எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதாரத்தின் மோசமான நிலை குறித்து ஆராய்ந்து வருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள், இலங்கையின் பெருந்தோட்டத்துறை செயற்திறன் அற்றது என்றும் அங்கு தேயிலை பயிரிடப்படுவது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
மாற்று அரசியலின் நோக்கம் (சொல்லத் துணிந்தேன்-94)
மாற்று அரசியலுக்கான அவசியம் குறித்து பேசிவருகின்ற கோபாலகிருஷ்ணன் அவர்கள், இலங்கை அரச கரும மொழி விவகாரத்தை தமிழர் தரப்பு எவ்வாறு தவறாக கையாண்டது என்று நினைவுகூருகின்றார்.
சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 12))
தனது போராட்ட கால அனுபவங்களை பேசும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு வெலிக்கடை சிறை தாக்குதல் மற்றும் மட்டக்களப்பு சிறை உடைப்பு ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.
போர்தின்றவாழ்வும் எச்சங்களும்…..! ஆறாம்நிலம் பேசும் வாழ்வியல் ஜதார்த்தமும் ……..!! (காலக்கண்ணாடி – 59)
இலங்கையின் போருக்குப் பின்னரான வாழ்வைப் பற்றிய படங்கள் இதுவரை வந்தது மிகவும் குறைவு. அவற்றிலும் ஒருதலைப்பட்சமாக பிரச்சினைகளை பார்க்கும் படங்களே அதிகம். ஆனால், போருக்கு பின்னரான வாழ்வு குறித்த யதார்த்தத்தை “ஆறாம்நிலம்” என்ற படம் அழகாக பேசுவதாக கூறுகிறார் அழகு குணசீலன். காணாமல் போனவர் குடும்பங்கள் பற்றி அது பேசுகின்றது.
அங்கிருந்து வந்தவர்கள் (சிறுகதை)
போர் மற்றும் அதன் அழிவுகளை மையப்படுத்தி பல இலக்கிய படைப்புக்களை பலரும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஆக்கங்களில் பேசப்படாத இப்படியான பக்கங்களும் போரில் நடந்திருக்கின்றன. அதனால், பாதிக்கப்பட்ட அப்பாவி இதயங்களும் அமைதியாக அழுதுகொண்டிருக்கின்றன. செங்கதிரோனின் முற்றிலும் கற்பனை என்று சொல்ல முடியாத ஒரு கதை இது.
அனுபவம் என்பது அறிவு!: என்.செல்வராஜாவின் நூலகவியல் அனுபவம் ஒரு அறிவுக்களஞ்சியம்!!
நூலகவியலாளர் என்.செல்வராஜா இலங்கைத் தமிழ்ச் சமூகம் மாத்திரம் அன்றி உலகத்தமிழர்களாலும் போற்றப்பட வேண்டிய ஒருவர். நூலகவியல் குறித்த அவரது அனுபவம் எமது சமூகத்துக்கு ஒரு களஞ்சியமாக திகழ வேண்டியது. இது அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு த.ஜெயபாலனால் எழுதப்பட்டது. பிறந்த தினத்தில் அவருக்கு அரங்கத்தின் வாழ்த்துகளும் சேர்கின்றன.
கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு (படுவான் திசையில்)
மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் பல இடங்களில் கசிப்பு (சட்டவிரோத மதுபான) உற்பத்தி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இவை குறித்து படுவான் பாலகன் அனுப்பிய குறிப்பு இது. உரியவர்களின் கவனத்திற்கு…
முகமூடிகள் (கவிதை)
இது முகமூடிகளின் காலம். எல்லாரும் அணிந்திருப்பது முகமூடி. முகமூடி இல்லாமல் இருந்து, இந்த முகமூடிகளால் மேடையில் இருந்து இறக்கப்பட்டவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. சிவரெத்தினத்தின் கவிதை.
கல்வியில் வடக்கு, கிழக்கு பின்னடைய காரணம் என்ன? (படுவான் திசையில்…)
இலங்கையைப் பொறுத்தவரை அங்கு ஒப்பீட்டளவில் அண்மைய தேர்வுகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பின்னடைவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்கிறார் படுவான் பாலகன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 13)
தடுமாறும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து பேசிவருகின்ற அ.வரதராஜா பெருமாள் அவர்கள், அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியவை குறித்து இங்கு விபரிக்கிறார்.