இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்த தனது தொடரில் கடந்த வாரம் இலங்கையின் அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்துப் பேசிய ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் வரவுள்ள ஒரு கற்பனை அறிக்கையே ஒழிய அதில் யதார்த்தமாக சாதிக்க எதுவும் தென்படவில்லை என்கிறார்.
Category: தொடர்கள்
பஜ்ஜட் மறுவாசிப்பு…! (காலக்கண்ணாடி 63)
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் புதிய வரவு செலவுத்திட்டம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. பல விடயங்கள் குறித்தும் அவர் தனது விமர்சனங்களை முன்வைக்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (30)
தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டி வருகின்ற ஶ்ரீகந்தராசா அவர்கள், தான் கொழும்பில் பணியாற்றத்தொடங்கிய காலம், சிங்கள மக்களின் உபசரிப்பு, ஒரு இன வன்முறைகளுக்கான முஸ்தீபு ஆகியவை குறித்து இங்கு பேசுகின்றார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரத்தின் வீழ்ச்சி நிலை குறித்து எழுதி வருகின்ற பொருளாதார நிபுணர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் அடுத்து வரவுள்ள வரவு- செலவுத்திட்டத்தின் குறைகள் குறித்து விமர்சிக்கிறார். ‘எல்லோரும் ஏறி சறுக்கி விழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார்?’ என்பது அவர் கேள்வி.
தமிழரசுக்கட்சியும் அகிம்சையும் (சொல்லத் துணிந்தேன்—98)
தமிழரசுக் கட்சியின் போலியான அகிம்சைப் போராட்டங்கள் இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பல பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்தது என்கிறார் த.கோபாலகிருஸ்ணன். சில சம்பவங்களை உதாரணம் காட்டி அவர் அதனை விபரிக்கிறார்.
ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)
அண்மைக்கால ஆசிரியர் போராட்டம் குறித்த ஒரு பார்வை இது. இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மை, அதற்கான காலம் உட்பட பல விடயங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17
இலங்கையின் உணவு உற்பத்தித்திறனின் போதாமை குறித்து கடந்த வாரங்களில் பேசிய பொருளாதார வல்லுனர் வரதராஜா பெருமாள் அவர்கள், முன்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் பாதிப்புகளை வர்ணிப்பதுடன், அதேவேளை, அண்மைக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதியால் அமுல்படுத்தப்படும் இயற்கை விவசாய முயற்சியின் குறைபாடுகளையும் மதிப்பிடுகிறார்.
இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 15))
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து விபரித்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த அமைப்பின் கட்டமைப்பு செயற்பட்ட விதம் அதன் குறைபாடுகள் குறித்து விபரிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 97
தாம் இணக்க அரசியலில் ஈடுபட்டு, அரச பதவிகளை அனுபவித்த காலங்களில் கூட தமிழ் தேசியக்கட்சியான தமிழரசுக்கட்சி உள்ளிட்டவை தமிழ் மக்களுக்காக எதனையும் வினைத்திறனுடன் பெற்றுத்தரவில்லை என்கிறார் கோபாலகிருஸ்ணன். மறைந்த அமைச்சர் அஸ்ரப் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணக்க அரசியல் மூலம் சாதித்ததில் ஒரு சிறிய அளவைக்கூட தமிழ் தேசியக்கட்சிகளால் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 12
தென்பகுதி வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் அங்கும் புறக்கணிக்கப்பட்டமை குறித்த இந்த தொடரை எழுதி வருகின்ற கருணாகரன், இந்த மக்களுக்கு உதவியவர்கள் என்று பார்த்தால் அவர்கள் கிறிஸ்தவ குழுக்களும், தமிழ் இயக்கங்களுமே என்கிறார்.
