோபாலகிருஸ்ணன்.
“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப் பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி…
தாவர நாற்றுகளுக்கு ஏனைய இடங்களில் தங்கியிருப்பதை தவிர்க்க ஒரு நாற்று மேடைப் பண்ணையை ஆரம்பித்துள்ளார் கமலி என்று அழைக்கப்படும் சு. கமலேஸ்வரன். இயற்கைத் தாவர வளர்ப்பு முறையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி எதிர்காலத்தில் மூத்த குடிகளுக்கான சுதந்திர கிராமம் ஒன்றை இலக்காகக் கொண்டது. அவரது அனுபவம் இது.
புலம் பெயர்ந்த சாதியம் – 4
புலம்பெயர்ந்த மண்ணில் சாதிபார்த்தலின் கொடுமைகள் பற்றிய அனுபவங்களை பேசும் தேவதாசன், உட்சாதி பார்ப்பது, பிரதேச அடிப்படையில் அந்தஸ்து பார்ப்பது ஆகியவற்றை இங்கு குறிப்பிடுகிறார். அதேவேளை, சாதியால் காதலை வெல்ல முடியாமல் போன பல சம்பவங்களையும் அவர் சொல்லி மகிழ்கிறார்.
வடக்கில் இருந்து உதவிக்கு வந்த உறவுகள் — (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 22))
மட்டக்களப்பு மக்கள் நெருக்கடி நிலை ஒன்றில் இருந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்து உறவுகள் உதவிக்கு ஓடிவந்த ஒரு நிலைமையை இங்கு நினைவுகூருகிறார் ஶ்ரீகந்தராசா. வடக்கை சேர்ந்த சில அருமையான அதிகாரிகளையும் அவர் இங்கு சொல்ல மறக்கவில்லை.
சித்திரை ஊஞ்சலும் போர்த் தேங்காயும்
ஊஞ்சல் ஆடல், போர்த்தேங்காய் ஆகியன சித்திரை வருடத்துடன் சேர்ந்த சிறப்பான தமிழர் ஆட்டங்கள். அவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. இலங்கையின் கிழக்குக் கரையில் இவை அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் பிரபலமானவை. தனது ஊர் அனுபவத்தை இங்கு விபரிக்கிறார் பால. சுகுமார்.
என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)
அரச எதிர்ப்பு, அரச ஆதரவு அரசியல் இங்கு தமிழர் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், சரியானதை ஏற்று, பிழையானதை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்து அதனூடாக ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
ஓய்வுபெற்ற ஒற்றன்? (சிறுகதை)
‘நானே அரசன்’ என்று சுயபட்டம் கட்டுபவர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காட்டாத சில பரம்பரைகளும் மறைந்திருப்பது இந்த உலகத்தின் புதுமை. புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் மிகச்சிலருக்கு இப்படியான புதுமையான அனுபவங்கள் இன்ப அதிர்ச்சியை தருவதும் உண்டு. அகரனின் சிறுகதை.