தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம்
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் சில அரசியல் தலைவர்களின் சொந்த அனுபவமும் மன்னிக்கும் மனப்பாங்கும் சில நன்மைகளை கோடிகாட்டியுள்ளன. ஆகவே இந்த விடயத்தை பேசிக் குழப்பாமல், புத்திசாலித்தனமாகக் கையாண்டு ஏனைய கைதிகளின் விடுதலைக்கும் வழி செய்ய வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
புலம் பெயர்ந்த சாதியம் 10
இலங்கையில் ஆரம்பத்தில் தமிழர் மத்தியில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓரளவு நடந்த போதிலும் 80களில் சிங்கள அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகள் அனைத்தையும் பேரினவாதத்துக்கு எதிரான திசையில் மாத்திரம் திருப்பி விட்டதாக கூறுகிறார் தேவதாசன்.
தலைமை மாடு முன்னால்……. பட்டி பின்னால்…….! (காலக்கண்ணாடி – 43)
இலங்கை விடயத்தில் அண்டை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் தமது நலன்களை முன்வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றன. ஆனால், சர்வதேச சமூகத்தை உரிய வகையில் அணுகத்தெரியாமல் தமிழர் தரப்பு எல்லாவற்றையும் கடந்த காலம் போல குழப்பிக்கொள்வதாக விமர்சிக்கிறார் அழக் குணசீலன்.
குற்றமும்- தண்டனையும் (சிறுகதை)
ஒழுக்கமாக இருக்க நினைப்பவர்களைக் கூட சில வேளைகளில் சந்தர்ப்பங்கள் குற்றவாளிகளாக மாற்றிவிடுகின்றன. மனதில் இருக்கும் வக்கிரம் சில நேரங்களில் தலைகாட்டி விடுகின்றது என்றும் இதனைச் சொல்லலாமோ? அகரனின் சிறுகதை.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 4
மட்டக்களப்பில் ஒரு நூலகம் அமைக்கப்படும் சூழ்நிலையில், ஒரு நூலகம் அமைய வேண்டிய விதம் குறித்த தனது அவதானங்களை தொடர்ச்சியாக எழுதிவரும், நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், இந்தப்பகுதியில் கட்டட அமைப்பு பிரத்தியேகமான பிரிவுகளுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும்
அதிகார பகிர்வின் மூலம் மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பறிக்கும் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாக தொடரும் நிலையில், அவற்றை தமிழ் தலைமைகள் கண்டும் காணாததுபோல இருப்பதாக பத்தியின் ஆசிரியர் கவலை தெரிவிக்கின்றார். உரிய புத்திசாலித்தனத்துடன் பதில் நடவடிக்கை எடுக்க தமிழ் தலைமைகள் தவறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
‘கங்கா மாதா பொய் சொல்வதில்லை’ – (மறைக்கப்பட்ட இந்திய கொவிட் மரணங்கள்)
கொவிட் தாக்கம் பற்றிய செய்திகளை இந்திய மத்திய அரசாங்கம் மறைப்பதாக பல தரப்பாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதனை அந்த நாட்டின் மோடி அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. ஆனால், இந்தியாவின் புனித நதிகளில் முக்கியமான கங்கா நதி இந்தத்தடவை மோடியை காட்டிக்கொடுத்துவிட்டதாக கூறுகிறார் இந்தக் கட்டுரையாசிரியர்.
Lockdown காலக் காட்சிகள்
இலங்கையில் Lockdown கால நிலவரங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. குறிப்பாக சாமான்ய மக்கள் பெரும் அழுத்தங்களுக்குள் வாழும் நிலை. அதேவேளை, அரச நிர்வாக மட்டங்களில் விடப்படுகின்ற நடைமுறைத்தவறுகள் சாமான்ய மக்களை மேலும் சிக்கல்களுக்குள் தள்ளுகின்றன. இவை குறித்த தனது கவனத்தை பிரதிபலிக்கிறார் பத்தியின் எழுத்தாளர்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 02
“பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?” என்ற தலைப்பில் சிவலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கான தனது பதில் கருத்தை தொடர்ச்சியாக பதிந்துவரும் எழுவான் வேலன், தனது இரண்டாவது பகுதியாக இதனை பதிகிறார். இரு பிரதேசங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் அவர், காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் யாழ். மேலாதிக்கவாதிகளால் கிழக்கு பாதிக்கப்பட்டதாக வாதாடுகிறார்.
களவெட்டி (கவிதை)
இது வெறுமனே ஒரு விவசாயியின் கவலை மாத்திரமல்ல. ‘எதை நோவேன்? விவசாயியையா? வெட்டு மெசினையா? விளைவித்த வயலையா? அல்லது என் வக்கையா?’ சு.சிவரெத்தினத்தின் கவிதை பேசட்டும்.