ஒரு பெண் இன்னொருவருக்காக இடுவதல்ல திலகம். அது அவளுக்கானது. அவளது உரிமை. எவராலும் அழிக்க முடியாதது என்கிறார் துஷாந்தினி.
Category: கவிதைகள்
அம்மணம் (கவிதை)
அம்மணம் (கவிதை)
துஷாந்தினியின் கவிதை. ஒரு பதத்துக்கு பல பொருள் இருக்கலாம். அம்மணம் என்ற பதத்துக்கான அருமையான விளக்கம்.
முத்தம் (கவிதை)
ஒரு பெண்ணின் உணர்வும் அவதியும் இங்கு கவிதையாய்… ஆக்கியவர் கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வி. துஷாந்தினி.யோ.
என் செய்வோம்! என் செய்வோமே!
‘கனக்ஸ்’ என்று நண்பர் வட்டாரங்களில் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த சமூகச் செயற்பாட்டாளர், நண்பர் எஸ்.பி.கனகசபாபதி அவர்கள் கனடாவில் காலமானார். கனக்ஸ் ஒரு மிகச் சிறந்த சமூக சேவையாளராவர். கனடா தமிழ் கலாச்சாரச் சங்கம், உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் – கியூபெக், சுவாமி விபுலாநந்த கலை மன்றம், பாடும் மீன்கள் சமூகம், சிடாஸ், எமது சமூகம் என்று பல பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றியவர். மட்டக்களப்பு தமிழகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
அவருக்கு செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் சமர்ப்பிக்கும் அஞ்சலி இது. அரங்கம் இந்த அஞ்சலியில் தானும் இணைகின்றது.
போவோம்! புதியதோர் உலகை நோக்கி…!
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 12,13,14 நவம்பர் 2021 தினங்களில் இணையவழியாக (ZOOM) சங்கத் தலைவர் மருத்துவர் வஜ்னா ரஃபீக் தலைமையில் நடத்திய ‘எழுத்தாளர் விழா 2021’ இன் இரண்டாம் நாள் நிகழ்வில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் “புதியதோர் உலகை நோக்கி….” எனும் தலைப்பில் இடம்பெற்ற ‘பன்னாட்டுக் கவியரங்கு’ நிகழ்ச்சியில் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் (இலங்கை) படித்த கவிதை.
எருமைகள் (கவிதை)
எருமைகள் பிழைப்பு சேற்றில் உழல்வது. இயமனுடன் உறைதல். ‘பாசக்கயிறு வாழ்வைத்தருவது’ என்பது அவற்றின் சித்தாந்தம், அழிப்பதல்ல. ஆனாலும், சிவ தஞ்சம் மேன்மை தரும். இது சிவரெத்தினத்தின் வித்தியாசமான எருமை பற்றிய கவிதை. மனிதருக்கும் பொருந்தும்.
‘கவிதை கேளுங்கள்’
சமூக ஊடகக் குழு ஒன்றில் கவிதை இலக்கியம் குறித்து நடந்துவருகின்ற உரையாடல் தொடர் ஒன்றில் ‘கவிதையின் வடிவம்’ என்னும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் மூலப்பிரதி இது.
முகமூடிகள் (கவிதை)
இது முகமூடிகளின் காலம். எல்லாரும் அணிந்திருப்பது முகமூடி. முகமூடி இல்லாமல் இருந்து, இந்த முகமூடிகளால் மேடையில் இருந்து இறக்கப்பட்டவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. சிவரெத்தினத்தின் கவிதை.
கனவு காணுங்கள் (கவிதை)
பல பொருட்களுக்கு இலங்கை அரசு இறக்குமதி தடைவிதித்தமை பலரையும் விசனத்துக்குள்ளாக்கி உள்ளது. தனது கவிதையில் அங்கதத்துடன் இணைந்த சோகத்துடன் “ஜட்டி” என்று பரவலாக அழைக்கப்படும் ஆண்களின் உள்ளாடை மீதான இறக்குமதித் தடையை விமர்சிக்கிறார் றியாஸ் குரானா.
ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா? (கவிதை)
கொரொனா என்றொரு தொற்றுநோய் நம்மை நமக்கே அன்னியப் படுத்தியதை எண்ணி மனம் கனக்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா. படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்று ஐந்தொழில் செய்யும் ஆண்டவன், தன்பணியை ஒரு தொழிலாய் சுருக்கியது ஏன் என்பது அவர் ஆதங்கம்.