“அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும் நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.”
Category: செய்திகள்
இது போர்க்களமல்ல; அரசியற் களமே!
“மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய வேண்டும்.”
சத்தியசோதனை: ஜெனிவாவில் மூன்று நாள் மௌனவிரதம்.?(வெளிச்சம்:082)
“தமிழ்த்தேசிய அரசியல் பூகோள அரசியலில் சிக்காமல் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன், சாத்தியமற்ற கனவுகளில் இருந்து விடுபட்டு மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரப்பகிர்வை கோருவதில் ஒருமித்து செயற்படவேண்டும்.
.
இல்லையேல் ,
இருந்ததையும் இழந்தாய் போற்றி….!
இலங்கையராவோம் போற்றி……. …….!”
மண்முனைக் கண்ணகைக்கு வரலாற்றில் ஒரு பெருவிழா….!(வெளிச்சம்:081)
“வீரசைவ வழிபாட்டு முறைகளும், சிறு தெய்வ வழிபாடு என்று ஒதுக்கப்பட்ட சனங்களின், சாமிகளின் இன்றைக்குமான இருப்புகளும் மட்டக்களப்பின் யதார்த்தம். மகுடி கூத்து, நாட்டுக் கூத்து, பள்ளு, வசந்தன் ஆட்டம், கொம்பு விளையாட்டு…. போன்ற பண்டைய அடையாளங்களோடும், பறை மேளம், உடுக்கை…. போன்ற எண்ணற்ற இசைவடிவங்களோடும் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள்.
தாய்வழி சமூகத்தின் எச்சங்களை இன்றுவரை கொண்டுள்ள மட்டக்களப்பில் பெண் தெய்வ பண்புகளும், பெண் நாட்டார் வழக்காறுகளும் நிறைந்து காணப்படுகின்றன.
இச்சனங்களின் வாழ்வியல் விழுமியங்களை தக்கவைக்கும் எத்தனிப்பு அவசியமானது. அந்த மீள் உயிர்ப்பே பிராமணிய கருத்தியலுக்கு எதிரான நமது சமூகத்தின் பன்முக அடையாளங்களை தேடுவதற்கான முயற்சியாகும். நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட இச் சனங்களின் பண்பாட்டில் இருந்துதான் நமது விடுதலைக்கான கூறுகளை முன்னெடுக்க முடியும்….”
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
இனத்துவ உறவுகளும் தேசிய இனப்பிரச்சினையும் இதுகாலவரையில் சிங்கள அரசியல் சமுதாயத்தினாலும் தமிழ் அரசியல் சமுதாயத்தினாலும் கையாளப்பட்ட நடைமுறைகள் காரணமாக இலங்கையின் இனப்பிளவு தொடர்ந்தும் ஆழமானதாகவே இருந்துவருகிறது. இனத்துவ உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கும் தெற்கும் இரு வேறு உலகங்கள் போன்றே காணப்படுகின்றன. அத்தகைய கவலைக்குரிய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும்.
வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம்
“பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உறங்கு நிலையிலேயே தள்ளி வைக்கப்படுகின்றன. சில விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அதற்குரிய அதிகாரிகளோடு நேரடியாக ஆளுநர் களத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைக்குப் பணிப்பதும் நடக்கிறது. அப்படிப் பணித்தாலும் காரியங்கள் எதுவும் உரிய முறையில் நடப்பதாக இல்லை. ஏதோ சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. அல்லது செயலாக்கம் நடைபெறாமல் அப்படியே கை விடப்படுகிறது.”
மாகாணசபைத் தேர்தலும், அநுர-சாணக்கியன் சந்திப்பும்! (வெளிச்சம்: 080)
“உண்மையில் ஜே.வி.பி. / என்.பி.பி. அரசாங்கத்தின் அதிகாரப்பகிர்வு குறித்த வெளிப்படைத்தன்மையும், நிலைப்பாடும் என்ன? மாகாண சபைகளின் மீளப்பெறப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக மீளளிக்கப்பட்டு அதிகாரப்பகிர்வு முழுமையாக்கப்படுமா…..? 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வருமா? அல்லது மாகாணசபை அமைப்பு இல்லாமல் செய்யப்படுமா….? இதற்கான கொழும்பின் பதிலே வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும். மாறாக கொழும்பு, வடக்கு, கிழக்கு அரசியலுக்கு திசைகாட்ட முனைவது வழமையான தோற்றுப்போன அரசியலின் தொடர்ச்சியாகவே அமையும்.”
மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்
“முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சிகளினால் நேபாள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனமையையும் இறுதியில் அவர்களுக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து அவர்களை விரட்டியிருப்பதையும் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிக்குவந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் எடுப்பது அவசியம்.”
பூகோள அரசியல் வலையில் இலங்கை அரசாங்கம்..? (வெளிச்சம்: 079)
“ஜே.வி.யை.விடவும் ஹருணியிடம் மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. அவர் விவகாரங்களை ஒரு கட்சி அரசியல் வாதிக்கு அப்பால் நேர்மையாக கையாள்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதை செய்தால் அவரின் பதவி நாட்கள் விரைவாக எண்ணப்படும். அதற்காக ஜே.வி.பி. அரசியலை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர் கடந்து சென்று ரில்வின் சில்வா அதிகார மையத்தை திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய உளவாளியாகவும், அரசியல் நிர்வாக இயலாமையாகவும் அவரை காட்டும் முயற்சி என்.பி.பி.அரசாங்கத்திற்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும். இது ஜே.வி.பி. பலப்படுத்தாது. இந்த இருதரப்பு இடைவெளி வெளிச்சக்திகள் இலகுவாக உள்நுழையவே வழிவகுக்கும். அது இப்போதே ஆரம்பித்து விட்டது.”
ஜீவனின் கமரா பாலுமகேந்திராவை நினைவூட்டும்…..!
‘நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை.’
