“ஈரான் கடற்படை கப்பல் விவகாரங்கள் குறித்து இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் கடல் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இலங்கை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கொடுப்புக்குள் அடக்குகிறது. கடற்படை பயிற்சியில் நீர்மூழ்கிகளும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மறுபக்கத்தில் பயிற்சி முடிந்த பின்னரும் ஈரானை அடைய இரண்டு -மூன்று நாட்களே தேவையான நிலையில் ஈரானிய கப்பல்கள் பல நாட்களாக கடலில் என்ன செய்தன என்று கேள்வியும் எழுகிறது. அமெரிக்க நீர்மூழ்கிகளுக்கு பயந்து இவை பதுங்கினவா..? இதில் சிக்கலான முடிச்சை அவிழ்க்க வேண்டியது இலங்கை அல்ல இந்தியா. ஆனால் தற்போது இலங்கையின் தலையில் கட்டி விட்டு இந்தியா பார்வையாளராகிவிட்டது. இந்த விவகாரத்தில் எவை பேசப்படவேண்டுமோ அவை எவையும் வெளிப்படையாக பேசப்படவில்லை. இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க அனுமதியளித்திருக்கிறது அமெரிக்கா. அதில் ஒரு பகுதியை தானும் வாங்கலாம் என்று நினைக்கிறது இலங்கை. ஆக, இந்துமா சமுத்திர நாடுகள் பொருளாதாரத்தை காப்பாற்ற ஏகாதிபத்தியத்திற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளன.”
Category: அறிவித்தல்கள்
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
“இலங்கையின் கரையோரத்துக்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வல்லமை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பல் விசாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து அதை அமெரிக்க நீர்மூழ்கி கண்காணித்துக் கொண்டிருந்தது என்பது தெளிவானது. தனது செல்வாக்குப் பிராந்தியம் என்று இந்தியா உரிமை கோருகின்ற — கிரமமாக இந்தியக் கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு நீர்மூழ்கி ஒன்றின் பிரசன்னத்தை கண்டுபிடிக்கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்சிக்கு வந்த நேசநாடொன்றின் போர்க்கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியாவினால் இயலவில்லை என்பது கோடிப்புறத்தில் இந்தியாவின் அதிகாரம் தொடர்பில் அசௌகரியமான கேள்விகளைக் கிளப்புகிறது.”
“ஜல்லிக்கட்டு—கிளர்ச்சி எனும் சூழ்ச்சி”. -தேன்வதையின் சுவையும் கிறக்கமும் தரும் ஓர் நூல்
“இந்தக் கட்டுரை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விமர்சிக்கிறது. அதேசமயம் உணர்ச்சி, எழுச்சியை முழுவதுமாக மறுக்கவில்லை.
கூட்டுத் தீர்மானம் மற்றும் கூட்டு தவறான முயற்சி இரண்டிற்கும் இடையிலான எல்லையை ஆராய்கிறது.
தமிழ் சமூகத்தில் பரவலாக கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்வை விமர்சனமாக இது படிக்கிறது.
இந்நூல் சர்ச்சையையும் விவாதத்தையும் நிச்சயம் உருவாக்கும். ஒரு ஆய்வின் சிறப்பே அது சர்ச்சையையும் விவாதத்தையும் உருவாக்கும் பண்புதான்.”
ஐ.நா. என்றொரு வெள்ளை யானை இன்னும் தேவையா? (மூன்றாவது கண்: X)
“ஒரு அமெரிக்க அரசியல் அமைப்பையும், ஐ.நா. பிரகடனத்தையும் வன்முறைக்குள்ளாக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையாக ஈரான் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் தானே முதலில் தாக்கிவிட்டு தற்பாதுகாப்பிற்காக தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஈரான் மீதான இந்த தாக்குதலை ஆரம்பித்ததே இஸ்ரேல்தான், அதைத்தொடர்ந்துதான் சில நிமிட இடைவெளியில் அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது.”
வாழும் முறையால் வழிகாட்டிய தோழர் நல்லகண்ணு
“மகாத்மா காந்தி இறந்த போது அல்பேர்ட் அயன்ஸ்டீன் “எலும்புடனும் சதையுடனும் இவ்வாறு ஒரு உருவம் உலகில் நடமாடியது என்று சொன்னால் எதிர்காலச் சந்ததிகள் நம்ப மறுக்கும்” என்று சொன்னார். நல்லகண்ணு விடயத்திலும் அதுவே உண்மை.”
