தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்போராட்ட இயக்கங்களின் இளைஞர்கள் ஆகியோர் தமிழர் உரிமைகளுக்காக செய்த தியாகங்களை புறக்கணித்துக்கொண்டு, தமது சுய அரசியல் லாபங்களுக்காக சித்து விளையாட்டுக்களை செய்வதை தமிழ் தலைமைகள் இன்னமும் தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன்.
Category: கட்டுரைகள்
இலங்கையின் யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரிய வைக்க அரசியல் தலைமைகள் இன்னமும் தயாரில்லை
இலங்கையில் நாடாளுமன்ற பதவி நிலைகள் மற்றும் பொறுப்புகளை மாற்றிய பின்னரும் இன்னமும் நெருக்கடி நிலை குறையவில்லை என்று சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன், நாட்டின் யதார்த்த நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் இன்னமும் முன்வரவில்லை என்கிறார். இது மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என்பது அவர் கவலை.
இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை தாயே?
இலங்கையில் கண்ணகி வழிபாட்டின் சடங்குகள் நடக்கும் காலம் இது. குறிப்பாக மட்டக்களப்பில் பல இடங்களில் பத்ததிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன. அதனை முன்னிட்டு, துலாஞ்சனன் எழுதும் ஒரு குறிப்பு இது. மீட்கப்பட்ட சிலைகளின் பின்னணி குறித்து இதில் அவர் பேசுகிறார்.
வைகாசு – “நாங்கள் சொல்வதைத் கேட்காவிட்டால், எங்கள் ஏகபோகத்தை ஏற்காதுவிட்டால் அவர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்” (காலக்கண்ணாடி 88)
வைகாசி மாதம் இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமானது. பல முக்கிய சம்பவங்கள் அந்த மாதத்திலேயே நடந்துள்ளன. ஆனால், பெரும்பாலானவை படுகொலைகள். அவை இலங்கை தமிழர் அரசியலில் பெருத்த பின்னடைவுக்கு காரணமாகியுள்ளன. ஆராய்கிறார் அழகு குணசீலன்.
கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்!
மாஸ்டர் சிவலிங்கம் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் தலைசிறந்த சிறார் கதை சொல்லி மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். அண்மையில் காலமான அவர், வில்லுப்பாட்டுக்கலையை இலங்கையில் அறிமுகம் செய்தவர். பல்துறைக் கலைஞரான அவர் பற்றி செங்கதிரோன் எழுதும் நினைவுக்குறிப்பு இது.
நேட்டோ விரிவாக்கம்! ஐரோப்பாவில் ஒரு மத்தியகிழக்கு! (?) (காலக்கண்ணாடி 87)
உக்ரைன் மீதான ரஸ்ய போரை அடுத்து உலக அரங்கில் பல மாற்றங்கள் வெளிப்படையாகவே நடந்து வருகின்றன. அவற்றில் சில முக்கிய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவை நோக்கி நகர்வதையும் குறிப்பிட முடியும். இவை உலக ஒழுங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சம்பந்தனிடம் சில கேள்விகள் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-16)
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் நிலைப்பாடுகள் ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடுவதாகக் குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவை குறித்து அந்த அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார்.
ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா?
புதிதாக எவரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க குறித்த பலதரப்பட்ட கருத்துக்களுக்கு மத்தியில் கருணாகரன் முன்வைக்கும் கருத்து இது. ரணில் அதிர்ஸ்டசாலி போலத் தென்பட்டாலும் அவரது வெற்றி மக்கள் ஆதரவிலும், கண்காணிப்பிலுமே இருக்கிறது என்கிறார் அவர்.
ரணிலின் மறுபக்கம்..! (காலக்கண்ணாடி- 86)
இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னணி குறித்து இலங்கையிலும் உலக மட்டத்திலும் தற்போது அதிகமாக பேசப்படுகின்றது. அவரவர் சாதகமாகவும், பாதகமாகவும் தமது பார்வைக்கு ஏற்ப பேசுகின்றனர். இது அழகு குணசீலனின் ரணில் குறித்த சமநிலையான பார்வை.
கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம்
போர்க்காலம் தந்த அனுபவங்கள் பல. கொழும்பில் இருக்கும் லொட்ஜ்கள் என்னும் தங்கும் விடுதிகள் அந்தக் காலங்களில் தந்த அனுபவம் இன்னும் அதிகம். அவற்றை மீட்டிப்பார்க்கிறார் தபேந்திரன்.