தகப்பன் சாமிக்களை கட்டுப்படுத்துங்கள் (வாக்குமூலம்-18) 

அண்மைக்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கட்டுப்பாடில்லாமல் சில உறுப்பினர்கள் பொறுப்பற்றுச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இவர்களை கட்சித்தலைமை கட்டுப்படுத்தாவிட்டால், தமிழ் மக்கள் பெரும் அவலங்களை சந்திக்கும் நிலைமையை அது ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.

மேலும்

படுவான் ஒரு நாள் எழுவான்! (காலக்கண்ணாடி – 89) 

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அழகு குணசீலன் எழுதும் குறிப்பு இது. அந்தப்பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இந்த நியமனத்தை வரவேற்கிறார் குணசீலன். செல்வராஜா அவர்களின் அனுபவமும், கல்வியறிவும் கிழக்குப் பல்கலைக்கழகத்த்தின் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும் என்பது அவரது கருத்து.

மேலும்

முட்டையிடும் ஆச்சரியங்கள்!  

எஸ்.வி.ஆர் என்ற ஆளுமைக்கு தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் தேவையில்லை. புகுமுக எழுத்தாளனான அகரன் அவரை எவ்வாறு பார்க்கிறார் என்பதே இந்தக் குறிப்பு. இது ஆளுமைகளுக்கான குறிப்பு அல்ல, ஒரு மிகப்பெரிய ஆளுமையை சாதாரணமானவர்கள் தெரிந்து, புரிந்துகொள்வதற்கான குறிப்பு.

மேலும்

வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி

இல்லாமை இலங்கை எங்கிலும் தொடர்கிறது. ரணில் உட்பட எவராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை. வெளிச்சக்திகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இது ஒரு நவீன வெளிநாட்டு ஆக்கிரமிப்பு முயற்சி என்கிறார் அவர்.

மேலும்

இதயம் பத்திரம் – இறுதிப்பகுதி 

யோ.அன்ரனி எழுதும் இந்தத்தொடரின் இறுதிப் பகுதி இது. இங்கு அவர் மனப்பதகளிப்பு எந்த வகையில் நமது இதய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதற்கான காரணங்கள் என்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பவை குறித்து ஆராய்கிறார்.

மேலும்

தமிழ் இளைஞர்கள் மற்றும் மக்களின் தியாகங்களை புறக்கணித்து அரசியல் விளையாடும் தமிழ் தலைமைகள் (வாக்குமூலம்-17) 

தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்போராட்ட இயக்கங்களின் இளைஞர்கள் ஆகியோர் தமிழர் உரிமைகளுக்காக செய்த தியாகங்களை புறக்கணித்துக்கொண்டு, தமது சுய அரசியல் லாபங்களுக்காக சித்து விளையாட்டுக்களை செய்வதை தமிழ் தலைமைகள் இன்னமும் தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

இலங்கையின் யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரிய வைக்க அரசியல் தலைமைகள் இன்னமும் தயாரில்லை 

இலங்கையில் நாடாளுமன்ற பதவி நிலைகள் மற்றும் பொறுப்புகளை மாற்றிய பின்னரும் இன்னமும் நெருக்கடி நிலை குறையவில்லை என்று சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன், நாட்டின் யதார்த்த நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் இன்னமும் முன்வரவில்லை என்கிறார். இது மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என்பது அவர் கவலை.

மேலும்

இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை தாயே?

இலங்கையில் கண்ணகி வழிபாட்டின் சடங்குகள் நடக்கும் காலம் இது. குறிப்பாக மட்டக்களப்பில் பல இடங்களில் பத்ததிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன. அதனை முன்னிட்டு, துலாஞ்சனன் எழுதும் ஒரு குறிப்பு இது. மீட்கப்பட்ட சிலைகளின் பின்னணி குறித்து இதில் அவர் பேசுகிறார்.

மேலும்

வைகாசு – “நாங்கள் சொல்வதைத் கேட்காவிட்டால், எங்கள் ஏகபோகத்தை ஏற்காதுவிட்டால் அவர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்” (காலக்கண்ணாடி 88) 

வைகாசி மாதம் இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமானது. பல முக்கிய சம்பவங்கள் அந்த மாதத்திலேயே நடந்துள்ளன. ஆனால், பெரும்பாலானவை படுகொலைகள். அவை இலங்கை தமிழர் அரசியலில் பெருத்த பின்னடைவுக்கு காரணமாகியுள்ளன. ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்! 

மாஸ்டர் சிவலிங்கம் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் தலைசிறந்த சிறார் கதை சொல்லி மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். அண்மையில் காலமான அவர், வில்லுப்பாட்டுக்கலையை இலங்கையில் அறிமுகம் செய்தவர். பல்துறைக் கலைஞரான அவர் பற்றி செங்கதிரோன் எழுதும் நினைவுக்குறிப்பு இது.

மேலும்

1 69 70 71 72 73 152