சுரேஷ் சாலே: சட்டத்தின் ஆட்சிதனை சூது கவ்வும்..?(மூன்றாவது கண்: IX)
“இதுவரை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. உண்மையில் சுரேஷ் சாலேக்கு இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரிந்து இருந்தால் அது ரவி செனவிரத்ன, ஷானி அபயசேகரவுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு . அதனால்தான் ஜனாதிபதி ஆணைக்குழு அவர்கள் மீது வழக்குதாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் கட்சி அரசியல் சார்புத்தன்மை காரணமாக இவை எவையும் நடக்கவில்லை.”
சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா – 2025 நினைவுப் பேருரையும் கலை இலக்கியக் கூடலும் (பகிர்வுகள் -பகிர்வு – 09)
‘சுனாமி நினைவில் 21 ஆண்டுகள், அனாமிகா நினைவுப் பேருரையும் ஆனந்தன் நினைவுரையும் – 2025’ நிகழ்வு 26.12.2025 அன்று மட்டக்களப்பு சீலாமுனை சின்னராஜா மண்டபத்தில் நடைபெற்றது
அவை குறித்த ஒரு பார்வை.
தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளும் தேர்தல்கள் மூலமான ஆட்சி மாற்றங்களும்
“சமூக ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்துகின்ற இன்றைய நவீன உலகில் கிளர்ச்சிகளை முன்னெடுக்கின்ற இயக்கங்கள் மக்களை அணிதிரட்டி வீதிப் போராட்டங்களின் மூலமாக அரசாங்கங்களை கவிழ்ப்பதில் வெற்றி பெறக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை, தேர்தல்களின் மூலமாக அதிகாரத்துக்கு வரக்கூடிய அரசியல் சக்திகளாக தங்களை மாற்றிக்கொள்ள அவற்றினால் முடியாமல் இருக்கிறது என்பதை அரபு வசந்தம் தொடக்கம் தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள் வரை நிரூபித்து நிற்கின்றன.”
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்
“இன்றைய ஜே.வி.பி வேறு. அது நெகிழ்ச்சியும் உருமாற்றத்தையும் கொண்ட அநுரகுமார திசநாயக்கவின் முகத்தை உடையது. உறுதிப்பாடும் நிதானமும் கொண்ட ரில்வின் சில்வாவின் அகத்தைக் கொண்டது. இந்த இரண்டின் கலவையே தேசிய மக்கள் சக்தி. இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முற்படுவோருக்கு இந்தக் கலவையின் நுட்பத்தையும் சிறப்பையும் தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும்.
‘நெகிழவோ மாறவோ மாட்டோம்‘ என்ற பிடிவாதத்தினால்தான் விடுதலைப்புலிகள் தம்மையே பலியிட நேர்ந்தது. அதற்கான விலையை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் காலத்தை நீடிப்பதும் குறைத்துக் கொள்வதும் தற்பொழுது அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது.
ஆனால், தமிழ்த் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன.’
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி VII. (நிறைவு) -(சொல்லித்தான் ஆகவேண்டும்)-சொல்-52
“எப்போதுமே யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி பூர்சுவா அரசியல் கிழக்கு மாகாணத் தமிழர்களின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் தடையாக இருந்துள்ளமை ‘உள்ளங்கை நெல்லிக்கனியாக’த் தெரிகிறது. இவை கிழக்குத் தமிழர்களின் நலன்களின்மீது கிஞ்சித்தும் அக்கறையில்லாத அதன் யாழ் மேலாதிக்க குட்டி முதலாளித்துவக் குணாம்சத்தையே வெளிப்படுத்துகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களிடையே எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டுமென்றுதான் கிழக்கின் அத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர். காரணம் அப்போதுதான் தமிழர்களுக்குப் பாரபட்சமான தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தடங்கலின்றி மேற்கொள்ளலாம் என்ற வஞ்சக எண்ணமே. கிழக்குத் தமிழர்கள் அவாவி நிற்கும் தனித்துவ அரசியல் மேற்கிளம்பக்கூடாதென்பதே அவர்களது இலக்கு.”
