“”கிழக்கில் நீங்கள் மட்டும் தானா ஒரு எம்.பி”? . என்று கேட்க இல்லை இல்லை என்று சாணக்கியன் மறுத்து தொகையைச்(5) சொன்னதால் சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு செய்திகள் கிடைத்தன.
தமிழ்த்தேசிய அரசியல் வடக்கு கிழக்கை அதற்குரிய பிரதிநிதித்துவ பங்கை, சமத்துவத்தை அங்கீகரிக்காமல் புறக்கணித்து தேர்தல் அரசியலுக்கும், தங்கள் தேவைக்கும் பயன்படுத்தி கொள்கிறது என்பது ஒன்று.
இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையால் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டதற்கு காரணம் உண்டு என்பதும்,
வடக்கில் ஜே.வி.பி./ என்.பி.பி. தமிழரசையும் தாண்டி தன்னை வளர்த்துக்கொண்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சி கிழக்கு வாக்குகளால் தான் இன்னும் வாழ்கிறது என்பதும் மற்றொன்று.
ஆனால் அந்தளவு முக்கியத்துவம் கிழக்கிற்கு வழங்கப்படுவதில்லை.”
