‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 03)

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்காக தமிழ் கட்சிகள் சில நடத்திய சந்திப்புக்களை தோல்விச் சந்திப்புகள் என்று விபரிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இவை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு முயற்சி என்கிறார்.

மேலும்

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும் (தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா)

தைப்பொங்கல் என்பது ஒரு மத விழா அல்ல, அது தமிழரின் உலக விழா என்று கூறும் சிவரெத்தினம், அது சூரியனுக்கு மட்டுமானது அல்ல, அது இயற்கையை வணங்குவது என்கிறார். தைப்பொங்கலின் உன்னதத் தன்மையை அவர் ஆராய்கிறார்.

மேலும்

காலத்தை வென்று வாழும் கலை இலக்கியவாதி அன்புமணி, இரா.நாகலிங்கம்

தமிழ் கலை இலக்கிய உலகில் ‘அன்புமணி’ என்ற பெயரில் அறியப்பட்ட மறைந்த இரா. நாகலிங்கம் அவர்களின் 8வது நினைவு தினம் அனுட்டிக்கப்படுவதை முன்னிட்டு, அவருக்கு பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் செய்யும் நினைவாஞ்சலி இது. அரங்கமும் தனது அஞ்சலியை அவருக்கு செலுத்துகிறது.

மேலும்

திறன்நோக்கு (நூல் மதிப்பீடு) “கிழக்கின் சிறுகதைகள்” (நோக்கு- 02)

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “கிழக்கின் 100 சிறுகதைகள்” என்னும் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளை இந்தப் பத்தியில் திறன்நோக்குச் செய்கிறார் செங்கதிரோன். இங்கு இரண்டாவது கதைக்கான மதிப்பீடு இடம்பெறுகின்றன. கலந்தர் லெப்பை முகமது ஷா (கே.எம்.ஷா) எனும் இயற்பெயர் கொண்ட மர்ஹும் பித்தன் எழுதிய கதை ‘பாதிக்குழந்தை’ என்ற கதை.

மேலும்

கடிதம் எழுதும் முயற்சி: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான இன்னொரு கதை

இந்தியப் பிரதமருக்கு தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து தமிழ் கட்சிகள் சில எடுத்த முயற்சி, ஒரு கடிதத்தை இறுதி செய்துள்ளதாக தெரிகின்ற போதிலும் தமிழ் கட்சிகளின் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை என்ற பலவீனம் அதனை இப்போதே ஒரு வீண் முயற்சியாக்கிவிட்டதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

தமிழ்த்தேசிய அரசியல்..! தலையெழுத்தும்..! கையெழுத்தும்..!! (காலக்கண்ணாடி – 70)

தமிழர் விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் உலகெங்கிலும் இருந்து வரும் கருத்துகள் கூறு செய்திகள் என்ன என்பதை இங்கு தனித்தனியாக ஆராய முயல்கிறார் அழகு குணசீலன். அவர் பாணியில் அவர் அவற்றை இங்கு பகிர்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-02 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் சில சந்தித்து நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து விமர்சித்து வருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், இப்போது அந்த சந்திப்பு “கறையான் புற்றெடுக்க பாம்பு வந்து குடியேறிய” நிலையை எட்டிவிட்டதாக கூறுகிறார்.

மேலும்

போர் இலக்கியம்: கற்பனைக்கு ஒரு வேலையும் இல்லை

நவீன போர் இலக்கியங்கள் தமிழில் மிகக்குறைவு. வெளிவந்தவையும் பெரிதாகப் பேசப்படவில்லை. இலங்கைப் போர் குறித்து ஆரம்பத்தில் வெளிவந்த ஒரு போர் பற்றிய பதிவை இங்கு மீட்டுப் பார்க்கிறார் அகரன். “போர் இலக்கியம் கொண்டாடுவதற்கல்ல, போரின் கொடுமையை சொல்வதற்கு” என்ற அவரது கருத்தை அரங்கமும் ஏற்கிறது. இது விடிவிற்கு முந்திய மரணங்கள் பற்றியது.

மேலும்

பாகம் 22 தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!)

புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்க்ள், அதில் நடந்த ஒரு பெண் மீதான பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து இங்கு பேசுகின்றார்.

மேலும்