வாக்குமூலம் – 06

இலங்கைத் தமிழருக்கான தீர்வாக அனைவரிடமும் தமிழ் தேசியக்கட்சிகள் கோரும் தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகக் கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவர்கள் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதாக கூறுகிறார்.

மேலும்

யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை 

இலங்கையின் கடந்தகால நிலைமைகளையும் அண்மைய செயற்பாடுகளையும் கொண்டு பார்க்கும் போது அங்குள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குள் தீர்வு வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் சான்றுகளை முன்வைக்கலாம் என்கிறார் அவர்.

மேலும்

உருத்திரகுமாரனின் ஆலம்பழ அரசியல் (காலக்கண்ணாடி – 74) 

இலங்கை தமிழர் விவகாரத்தில் சில அண்மைய நகர்வுகள் குறித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? 

“ஒரு தேர்தலுக்கு தயாரா?” என்று எதிர்க்கட்சிக்கு இலங்கை பிரதமர் சவால் விடுத்துள்ளார். தாம் மிகுந்த பலத்துடன் இருப்பதாக அவர் வாதிடுகின்றார். ஆனால், அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்று சோபையிழந்து காணப்பட்டதாக ஆய்வாளர் சிவலிங்கம் கூறுகிறார். இது அரசாங்க கட்சியின் இறங்குமுகம் என்கிறார் அவர்.

மேலும்

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

இலங்கையின் ஆட்சியாளர்களின் போக்கு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி போவதாக தென்படும் சூழலில் இன்னமும் தமிழர் தரப்பு அதற்கு ஏற்றவாறான வழியில் தமது பயணத்தை அமைக்கவில்லை என்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். தமிழ் அமைப்புக்களின் போக்கு இன்னமும் தமிழரை கீழே தள்ளிவிடும் என்பது அவரது கவலை.

மேலும்

செருப்படியும், தீவைப்பும்..! மெல்லப் பதின்மூன்று இனி: தப்பிப்பிழைக்குமா..? சாகுமா..? காலக்கண்ணாடி – 73 

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இலங்கையிலும் வெளியிலும் தமிழ் அமைப்புக்கள் பிளவுண்டு இருப்பது தமிழருக்கு பெரும் பாதகமாக அமையும் என்று எச்சரிக்கின்ற அழகு குணசீலன் அவர்கள், அதிகாரப் பகிர்வுக்கான புதிய அமைப்பு ஒன்று தேவை என்று பரிந்துரைக்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 05) 

ரெலோவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் நடவடிக்கை முடிவுக்கு வந்திருந்தாலும் அது இந்தியாவை இலங்கைக்கு எதிராக தமிழர் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கச் செய்வதற்கு பதிலாக இந்தியா கொடுக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்கச் செய்துள்ளது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

13வது திருத்த நடைமுறையின்போது மலையகத் தமிழருக்கு ஏற்பட்ட அநீதியை இந்தியாவுக்கு விளக்க வேண்டும்

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் மலையக தமிழர் விடயங்கள் உள்வாங்கப்படாதது குறித்து விமர்சித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, 13 திருத்த விவகாரத்தில் மலையக தமிழர் புறக்கணிக்கப்பட்டமை குறித்து இந்தியாவுக்கு கூற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும்

முதற்கோணல் முற்றும் கோணல்! (காலக்கண்ணாடி 72)

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் நடந்துகொண்ட விதம் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறார் அழகு குணசீலன். தமிழ்த்தேசிய அகராதியில் கூட்டு என்பது குழிபறித்தல் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 23)

புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த இயக்கத்தில் பல கொலைகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து தளத்தில் நடந்த மாநாடு ஒன்று குறித்து இங்கு விபரிக்கிறார்.

மேலும்

1 61 62 63 64 65 101