இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
Category: தொடர்கள்
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 2
புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் எவ்வகையான பங்களிப்பை முன்வைக்க வேண்டும் என்று ஆராயும் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் குறும் தேசிய வாதமும் ஒன்றை ஒன்று சார்ந்து செயற்படுவதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எச்சரிக்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (9)
அவுஸ்திரேலியாவில் இருந்து எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் எழுதும் இந்தத்தொடரில், இந்த வாரம் அவர் தாம் தமது ஊரில் எம்ஜிஆர் மன்றம் அமைத்த கதையைப் பகிர்கிறார்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-6)
‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்பில் வாழும் பல சமூகங்கள் பற்றி வெளியான சில நூல்கள் பற்றி பேசுகிறார். அதனை யாழ்ப்பாண நிலைமைகளுடன் அவர் ஒப்புநோக்குகின்றார்.
சொல்லத் துணிந்தேன்—38
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் போலியானவை என்று வாதாடும் இந்தப் பத்தியை எழுதும் கோபாலகிருஷ்ணன், தமிழ்க்கட்சிகளின் இலக்கு தமது உயர் வர்க்க நலனே என்கிறார்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-5)
‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த யாழ். வேளாளரால் அங்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிப் பேசுகிறார் அவர். முஸ்லிம்களின் அசைவியக்கும் குறித்தும் அவர் குறிப்பிடுகிறார்.
காலக்கண்ணாடி: 08
இந்தியாவை தவிர்த்து ஐ. நாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பால் எவற்றைச் சாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன்.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1
அரசியல் யாப்பு என்பது தேசத்தின் அடிப்படைச் சட்டங்களை இயற்றுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் வாழும் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விவாதங்களை இந்தக் கட்டுரைத்தொடரில் முன்வைக்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (8)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்டும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் இந்த வாரமும் தனது பள்ளிக்கூட நினைவுகளைத் தொடர்கிறார்.
படுவான் திசையில் : ‘நம்மட உயிரை பணயம் வைத்துத்தான் மாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையாலும் ஏனைய பிரச்சினைகளாலும் மாடுகளை மேய்க்கும் விவசாயிகள் படும் சிரமங்கள் குறித்து தனது பத்தியில் இந்த வாரம் பேசுகிறார் ‘படுவான் பாலகன்’.
