அண்மைக்காலமாக அமெரிக்கா புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக அதிகமாக வரும் செய்திகள் மத்தியில் அதன் பின்னணியை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
Category: அரசியல்
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்தப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் குறித்த விவகாரம் பற்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு தீர்வு யோசனையை முன்வைத்துள்ளது. அது குறித்த அந்த அமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களின் தகவல்கள்.
தந்தை செல்வா இப்படிச் சொன்னாரா?
தந்தை செல்வா அவர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் என்ற வகையில் அண்மைக்காலமாக சில பதிவுகள் முகநூலிலும் வேறு சில சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன. அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும் தந்தை செல்வாவின் சிந்தனை எத்தகையது என்பது குறித்தும் ஆராய்கிறார் மூத்த ஊடகவியலாளரான எஸ். எம். வரதராஜன்.
கல்முனை வடக்கு நிலைமை: காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு! (காலக்கண்ணாடி – 35)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், அவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. அவரவர் தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களது எதிர்பார்ப்பும் அதுவே.
13வது திருத்தத்தின் தேவையை வலியுறுத்தும் கடந்தகால நிகழ்வுகள்
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான கலுபகே ஒஸ்ரின் பெர்னாண்டோ அவர்கள், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்புச் செயலர், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பல நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியவர். இலங்கையின் அரச நிர்வாகம் குறித்த பரந்த அறிவும், அனுபவமும் உள்ள அவர் இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் குறித்த வரலாற்றை நன்கு அறிந்தவர். இங்கு 13வது திருத்தம் இலங்கையில் சந்தித்த சவால்களை அவர் ஆராய்கிறார். தமிழில் வி. சிவலிங்கம்.
இணக்க அரசியலில் இருக்கின்ற இடக்கும் முடக்கும்! (காலக்கண்ணாடி 34)
தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் உறுப்பினர்களில் சிலர் இணக்க அரசியல் குறித்துப் பேசுவதை எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றுள்ள அழகு குணசீலன், இணக்க அரசியலை முன்னெடுக்க ஏதுவான ஒரு சக்தியாக புதிதாகத் தோன்றியுள்ள “அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை” சமாந்தரமாக வரவேற்கிறார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் தூரம் அதிகம்தான் என்றாலும் அது அடையப்பட இணக்க அரசியல் உதவலாம் என்கிறார் அவர்.
தமிழர் போராட்டத்தை ஏன் சீனா, ரஷ்யா, கியூபா ஆதரிப்பதில்லை? (சொல்லத் துணிந்தேன்—68)
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ் இனத்தின் போராட்டத்துக்கு அமெரிக்க போன்ற முதலாளித்துவ நாடுகள் ஆதரவு தந்தாலும் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற கருத்தை ஆராய்கிறார் கோபாலகிருஸ்ணன்.
என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)
அரச எதிர்ப்பு, அரச ஆதரவு அரசியல் இங்கு தமிழர் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், சரியானதை ஏற்று, பிழையானதை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்து அதனூடாக ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘மழுப்பவேண்டாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!’ – (காலக்கண்ணாடி – 33)
சமகால அரசியல் சந்திப்புக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியபோது, அங்கு இளைஞர்கள் கேட்ட கேள்விகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்குக்கும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்தியதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ் இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம் என்று வாதிடுகிறார் அவர்.
தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா?
நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மாகாண சபைத்தேர்தல் குறித்த பேச்சுக்களும் எழுந்துள்ளன. இங்கு கிடப்பில் போடப்பட்ட அந்த வாக்குறுதிகள் சில குறித்து ஞாபகமூட்டும் எழுவான் வேலன், மக்களுக்காக பேசுகின்றார்.
