‘எல்லோருக்கும் பிடித்தவன்’ (சிறுகதை)

கீழைத்தேய ஆன்மீகம் சில வேளைகளில் மேற்கத்தைய உறவுகளின் கெட்ட பழங்கங்களை அகற்ற உதவுகின்றது. சிலவேளை அவை உணர்விழந்த உறவுகளை மீட்கவும் வேண்டும். இவனுக்கும் இப்போது அது தேவைப்படுகின்றது. காதலால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துபோட. அகரனின் சிறுகதை.

மேலும்

THE PEN & THE GUN! : தமிழர் அரசியலில் ஊடக சுதந்திரம்(?) (காலக்கண்ணாடி 48)

என்ன இருந்தாலும் யார் எதனைப் பற்றி பேசலாம் என்ற ஒரு விடயம் முக்கியமானதுதான். ஊடகவியலை, ஊடகவியலாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சிந்தனையின் வழி வந்தவர்கள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது தற்காலக் கொடுமையாகிவிட்டது. சில காரணங்களுக்காக புனைபெயரில் எழுதுவது ஊடகவியலின் ஒரு தேவைதான். ஆனால், மொட்டைக்காகித பாணியில் அடுத்தவர் மீது சேறு பூசவும், தனிநபர் தாக்குதல் நடத்தவும் முகமூடி அணிந்து “ஊடுருவி” வருவது கேவலம். ஆயுதத்தால் அமைதியாக்கப்பட்ட ஊடகப்போராளிகளுக்கு அழகு குணசீலனின் சமர்ப்பணம் இது.

மேலும்

நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 02

இலங்கை முயற்சிக்கவுள்ள நவீன நாணயக் கோட்பாடு குறித்த அடிப்படைத்தகவல்களை முதலாவது பகுதியில் விளக்கிய ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்கள், இந்த முறைமை இலங்கையின் சூழ்நிலைக்கு பொருந்துமா என்பதை இங்கு மதிப்பிடுகிறார்.

மேலும்

நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அங்கு வித்தியாசமான பொருளாதார திட்டங்களை முயற்சித்துப்பார்க்கும் நிலைக்கு அரசாங்கத்தை தள்ளியுள்ளது. அதிகளவு நாணயத்தை அச்சிட்டு அதனை உள்ளூரில் முதலீடு செய்யும் வகையிலான நவீன நாணயக்கோட்பாடு என்னும் முறையை நோக்கி இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதாக கூறப்படுகின்றது. சில நாடுகளில் பலன் தந்த இந்த முறை இலங்கைக்கு பயந்தருமா? ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.

மேலும்

எறும்பு அணிவகுப்பு! (கவிதை)

எறும்புக்கும் ஒரு போக்கு இருக்கிறது. மனிதனைப்போல அது ஓடுவதில்லை. ஒழுங்கு தவறுவதில்லை. ஆனால், மனிதன் தடுமாறுகிறான். தான் சிரமத்தில் இருக்கும் போது மாத்திரமல்ல, அதிகாரம் கிடைக்கும் போதும் அவன் தடுமாறுகிறான். ஏற்றம் இறக்கம் பார்க்கிறான். அடுத்தவன் தலையாட்ட எதிர்பார்க்கிறான். அவன் ஓட்டம் மாறவேண்டும் என்கிறார் சிவரெத்தினம். தடுமாற்றம் தவிர்க்க வேண்டும் என்கிறார். அவரது சிறு கவிதை.

மேலும்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

இலங்கையில் இடதுசாரிகளின் கடந்த காலம், அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். ‘இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர்’ என்கிறார் அவர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 83

அண்மையில் தமிழர் வட்டாரங்களில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்துக்காட்டி தனது கருத்துக்களை முன்வைக்கும் ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புத் தலைவர்கள் எத்தனை காலந்தான் தமிழர்களை ஏமாற்றுவார்? என்று கேள்வியெழுப்புகிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 06

‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?’ என்னும் சிவலிங்கம் அவர்களின் பதிவுக்கு தனது பதில் கருத்துக்களை முன்வைத்துவரும் எழுவான் வேலன், யாழ் மேலாதிக்கத் தலைவர்களின் யதார்த்தத்துக்கு புறம்பான, உணர்ச்சியூட்டும் போராட்டங்கள் சாதாரண தமிழ் மக்களை எவ்வாறு சிரமத்தில் தள்ளியது என்று விளக்க முயலுகிறார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02

தென்னிலங்கை வன்செயல்களால் இடம்பெயர்ந்து வடக்கே தமிழர் பகுதி நோக்கி வந்த மலையக மக்கள் அங்கு ஏமாற்றமடைந்த நிலையை பதிவு செய்யும் செய்தியாளர் கருணாகரன், அவர்கள் நம்பி ஏமாந்தது, இயந்திரங்கள் போல் மேலும் பல தலைமுறைகள் வாழ்ந்ததை இங்கு பேசுகிறார்.

மேலும்

‘விபுலானந்த இயல்’ எனும் கல்விசார் துறை தேவை

விபுலானந்த அடிகளாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இங்கு பதியப்படும் கட்டுரை 11 ஆண்டுகளுக்கு முன்னதாக அருள் செல்வநாயகம் அவர்களின் “விபுலானந்த இலக்கியம்” நூல் வெளியீட்டில் “செங்கதிரோன்” ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ‘விபுலானந்த இயல்’ என்னும் கல்விசார் துறையொன்று எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு வலியுறுத்துகிறார்.

மேலும்