உங்கள்
மங்கலப் பொருள்களுள்
வெள்ளைச் சேலைகள்
ஏற்கப்படுமன்றுதான்
உலகில்
அமங்கலச் சொல்
அர்த்தப்படும்
மறுமணம் வேண்டுமா?
செய்துகொள்
உன் மனதின்படி
அதற்குமுன் புரிந்துகொள்
அது அமங்கல மாற்றியல்ல
என்பதை
நீ
சில சமயங்களில்
அமங்கல ஓசைகள்
அயலவர் சங்குகளிலிருந்துதான்
புலப்படுத்தப்படுகின்றன
அவை அவர்களின்
மூக்குகளின் கீழே
பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
வலதுகைச் சேவையை
மங்கலமாய் காண்போரே!
மறந்துவிடாதீர்கள்
இடதுகை பழக்கமுள்ளவர்களும்
இவ்வுலகில்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விதவை தயாரித்த
வளையல்
மங்கலப் பொருளானது
வளைகாப்பு விழாவில்
__
செல்வி.துஷாந்தினி.யோ
பாரதிபுரம், கிளிநொச்சி.