தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை
தமிழர் அரசியலில் அண்மைக்கால நிகழ்வுகள் பெரும் பண்டிகைக்கால பட்டாசுகள் போல வெடிக்கத்தொடங்கியுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் வெடி சுடுகின்றனர். இதனால் ஏற்படும் தோற்ற மயக்கம் இங்கு மக்களுக்கு பெரும் மாயக்காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஆனால், அவை வெளித்துத்துலங்க “தூரம் அதிகமில்லை” என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
“வாக்குமூலம்” (பகுதி 01)
வாக்குமூலம் என்ற தலைப்பில் புதிய அரசியல் பத்தித் தொடரை ஆரம்பித்திருக்கும் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள், ரெலோ அமைப்பினால் அழைக்கப்பட்டு நடத்தப்படும் சில தமிழ் கட்சிகளின் சந்திப்பு குறித்து சுமந்திரன் அவர்கள் விமர்சித்திருப்பதையும், அந்த சந்திப்பையும் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்.
2022ம் ஆண்டு தரும் புதிய நோக்கு
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அதேநேரம் கடந்த ஆண்டு நமக்கு பல பாடங்களையும், படிப்பினைகளையும் தந்து சென்றிருக்கிறது. அவற்றை பாடமாகக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி இலங்கை மக்கள் நகர்வதானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களின் பார்வையும் பரிந்துரையும் இங்கு.
கடவுள்: ஒரு கருத்து மோதல்! (காலக்கண்ணாடி – 69)
இவ்வருடத்தின் இறுதிக் காலக்கண்ணாடி இது. இந்த வருட இறுதியில் இது கடவுள் குறித்த ஒரு பார்வையை, குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் கடவுள் குறித்து உருவாகிவரும் ஒரு பார்வையை உங்கள் முன்வைக்கிறது. ஒருவரின் உயிர் வாழ்வதற்கான உரிமை குறித்து பேசிய “கடவுள்” என்ற திரைப்படத்தை மையமாக வைத்து இதனை மட்டிட்டிருக்கின்றார் அழகு குணசீலன். அது உங்கள் பார்வைக்கு.
சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்? (பாகம் 21) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)
புளொட் அமைப்பில் முக்கிய புள்ளியான சந்ததியார் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தப் பகுதியில் பேசுகிறார் யோகன் கண்ணமுத்து(அசோக்).
தமிழ்த்தேசிய சுயவிமர்சனம்! தடம்புரண்டது வண்டி..! புரட்டியது மக்களா..? சாரதியா…? (காலக்கண்ணாடி 68)
இலங்கையில் தமிழ் தேசியத்தில் காணப்படும் பலவிதமான குறைகள் குறித்து கடந்த பல வருடங்களாக எமது அரங்கம் பத்திரிகை கனதியாக சுட்டிக்காட்டி வந்தது. ஆனால், ஆரம்பத்தில் அவற்றை புறக்கணித்துவந்த தமிழ் தேசியத்தலைவர் இன்று அதற்கு செவிமடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சுயவிமர்சன பாணியிலான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய அழகு குணசீலனின் கருத்து இது.
சகோதரத்துவம் (சிறுகதை)
இலங்கையில், குறிப்பாக கிழக்கில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் கற்பனை பண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு குலைந்து போயிருக்கின்றன. ஆனால், இப்படியும் அந்தச் சமூகங்களுக்கு இடையில் நெருக்கமான ஒரு உறவு இருந்ததா என்று இன்றைய தலைமுறை கேட்கும் அளவுக்கு உன்னதமான உறவும் அங்கு மிக அண்மைவரை இருந்திருக்கிறது. அப்படியான ஒரு உன்னத உறவு சங்கடத்துக்கு உள்ளான தருணம் இது. செங்கதிரோனின் சிறுகதை.
புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!! (பாகம் 20) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)
புளொட் அமைப்புடனான தனது தொடர்புகள் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து(அசோக்), அந்த அமைப்பை காப்பாற்றியிருக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை தவறவிட்டது குறித்து இங்கு பேசுகின்றார்.
கிழக்கின் நூறு சிறுகதைகள்: உலை வாயை மூடலாம்… (காலக்கண்ணாடி 67)
கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தலைப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பு முயற்சி பற்றி சில விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி (இறுதி) 23))
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் இந்தத் தொடரை 23 பகுதிகளாக எழுதிவந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வரும் மற்றும் பொருளாதார, அரசியல் ஆய்வாளருமான அ.வரதராஜா பெருமாள் அவர்கள் இந்தப் பகுதியுடன் அதனை பூர்த்தி செய்கிறார். இலங்கையின் பொருளாதாரம் குறித்து மிகவும் அவசியமான ஒரு காலப்பகுதியில், துலாம்பரமாக விபரித்து அவர் எழுதிய இந்தத்தொடர் இலங்கையின் பொருளாதாரம் குறித்து அறிய விரும்புவோருக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒரு முக்கிய ஆவணம். எமது ‘அரங்கம்’ தளத்தின் ஊடாக அவர் இதனை பிரசுரிக்க அனுமதித்தமைக்கு எமது நன்றிகள். அவருடன் இணைந்து பணியாற்றக்கிடைத்ததால் நாம் பெருமையடைகின்றோம்.
