நெஞ்சம் இருண்டிருக்கிறது! உதடு அசைகிறது! அல்லது- ‘புதிய மொந்தையில் பழைய கள்’

ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களின் சாதியும் பிரதேசவாதமும் குறித்த பதிவு மற்றும் அதற்கு பதிலாக எழுவான் வேலனால் முன்வைக்கப்படும் கருத்துகள் ஆகியவை குறித்து தனது கருத்துக்களை இங்கு முன்வைக்கிறார் “தூ” இணையத்தின் ஆசிரியர் அசுரா. முன்கூறியர்வர்களின் பதிவுகளை வாசகர்கள் அரங்கம் இணையத்தில் பார்வையிட முடியும். (arangamnews.com)

மேலும்

WHO IS THIS LADY….? கிழக்கில் பெண் அரசியல் தலைமைத்துவம்…..! (காலக்கண்ணாடி 47)

தமிழ் தேசிய அரசியல் இன்னமும் பெண்களை, அவர்கள் உரிமைகளை மதிப்பதில்லை என்று சாடுகிறார் பத்தியின் ஆசிரியர் அழகு குணசீலன். முழுமையாக அரசியலில் ஈடுபட முனையும் பெண்களைக் கூட அது ஒதுக்கி வைக்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு. பெண்கள் புறக்கணிப்பை தமிழர் அரசியல் கைவிட வேண்டும் என்கிறார் அவர். ஆனால், மாதர் தம்மை இழிவு செய்யும் போக்கு அதன் தலைவர்கள் மத்தியில் இன்னமும் தொடர்கிறது…

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் 11

போரால் புலம்பெயர்ந்த தமிழர் தாம் புகுந்த இடங்களிலும் சாதி பேணும் அவலம் குறித்து எழுதி வருகின்ற தேவதாசன், காலங்காலமாக கேள்விகள் மறுக்கப்பட்ட இளைஞர் மத்தியில் தமிழ் தேசியவாதம் ஒரு நச்சு போல ஊடுருவி விட்டதாக கவலை கொள்கிறார்.

மேலும்

பஷிலின் வருகை: அரசாங்கத்தின் செல்நெறியில் மாற்றத்தைக் காட்டும் ஒரு குறியீடு?

இலங்கை அரசியலின் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மற்றுமொரு முக்கியஸ்தரான பஷில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்கு திரும்பி வருவது குறித்து பலவிதமாக கருத்துகள் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மூத்த ஆய்வாளரான எம்.எல்.எம். மன்சூர் அவர்களின் கருத்து இது.

மேலும்

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 5

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நூலகம் எப்படி அமைதல் உசிதமாகும் என்று தனது கருத்துக்களை பதிந்துவரும் மூத்த நூலகர் என். செல்வராஜா அவர்கள், இங்கு பத்திரிகை/ சஞ்சிகைப் பிரிவின் அமைவு குறித்து பேசுகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 82

கிழக்கு அரசியல் குறித்து ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்து தனது பார்வையை இந்த பத்தியில் முன்வைக்கிறார் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன். இந்த விடயம் குறித்த சிவலிங்கம் அவர்களின் இரு பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்துக்களை கோபாலகிருஸ்ணன் முன்வைக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 26)

தனது சொந்த ஊரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், சி.மூ.இராசமாணிக்கம் மற்றும் தந்தை செல்வா ஆகியோர் காலமான பின்னர் பட்டிருப்பிலும் இலங்கை மட்டத்திலும் தமிழர் அரசியலில் நடந்த சில மாற்றங்கள் பற்றி இங்கு பதிவு செய்கிறார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்)

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இது தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் தொடக்கி வைக்கிறது.)

மேலும்

அமிர்தலிங்கம் ஒரு இணையற்ற தலைவர் (சொல்லத் துணிந்தேன் -81)

இலங்கைத் தமிழர் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அமரர் அ. அமிர்தலிங்கம் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டு 32 வருடங்கள் ஓடிவிட்டன. அவரது படுகொலை ஒரு வரலாற்றுத் துரோகம் என இந்த பத்தியின் ஆசிரியர் கூறுகிறார். பலவிதமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஒரு உன்னதமான தமிழ்த் தலைவராக அவர் திகழ்ந்ததாக “அரங்கம்” அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

மேலும்

ஒன்லைன் வகுப்பு (சிறுகதை)

கொவிட் 19 புதிது புதிதான தேவைகளை மக்களுக்கு உருவாக்கியிருக்கிறது. அந்த தேவைகள் காரணமாக சில எதிர்பாரா பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அவற்றை கையாளத்தெரியாமல் அவர்கள் தவிப்பதும் உண்டும். அப்படியான ஒரு கதை இது.

மேலும்